For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்று ஒருவேளை சோற்றுக்கே வழியில்லை... இன்று 400 கார்களுக்கு உரிமையாளர்! #RealLife

அன்று ஒருவேளை சோற்றுக்கு வழியில்லை... இன்று 400 கார்களுக்கு உரிமையாளர்! #RealLife

|

ரமேஷ் பாபு! இவரை பலர் அறிந்திருக்க வாய்ப்புண்டு. இவரது பெயர் தெரியாத நபர்களுக்கும். அட, அதான்ப்பா ரோல்ஸ் ராய்ஸ் கார் எல்லாம் வெச்சுருக்காரே அந்த பார்பர்..." என்று சொன்னால் கண்டிப்பாக இவரை தெரியும். கார்கள் என்றால் இவருக்கு மிகவும் பிரியம். இவரது அலுவலகத்தில் மினியேச்சர் வகையிலான பல கார்களின் கலக்ஷன் வைத்திருக்கிறார்.

மினியேச்சராக மட்டுமல்ல, இவரது அலுவலகம் மற்றும் வீட்டுக்கு வெளியேயும் அந்த கார்கள் நிஜமாக கம்பீரமாக நின்றுக் கொண்டிருக்கும். இதில் பல கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வராதவை என்பது குறிப்பிடத்தக்கது.

பலருக்கு இவர் மீது பொறாமை ஏற்படலாம். அதெப்படி... சிகை அலங்காரம் செஞ்சு ஒரு ஆளு இவ்வளோ பெரிய ஆள் ஆக முடியும் என்று. இதே நாட்டில் தான் பெட்ரோல் பங்கில் வேலை செய்தவர் நாட்டின் முதல் பணக்காரராகவும், டீ விற்றவர் பிரதமாராகவும் வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

வெற்றி அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. ரமேஷுக்கும் அப்படி தான். இவரது இளம் வயதில் நிறைய சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார். ரமேஷை ஒரு பணக்காரராக மட்டுமே அறியும் பலருக்கும், இவரது அந்த ஏழ்மை, வறுமை காலம் பற்றி தெரியாது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தந்தை மரணம்!

தந்தை மரணம்!

ரமேஷ் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். தனது சிறு வயதிலேயே (1979ல்) தந்தையை பரிக்கொடுத்தவர். தந்தையின் மறைவுக்கு பிறகு இவரது குடும்பம் கடுமையான வறுமையில் வாடியது. பிரிகேட் சாலையில் (Brigade Road) இவரது தந்தை விட்டு சென்ற சலூன் இருந்தது. அதை ரமேஷின் மாமா பார்த்துக் கொண்டார். தினமும் அதில் வரும் வருமானத்தில் இருந்து ஐந்து ரூபாய் தருவார்.... என்கிறார் ரமேஷ்.

உணவு, உடை!

உணவு, உடை!

தானும், தனது அம்மா மற்றும் பாட்டி ஒரு மனிதனின் அடிப்படை தேவையான உணவு மற்றும் உடைக்கே மிகவும் கஷ்டப்பட்ட காலம் அது என்கிறார். அப்போது ரமேஷின் தாயார் வீட்டு வேலைகளுக்கு சென்று வந்துள்ளார். அவருக்கு ஊதியமாக நாற்பது, ஐம்பது ரூபாய் தான் கிடைக்கும். அதை வைத்து தான் என் தாய், எனது படிப்பு, எங்கள் வீட்டு செலவு, உணவு மற்றும் உடை என அனைத்திருக்கும் செலவு செய்து வந்தார் என கூறியிருக்கிறார்.

வருடம் ஒருமுறை!

வருடம் ஒருமுறை!

வருடம் ஒரு முறை தான் புதுத்துணி. மற்றபடி பழைய உடைகள், பள்ளி சீருடை என சமாளித்து வந்தேன். ஒருமுறை என் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் எனது ட்ரவுசர் கிழிந்திருக்கிறது என கூறி வீட்டுக்கு அனுப்பிவிட்டார். ஆனால், புதிய சீருடை வாங்க எங்களிடம் பணமில்லை.

ஒருவேளை...

ஒருவேளை...

ஒரு நாளுக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிடும் எங்கள் வீட்டில் அப்போது புதிய சீருடை வாங்க பணமில்லை. அந்த ஒருவேளை சாப்பாடும் அம்மா வேலை பார்த்து வரும் வீட்டில் இருந்து எடுத்து வருவது தான். வருடத்திற்கு ஒரு முறை நல்ல சாப்பாடு கிடைக்கும். அந்த நாள் தான் எங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிரம்பியிருக்கும் என்கிறார் ரமேஷ்.

13 வயதில்...

13 வயதில்...

தனது 13வது வயதில் பேப்பர் போடும் வேலையில் சேர்ந்தார் ரமேஷ். படித்துக் கொண்டே வீட்டின் வறுமைக்கு உதவ வேண்டும் என சிறுசிறு வேலைகள் செய்து வந்துள்ளார். பிறகு, பி.யூஸி (நமது மாநிலத்தில் +2 போல) படித்து முடித்த பிறகு அப்பாவின் சலூனில் கவனம் செலுத்த துவங்கினார்.

சேமிப்பு!

சேமிப்பு!

அந்நாள் வரை சேமித்து வைத்திருந்த பணத்தை கொண்டு தனது சலூனில் சீரமைப்பு வேலைகள் செய்தார். இரண்டு நபர்களை வேலைக்கு சேர்த்தார். தொழில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். நிச்சயம் வெல்ல வேண்டும் என்ற விடா முயற்சியுடன் செயற்பட்டார். அப்போது ரமேஷ்க்கு சிகை திருத்தம் செய்ய தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள்!

ஒரு நாள்!

