Just In
- 6 hrs ago
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- 9 hrs ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 11 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
- 12 hrs ago
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்குகள் ஏற்றுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
Don't Miss
- News
எதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி
- Finance
நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Technology
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்கள் கைகளில் உள்ள குறியீடுகள் உணர்த்தும் வாழ்க்கை ரகசியம் என்ன?
உங்களுக்கு கைரேகை மீது நம்பிக்கை இருந்தால் உங்கள் கையில் உள்ள ஒவ்வொரு கோட்டிற்கும், ஒரு ரேகைக்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள். கையில் உள்ள ஒவ்வொரு கோட்டிற்கு ஒரு நோக்கமும் அவசியமும் இருக்கும். இதில் சில குறியீடுகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடும்.
கைரேகை ஆய்வுகளின் படி உங்கள் கைகளில் உள்ள ஐந்து குறியீடுகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடும். இந்த ஐந்து அறிகுறிகளில் ஏதெனும் ஒன்று உங்கள் கையில் இருந்தாலும் அது உங்களுக்கு அதிர்ஷ்டம்தான். இந்த ஒவ்வொரு குறியீடும் ஒருவரின் குணநலன் மற்றும் ஆளுமை பற்றி விளக்கும். மீன், கொடி, ஸ்வஸ்திக், தாமரை மற்றும் கோவில் போன்ற குறியீடுகள் அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதப்படுகிறது.

மீன் குறியீடு
கையில் இருக்கும் மீன் குறியீடு மகிழ்ச்சிக்கான குறியீடாக அறியப்படுகிறது. இது மிகவும் அபூர்வமான ஒரு குறியீடாகும். ஒருவேளை இந்த குறியீடு ஒருவர் கையில் இருந்தால் அவர்களை சுற்றி மகிழ்ச்சியும், வெற்றியும் எப்பொழுதும் இருக்கும். மேலும் இந்த மீன் சின்னம் வெளிநாட்டு பயணம், தகுதி மற்றும் மகத்தான செல்வத்தை குறிக்கும். இந்த குறியீடு கையில் உள்ளவர்கள் பெருந்தன்மை மிக்கவர்களாகவும், தானம் அதிகம் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

கொடி குறியீடு
கொடி குறியீடு இருப்பதும் அதிர்ஷ்டத்தின் அறிகுறி ஆகும். இந்த குறியீடு ஒருவர் கைகளில் இருந்தால் அவர்கள் மிகவும் புகழ்பெற்றவர்களாக இருப்பார்கள். புகழ் இவர்களுக்கு எந்த வழியில் வேண்டுமானாலும் வரலாம், அவர்கள் எந்த கலைத்துறையில் பங்கேற்றாலும் உலக அளவில் புகழ் பெறுவார்கள். இந்த நபர்கள் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டங்களில் வெற்றிகரமாக செயல்படுவார்கள்.

ஸ்வஸ்திக் குறியீடு
தங்கள் கைகளில் ஸ்வஸ்திக் குறியீடு உள்ளவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அவர்களின் கடின உழைப்பும் , அர்ப்பணிப்பும் இவர்களை வாழ்க்கையின் உயரத்திற்கு அழைத்து செல்லும். அதேநேரம் ஸ்வஸ்திக் குறி விதி கோட்டின் மேல் இருந்தால் அவர்கள் அதீத திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
MOST READ: ஆண்கள் தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் நீடித்து இருக்க இவற்றை சாப்பிட்டாலே

தாமரை குறியீடு
தாமரை என்பது செல்வத்தின் கடவுளான லக்ஷ்மியுடன் தொடர்புடைய ஒன்று எனவே தங்கள் கைகளில் தாமரை குறியீடு உள்ளவர்கள் அளவற்ற செல்வத்தை பெறக்கூடியவர்கள். தாமரை குறியீட்டை கைகளில் பெற்றவர்கள் மனதளவில் தூய்மை ஆனவர்களாகவும், ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் ஆசி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர்களாகவும், அதில் குருவாகவும் திகழ்வார்கள்.

கோவில் குறியீடு
கைகளில் கோவில் குறியீடு உள்ளவர்கள் தூய்மை ஆனவர்களாகவும், குரு ஸ்தானத்திலும், சீர்திருத்தவாதிகளாகவும், அறிவார்ந்த நபர்களாகவும் இருப்பார்கள். இந்த அடையாளம் பெரும்பாலும் வியாழன் மேட்டின் உச்சியில் காணப்படுவதோடு அரிய அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்த அடையாளம் கைகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களாக இருப்பார்கள்.