நாங்க செக்ஸ் வொர்க்கரானதுக்கு இது தான் காரணம் - இருட்டடிக்கப்பட்ட இனத்தின் அழுகுரல்!

Posted By:
Subscribe to Boldsky

ஒம்போது... அலி... அஜக்கு.... அது.. இது.... இன்னும் எத்தனையோ வார்த்தை... அவங்களுக்கும் மனசு இருக்கு, அவங்களும் மனுஷங்க தான்னு நாம எப்பவுமே நெனச்சுது இல்லை. 99.9% இந்த சமுதாயத்துல அவங்கள கீழ்த்தனமான நடத்துறோம். இதுல நானும், நீங்களும் ஒன்னும் விதிவிலக்கு இல்ல.

ஆண், பெண்ணுக்கு அடுத்ததா இந்த உலகத்துல மனுஷனா, மனுஷியா வாழ்ந்துட்டு இருக்க மூணாவது பாலினம். நாம எப்பவுமே மூணாவதுக்கு மதிப்பு கொடுக்கிறது இல்ல. Third Grade Words, மூணாவது மனுஷன், C Class Audience-ன்னு மூணாவதா நாம பிரிச்சு பார்க்குற எல்லாரையும் கீழ்த்தரமா தான் நாடத்திட்டு வரோம்.

போறபோக்குல அவங்க மனசுல கல் எறிஞ்சுட்டு போயிடறோம். அந்த கல்லு அவங்க வாழ்க்கையில எவ்வளோ பெரிய வலிய ஏற்படுத்தும்ன்னு நாம என்னிக்காவது யோசிச்சிருக்கோமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பள்ளி தோழன்!

பள்ளி தோழன்!

என் ரியல் லைப்ல எனக்கொரு பிரெண்ட் இருந்தான். அவன் பேரு பூவரசன். இப்ப அவன் எங்க இருக்கான், என்ன பண்றான்னு யாருக்குமே தெரியாது. ஸ்கூல் படிக்கும் போது NCCல டாப் 5 ஸ்டூடண்ட்ஸ்ல அவனும் ஒருத்தன். பத்தாவது படிச்சுட்டு இருந்தப்ப அவன்கிட்ட சில மாற்றங்கள் தெரிஞ்சுது. பொண்ணுக மாதிரியே நோட்புக்க மாரோட அணைச்சு எடுத்துட்டு வருவான். அவன் சிரிக்கிறது, பேசுறது நடக்குறது எல்லாமே பொண்ணுக மாதிரியே இருந்துச்சு.

கூத்தாண்டவர் கோவிலில் திருமணம்!

கூத்தாண்டவர் கோவிலில் திருமணம்!

அவன் எனக்கு அவ்வளோ க்ளோஸ் பிரெண்ட் இல்லைங்கிறதுனால, இதெல்லாம் நான் சரியா கவனிக்கல. ஒருநாள் எல்லாரும் பேசிட்டு இருக்கும் போது, அவன பத்தி ஒரு பேச்சு வந்துச்சு. என்ன ஆச்சு இப்ப எல்லாம் அவன ஸ்கூல் பக்கம் பார்க்கவே முடியலன்னு கேட்டப்ப, ஒரு பிரெண்ட், "அவன் மாறிட்டாண்டா, கூத்தாண்டவர் கோவில்ல போயி கல்யாணம் பண்ணிக்கிட்டான். வீட்டுல விரட்டி விட்டாங்க, எங்க போனான்னே தெரியல, அவன் ஊரைவிட்டு ஓடிப்போய் ஒரு ரெண்டு மாசம் இருக்கும்ன்னு சொன்னான்."

திறமையானவர்கள்!

திறமையானவர்கள்!

