இந்த கோவிலில் ஓர் இரவு படுத்து உறங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டுமாம்!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவில் மூட நம்பிக்கைகளுக்கு பஞ்சமா என்ன? நம் வாழ்வில் ஆன்மிகம் என்ற பெயரில் அன்றாடம் நாம் பின்பற்றும் பல விஷயங்கள் காலங்களின் மாற்றங்களில் மருவி, ஏன்? எதற்கு? பின்பற்றப்பட்டது என அறியாமலேயே, அதன் உண்மை வடிவம் மறந்து வெறும் மூட நம்பிக்கையாக பின்பற்றி வருகிறோம்.

கோவிலில் மரத்தை சுற்றி வந்தால் குழந்தை வரம் கிடைக்கும், சில கோவில்களை சுற்றி வந்தால் கருத்தரிப்பார்கள் என பல விஷயங்கள் நாம் கேட்டிருப்போம்.

ஆனால், இங்கே இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் ஒரு கோவில் தளத்தில் படுத்து உறங்கினால் கர்ப்பம் ஆவார்கள் என ஒரு நம்பிக்கை பரவலாக நம்பப்பட்டு வருகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எங்கே?

எங்கே?

இந்த கோவில் சிமாஸ் எனப்படும் ஒரு கிராமத்தின் அருகே மாண்டி எனும் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இங்கே சிம்சா எனும் பெண்கடவுள் மூலக் கடவுளாக வணங்கப்பட்டு வருகிறார். சிம்சா தேவியை சந்தன் தத்ரி என்றும் அழைக்கின்றனர்.

பிரபலமான கோவில்!

பிரபலமான கோவில்!

இந்த கோவில் சுற்றுவட்டார இடங்களில் பிரபலமான இடமாகும். இங்கே இமாச்சல பிரதேசம் மட்டுமின்றி, அதை சுற்றி இருக்கும் மாநில மக்களும் வந்து செல்கின்றனர். பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் சேர்ந்த குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் இந்த கோவிலுக்கு நவராத்திரியில் குழந்தை வரம் வேண்டி வந்து செல்கின்றனர்.

நவராத்திரி!

நவராத்திரி!

மிகுதியான எண்ணிக்கையில் பல தம்பதிகள் நவராத்திரி நாட்களில் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். நவராத்திரி நாட்களில் இங்கே சலிந்திரா (கனவு) எனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. குழந்தை இல்லாத பெண்கள் இந்த கோவில் தளத்தில் ஒரு நாள், இரவு முழுக்க படுத்திருந்து சென்றால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

கனவு!

கனவு!

இங்கே பெண்கள் முழு நம்பிக்கையுடன் படுத்து உறங்கும் போது, கனவில் சிம்சா தேவி தோன்றுவார், தோன்றி பெண்களுக்கு குழந்தை வரம் தருவர் என நம்புகின்றனர். பெண்கள் கனவில் மலர், பழங்கள் பெறுவது போன்ற நிகழ்வுகள் வந்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் எனவும் ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.

நம்பிக்கை!

நம்பிக்கை!

கொய்யா கனி பெறுவது போன்ற கனவு வந்தால் ஆண் குழந்தை என்றும், வெண்டைக்காய்ப் பெறுவது போன்ற கனவு வந்தால் பெண்கள் குழந்தை என்றும் இங்கே ஒரு நம்பிக்கை பரவலாக இருந்து வருகிறது.

வேறு அறிகுறிகள்...

வேறு அறிகுறிகள்...

கல், மரம், இரும்பு போன்ற பொருட்கள் பெறுவது போன்ற கனவுகள் வந்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது என்றும் நம்புகின்றனர்.

ஒருவேளை ஒரு பெண், குழந்தை பாக்கியம் கிடைக்காது என்ற நிலை உணர்ந்து கோவிலிலேயே தொடர்ந்து தங்கினால் அவர்களது உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றும், அப்போது அவர்கள் உடனடியாக கோவிலைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

All Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Women Get Pregnant By Just Sleeping On The Floor For A Night In This Temple!

Women Get Pregnant By Just Sleeping On The Floor For A Night In This Temple!