இந்தியாவில் பிறந்த கடற்கன்னி குழந்தை - வீடியோ!

Posted By:
Subscribe to Boldsky

நாம் நமது சிறுவயதில் பல கதைகள் படித்திருப்போம், அதில் சில சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்கள் கண்டிருப்போம். அலாவுதீன் பூதம், பறக்கும் விமானம், பத்துத்தலை ராவணன் போன்றவர்கள் நமக்கு ஆச்சரியத்தை அளித்திருப்பார்கள். அதில் பெரும் ஆச்சரியமாக இருந்த ஒரு கதாப்பாத்திரம் கடற்கன்னி.

குழந்தைகள் மத்தியில் மிகவும் ஈர்ப்பாக காணப்பட்ட இந்த கதாபாத்திரம் உண்மையா, பொய்யா, குறைபாடா என்ற விவாதம் இன்று வரையிலும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

விவாதிக்க சுவாரஸ்யமாக இருந்தாலும், நிஜத்தில் இது பெரும் அதிர்ச்சியை அளிக்கும் நிகழ்வாக மட்டுமே இருக்கும் என்பது தான் நிதர்சனம். இது இந்தியாவில் சமீபத்தில் நடந்த நிகழ்வு....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்தியாவில்!

இந்தியாவில்!

உத்திரபிரதேசம் சாரான்பூரை சேர்ந்த 22 வயதுமிக்க ஓர் இளம் தாய் தனது குழந்தயை பார்க்க ஆவலாக இருந்தார். அப்போது தான் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது.

ஏனெனில், கர்ப்பமாக இருந்த போது எடுத்த எந்த ஒரு ஸ்கேன் ரிப்போர்டிலும் இது போன்ற நிகழ்வை அவர்கள் காணவில்லை. ஆம்! குழந்தை கடற்கன்னி போன்ற உருவத்தில் இரு கால்களும் ஒட்டியிருந்த நிலையில் பிறந்திருந்தது.

மருத்துவர்கள்!

மருத்துவர்கள்!

குழந்தையை பார்த்த மருத்துவர்களுக்கும் இது அதிர்ச்சியை அளித்தது. அவர்கள் இதற்கு முன் இப்படி ஒரு நிகழ்வை கண்டிருக்க வாய்ப்பே இல்லை.

ஆபரேஷன் செய்த மருத்துவர்களுள் ஒருவர் இது ஒரு அரியவகை மருத்துவ நிகழ்வு. குறைபாடுடன் பிறக்கும் ஒட்டி பிறப்பவர்கள் போன்ற நிகழ்வாக தான் இருக்க கூடும் என கூறினார்.

குழந்தை...

குழந்தை...

குழந்தை காண ஒரு மீன் போன்ற உருவம் பெற்றிருந்தது. இரண்டு கால்களும் இணைந்து இருந்தது. மேல் உடல் சாதாரண குழந்தை போலவும், கீழ் உடல் மட்டும் மீனை போலவும் இருந்தது. கீழ் உடல் முழுமையாக வளராத நிலையில் இருந்தது.

நிலை!

நிலை!

இந்த அதிசய குழந்தை பிறக்கும் போதே Sirenomelia எனப்படும் அரியவகை கடற்கன்னி கோளாறுடன் பிறந்துள்ளது. இது கண்டிப்பாக உயிருக்கே ஆபத்தான நிலையாக கூட அமையலாம் என பெற்றோரிடம் கூறினார்கள்.

பத்து நிமிடங்களில்...

உலகில் இது போன்ற சம்பவம் இதற்கு முன்னர் மூன்று முறை நடந்துள்ளது. இது நான்காவது முறையாகும். இந்த குழந்தை பிறந்த 10 நிமிடத்தில் இறந்து விட்டது என்பது அந்த பெற்றோரை மீளா துயரத்தில் ஆழ்த்தியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mermaid Baby Who Lived For Just 10 Minutes!

Mermaid Baby Who Lived For Just 10 Minutes!
Subscribe Newsletter