அப்போ 15 வயசுல இது ஒரு ஜஸ்ட் லைக் தட்'டா போயிடுச்சு. ஆனா, இப்படி வீட்டவிட்டு, ஊரைவிட்டு மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லின்னு வெளியூர்ல என்ன பண்றது, ஏது பண்றதுன்னு தெரியாம சுத்திட்டு இருக்க எத்தனையோ திருநங்கைகள் இருக்காங்க. நம்மள பொறுத்த வரைக்கும் அவங்க அஜக்கு. பகல்ல பிச்சை எடுப்பாங்க, இல்ல நைட்டு விபச்சாரம் பண்ணுவாங்க. அவங்களுக்கு என்ன திறமை இருந்திட போகுதுன்னு நெனச்சுட்டு இருக்கோம்.

எந்த ஒரு பொண்ணும் விபச்சாரத்த தெரிஞ்சோ இல்ல புடிச்சோ தேர்வு செய்யிறது இல்ல. உடம்பு வலிக்கிற வேலை இந்த உலகத்துல எத்தனையோ இருக்கு. ஆனால், மனசு வலிக்கிற வேலை...? உடம்பும், மனசும் ரெண்டும் வலிக்கிற வேலை? உலகத்துலேயே விபச்சாரம் மட்டும் தான்.

தெரிந்தே செய்வது ஏன்?

தெரிந்தே செய்வது ஏன்?

பிடிக்கலன்னா கட்டுன புருஷனா இருந்தாலும் கூட படுக்க கசக்கும். யாரு, எவன்னு தெரியாம, குடி போதையில, உடல் போதையில கண்ணுமுன்னு தெரியாம வந்து ஏறிட்டு போயிடுவன். ரெஸ்ட் எடுக்க CL, PL, ML எல்லாம் இவங்களுக்கு இல்ல. ஆனாலும், தெரிஞ்சே இவங்க (திருநங்கைகள்) ஏன் இந்த தொழிலுக்கு வராங்க?

பணம்?!

பணம்?!

வீட்டவிட்டு, ஊரவிட்டு ஓடிவர திருநங்கைகளுக்கு குடும்பம் எங்க இருக்க போகுன்னு நெனச்சுட்டு இருக்கோம். அவங்களுக்கும் குடும்பம் இருக்கு. அவங்க ஒண்ணா தான் வாழ்ந்துட்டு வராங்க. "உண்ண உணவு, உடுத்த உடை, உறங்க இருப்பிடம்" மனுஷனோட மூணு அத்தியாவசிய தேவை. இது மூணுத்துக்குமே தேவை ஒண்ணு இருக்கு. அதுதான் பணம்.

வாய்ப்பு?

வாய்ப்பு?

பணம் சும்மா வந்திருமா? இல்ல நாம யாருக்காச்சும் சும்மா என்ன, ஏதுன்னு கேட்காம பணத்த தூக்கி கொடுத்திருவோமா? சிக்னல்ல, ட்ரெயின்ல, ரோட்டரத்துல நீங்க பாக்குற திருநங்கைகள்'ல எத்தனையோ பேரு ஸ்கூல்ல படிக்கும் போது, காலேஜ்ல படிக்கும் போது தனக்குன்னு ஒரு திறமை, புத்திசாலித்தனத்தோட தான் வாழ்ந்திருப்பாங்க. திருநங்கைன்னு தெரிஞ்சதும் அவங்க திறமை அவங்கள விட்டு போயிடுறது இல்ல. நாம தான் அவங்களவிட்டு விலகி போயிடுறோம். இல்லவிரட்டிவிட்டுறோம்.

தன்னிறைவு!

தன்னிறைவு!

