Latest Updates
-
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. -
26 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் யார் தெரியுமா? அவர் எப்படி பிரதமரானார் தெரியுமா? -
கீரை வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
பலாக்கொட்டை இருந்தா.. கத்திரிக்காய், முருங்கைகாய் சேர்த்து இப்படி குழம்பு வையுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
July 2026 Horoscope: ஜூலை மாதம் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப மோசமான மாதமாக இருக்கப்போகிறதாம் - ஜாக்கிரதை -
Men's Health Month: ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளை பட்டியலிட்ட டாக்டர்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
July Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கலும், டிபன் சாம்பார், சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா?
ஃபேஸ்புக் லைவில் தற்கொலை செய்துக் கொண்டவர்கள்!
காதலி பிரிந்து சென்றதால், ஃபேஸ்புக் லைவில் துப்பாக்கியால் சுட்டக் கொண்டு இறந்த ஆண்!
இன்றைய இளைஞர்கள் எதற்கெடுத்தாலும் சமூக தளத்தை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இதன் தாக்கம் மிகவும் அதிகம். இதை சரியான வழியில் பயன்படுத்தி நாம் சட்டத்தையே மாற்றியுள்ளோம்.
ஆனால், பலர் தங்களை ஒரு தவறான உதாரணமாக முன்னிறுத்திக் கொண்டு மற்றவர்களையும் தவறான பாதையில் செல்ல வழிவகுக்கின்றனர். இவர்கள் எல்லாம் ஃபேஸ்புக் லைவில் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள்...

துப்பாக்கி சூடு!
22 வயதே நிரம்பிய எர்டோகன் (Erdogan Ceren) தனது காதலி தன்னைவிட்டு பிரிந்து சென்ற சோகத்தில் ஃபேஸ்புக் லைவில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார். லைவில் பார்த்தவர்கள் எத்தனையோ முயன்றும் அவரது மரணத்தை தடுக்க முடியவில்லை.
முதல் முறை குறி தவறிய போதிலும், இரண்டாம் முறை சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார் எர்டோகன்.

பதின் வயது பெண்!
செயின்ட் பால், மினசோட்டாவை சேர்ந்த ஒரு பதின் வயது பெண் ஃபேஸ்புக் லைவில் 18,000 பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது விஷம் பருகி தற்கொலை செய்துக் கொண்டார்.

தூக்கிட்டு தற்கொலை!
இளம் வயது பெண் ஒரு தான் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதை ஃபேஸ்புக் லைவில் கூறி, தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
Image Source

நடிகர்!
பிரடெரிக் ஜே பௌடி எனும் நடிகர் ஃபேஸ்புக் லைவில் கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துக் கொண்டார். சமீபத்தில் தான இவரை பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பெயிலில் வெளிவர ஒரு லட்சம் டாலர்கள் கட்டியிருந்தார்.

மாடல்!
ஹாங்காங் மாடல் ங் சுக் யு (Ng Shuk Yi) என்பவர் கடந்த ஜனவரி 16-ம் தேதி ஃபேஸ்புக் லைவில் தற்கொலைக்கு முயன்றார். அதிர்ஷ்டவசமாக இவரை காப்பாற்றிவிட்டனர். இவர் இப்போது மெல்ல, மெல்ல உடல்நலம் தேறி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Image Source



Click it and Unblock the Notifications