ஒரு நாள் வேலையாட்கள் வருவதற்கு முன்னரே ஒரு நபர் சிகை அலங்காரம் செய்துக் கொள்ள சலூனுக்கு வந்துள்ளார். ரமேஷ் தனக்கு அவ்வளவாக தெரியாது என கூறிய போதும். பரவாயில்லை என சிகை திருத்தம் செய்ய கூறியிருக்கிறார். எனது திருத்தம் கண்டு பிடித்துப் போன அந்த நபர் இரண்டு மடங்கு பணம் கொடுத்து திருப்தியுடன் சென்றார். அவர் இன்று வரை எனது கஸ்டமராக இருந்து வருகிறார் என பெருமையுடன் கூறுகிறார் ரமேஷ்.

ஒரே வருடத்தில்...

ஒரே வருடத்தில்...

தனக்கு தெரிந்த மாதிரியும், சில புதுவிதமாகவும் சிகை அலங்காரம் செய்ய துவங்கினார் ரமேஷ். ஒரே வருடத்தில் இவரது இயற்கை திறமையால் பன்மடங்கு வளர்ச்சி கண்டார் ரமேஷ். வெளிநாடுகளுக்கு சென்றெல்லாம் சிகை திருத்தம் செய்து திரும்பியுள்ளார் ரமேஷ். முதல் முறையாக சலூன் சம்பாத்தியத்தில் இருந்து தனது முதல் காரை வாங்கினார் ரமேஷ்.

கார் ஆவல்!

கார் ஆவல்!

ரமேஷ்க்கு கார்கள் மீது அதிக ஆவல் இருந்தது. எப்போதுமே கார் வாங்க வேண்டும் என்ற ஆசைக் கொண்டிருந்தார். முதல் முதலாக ரமேஷ் தனது சொந்த உபயோகத்திற்காக வாங்கிய கார் மாருதி வேன். அதையும் லோனில் தான் வாங்கியுள்ளார். பிறகு மெல்ல, மெல்ல ரமேஷின் சலூன் பன்மடங்கு உயர்ந்தது. தனது தொழில் சிறந்து விளங்க துவங்கினார் ரமேஷ். இந்திய அளவில் பிரபலமாக அறியப்பட்டார்.

மெர்சிடிஸ்!

மெர்சிடிஸ்!

2000-களில் மெர்சிடிஸ் வாங்க திட்டமிட்டுக் கொண்டிருந்தார் ரமேஷ். பிறகு ஒரு வங்கிக்கடன் மூலமாக அதை வாங்கினார். அப்போது இருந்த வங்கிக் கடன் விகிதத்திற்கு யாரும் அப்படி ஒரு கார் வாங்க அச்சம் கொள்வார்கள். ஆனால், ரமேஷ் துணிச்சலுடன் வாங்கினார். அடுத்த ஓராண்டிலேயே தொழில் சூடுபிடித்தது மேன்மை காண, தனது இரண்டாவது மெர்சிடிஸ் வாங்கினார் ரமேஷ்.

டூர் - டிராவல்ஸ்!

டூர் - டிராவல்ஸ்!

இப்போது இந்திய அளவில் ரமேஷ் டூர்ஸ் - டிராவல்ஸ் என்ற பெயர் மற்றுமொரு தொழில் செய்து வருகிறார் ரமேஷ். இவரிடம் நானூறுக்கும் மேற்பட்ட கார்கள் இருக்கின்றன. பி.எம்.டபிள்யூ, மெர்சிடிஸ், ஜாகுவார் என உயர்ரக கார்கள் பலவன வைத்துள்ளார் ரமேஷ். இந்த பட்டியலில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்டும் அடங்கும்.

மெர்சிடிஸ் மேபாச் எஸ் 600 எனும் ஆடம்பார காரை பெங்களூரில் வைத்திருக்கும் மூன்றாவது நபர் ரமேஷ். ஓட்டுனர் இல்லை எனிலும், தானாக அனைத்து கார்களை ஓட்டும் அளவிற்கு திறமை கொண்டிருக்கிறார் ரமேஷ்.

மனைவியின் நகை!

மனைவியின் நகை!

2011ல் விலை உயர்ந்த அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கும் போது, அரசாங்கம் அதிகப்படியான வரி விதித்தது. பலரும் அந்த காரை விற்றுவிட கூறினார்கள். ஆனால், நான் எனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து ஒன்றைரை ஆன்டுகள் கஷ்டப்பட்டு அந்த காரை வாங்கினேன் என்கிறார் ரமேஷ்.

இந்தியா முழுக்க!

இந்தியா முழுக்க!

ரமேஷ் டூர்ஸ் - டிராவல்ஸ் நிறுவனம் சென்னை மற்றும் டெல்லியில் இயங்கி வருகிறது. இதை ஐதராபாத் மற்றும் விஜயவாடா விருவாக்க பணியில் ஈடுபட்டு வருகிறார். தனது நிறுவனத்தை இந்திய அளவில் பெரிதாக வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்பது குறிக்கோள் என்கிறார் ரமேஷ்.

எங்கே இருப்பர்?

எங்கே இருப்பர்?

இவ்வளவு பிஸியாக இருக்கும் ரமேஷை காண வேண்டுமா? மிகவும் எளிதான காரியம் தான். ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.150-க்கு இவரது சலூனில் சிகை திருத்தம் செய்துக் கொண்டிருப்பார், அங்கே சென்றால் மிக எளிதாக காணலாம். விடா முயற்சி கண்டிப்பாக ஒரு நாள் பெரும் வெற்றியை தரும் என்பதற்கு சிறந்த உதாரணம் ரமேஷ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Sad Story of The Richest Barber of India, Ramesh Babu!

The Sad Story of The Richest Barber of India, Ramesh Babu!
Desktop Bottom Promotion