ஒரு நாள், ரெண்டு நாள் வாய்ப்பு கேட்டு அலையலாம். எத்தன நாளுக்கு பசி தாங்குவாங்க? எத்தன நாள் உடுத்திருக்க அந்த டிரெஸ் கிழிசலாகம இருக்கும்? எத்தன நாளைக்கு தான் வெயில்லயும், மழையிலயும் பிளாட்பாரத்திலயே ஒதுங்கி இருக்க முடியும்? கடைசில ஒரு நாள் பணம் வேணும்ல. தன்னைப்போலவே ஒரு சின்ன வயசு பொண்ணோ, பையனோ நடுத்தெருவுல நிக்கும் போது அவங்க இந்த கஷ்டம் எல்லாம் படக்கூடாது, நல்லா படிக்கணும், பெரியாளாகணும்னு தன்னோட உறவா ஏத்துக்கிட்ட, அவங்கள காப்பாத்த பணம் வேணும்ல.

சாதிப்பார்கள்!

சாதிப்பார்கள்!

நாம ஏதாவது வேலை கொடுத்தா, அவங்க திறமைக்கு வாய்ப்புக் கொடுத்தா... இந்தியாவோட முதல் சப்-இன்ஸ்பெக்டரான ப்ரிதிகா யஷினி போல இவங்களும் பல துறையில சாதிப்பாங்க. கண்டிப்பா பிச்சையோ, விபச்சாரமோ பண்ண மாட்டாங்க. நமக்கு சிலர் தெருவுல சுத்துற நாயிக்கு கொடுக்குற மரியாதை, மதிப்பு கூட, இவங்களுக்கு கொடுக்கிறது இல்லங்கிறது தான் திருநங்கைகள் மனசுல பெரிய பாரமா இருக்கு.

நல்ல மனசு!

நல்ல மனசு!

என்ன இருந்தாலும் நாமளும் மனுஷங்க தானே... நம்மள்ள பலருக்கு தட்டிவிட்டு தான பழக்கம், தட்டிக் கொடுக்க நாம பெரிசா பழகினது இல்லையே. இனிமேலாவது பழகுவோம். தாவரத்துக்கும் உயிர் இருக்குன்னு கண்டுபுடிச்சு சொன்ன ஜகதீஷ் சந்திர போஸும் நம்ம நாட்டுல தான் பிறந்திருக்காரு. உயிருல இது பெருசு, இது சிறுசுன்னு எதுவுமே இல்லைங்க. எல்லாத்துக்கும் நல்ல மனசு இருந்தா மட்டுமே போதும்.

அன்பை பகிர்வோம்!

அன்பை பகிர்வோம்!

குறைந்தபட்சம் சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பைல வாழுற மக்கள் தினசரி இவங்கள கடக்காம போக முடியாது. இனிமேல், இவங்கள சிக்னல்ல, ட்ரெயின்ல, ரோட்டரத்துல எங்கையாவது பார்த்தா... பிச்சையா காசு போடுறீங்களோ இல்லையோ, முடிஞ்ச வர ஒரு புன்னகைய பரிசாக் கொடுத்துட்டு போலாம். காசு கொடுக்க நிறையா பேரு இருக்காங்க. ஆனா, அவங்க ஏக்கம் எல்லாம் கொஞ்சம் கூட உண்மையான அன்பு கிடைக்கிறது இல்லையேன்னு தான்.

மாற்றம் உருவாக்குவோம்!

மாற்றம் உருவாக்குவோம்!

நம்ம கூட பஸ்ல எத்தனையோ பேரு குடிச்சுட்டு போதையில வந்து உட்கார்ந்துட்டு இருப்பான். அவன கூட சகிச்சுக்கிட்டு இருப்போம். ஆனா, இவங்க வந்து பக்கத்துல நின்னா கூசி, நடுங்கி ஒதுங்குவோம். வேண்டாமே! எக்காரணம் கொண்டும், அவங்கள கேவலமா ஒதுக்கி பார்க்காதீங்க. அவங்களுக்கு வாய்ப்புக் கொடுக்காட்டியும், மனசளவுல அவங்க நொந்து போக நாம காரணமா இல்லாம இருப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dark Truth: Reason Why We End Up Being Sex Workers - Voice of Transgenders!

Dark Truth: Reason Why We End Up Being Sex Workers - Voice of Transgenders!