உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கற்பழித்த கணவனுக்கு 9 ஆண்டு சிறை!

Posted By:
Subscribe to Boldsky

திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைத்துக் கொண்டாலும், அது இருவரும் உடன்பட்டு நடந்தால் அது கற்பழிப்பு அல்ல. திருமணம் ஆகி கணவன், மனைவியாக இருந்தாலுமே கூட, மனைவியின் சம்மதம் இன்றி உடலுறவு வைத்துக் கொண்டால்... அது கற்பழிப்பு தான் என உலகின் பல நாடுகள் சட்டம் வகுத்துள்ளன.

அதை மீறினால், அந்த கணவன்மார்களுக்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் அளவிற்கு சட்டங்கள் வலுவாக இருக்கின்றன. இது போல பல கைது சம்பவங்கள் முன்னரே நடந்துள்ளன.

ஆனால், ஒன்பது ஆண்டுகள் வரையிலும் கூட சிறை தண்டனை கொடுக்கப்படலாம் என்பதற்கு சான்றாக இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இங்கிலாந்து!

இங்கிலாந்து!

இங்கிலாந்து நியூகேஸ்ட்டில் எனும் பகுதியை சேந்த பெண்மணி தனது கணவன் தன்னை கற்பழித்ததாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளார். அதுவும் அவருக்கே தெரியாமல் நடந்தது இந்த பாலியல் பலாத்காரம் என்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

10 ஆண்டுகளாக!

10 ஆண்டுகளாக!

இந்த பாலியல் பலாத்காரம் ஏதோ ஓரிரு முறை நடந்தது இல்லை. கிட்டத்தட்ட கடந்த பத்து வருடமாக அந்த கணவர், அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதும் அந்த பெண்மணி அறியாத சூழலில்.

செல்போன் படம்!

செல்போன் படம்!

தன் மனைவி மயக்க நிலையில் உறங்கிக் கொண்டிருக்கும் போதெல்லாம், அவரை கற்பழித்து, அதை படமாக எடுத்து தனது மொபைலில் சேமித்து வைத்துள்ளார் அந்த கணவன். எதிர்பாராத தருணத்தில் இதை அந்த பெண்மணி கண்டறிந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த மார்ச்...

கடந்த மார்ச்...

கடந்த மார்ச் தான் இதை கண்டறிந்துள்ளார் அந்த பெண்மணி. எப்போதும் தனது மொபலை தன்னுடனே வைத்துக் கொள்ளும் பழக்கம் கொண்டிருந்த அந்த கணவர், ஒரு நாள் அலுவலகம் செல்லும் போது அதை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டார்.

சாதாரணமாக அதை எடுத்துப் பார்த்த போது, அதில் தான் உறங்கிக் கொண்டிருக்கும் போது கணவர் தன்னை பலாத்காரம் செய்து அதை பதிவு செய்திருந்த வீடியோக்களை கண்டு அதிர்ந்தார் அந்த பெண்மணி.

புகார்!

புகார்!

அதன் பிறகு காவல் நிலையத்தில் தன் கணவர் மீது புகார் அளித்தார் அந்த பெண்மணி. மேலும், அதை அலுவலகத்தில் இருந்த கணவனுக்கு போன் செய்தும் கூறியுள்ளார்.

இதன் வீரியத்தை உணர்ந்த அந்த கணவன், நேரடியாக காவல் நிலையம் சென்று சரணடைந்துவிட்டார்.

மது!

மது!

இரவில் மது அருந்திவிட்டு ஆழ்ந்து உறங்கும் பழக்கம் கொண்டுள்ள மனைவியின் பழக்கத்தை தனக்கு சாதகமாக அந்த கணவன் பயன்படுத்திக் கொண்டார் என கூறப்படுகிறது.

இதன் காரணத்தால் அந்த நபருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Man Was Arrested, Who Raped His Wife While She was Sleeping!

The Man Was Arrested, Who Raped His Wife While She was Sleeping!
Subscribe Newsletter