17-ல் திருமணம், 22-ல் விவாகரத்து 25-ல்??? - நான் கடந்து வந்த பாதை #7

Posted By:
Subscribe to Boldsky

அனிதா பிரபா மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் கோட்மா பகுதியை சேர்ந்த பெண். இவரது வாழ்க்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கமளிக்கும், உத்வேகம் அளிக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. 

Married Off At Age 17, Filed For Divorce At 22; The Story Of 25-Year-Old DSP Anita Prabha

17-ல் திருமணம், 22-ல் விவாகரத்து 25-ல் டி.எஸ்.பி-யாக பதிவி ஏற்றுள்ளார் அனிதா....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
92% தேர்ச்சி!

92% தேர்ச்சி!

அனிதா பிறந்தது 1992-ல். படித்து எல்லாம் மத்திய பிரதேசத்தின் கோட்மாவின் அரசு பள்ளியில் தான். பத்தாம் வகுப்பில் 92% தேர்ச்சி பெற்றவர் அனிதா என்பது குறிப்பிடத்தக்கது.

17-ல் திருமணம்!

17-ல் திருமணம்!

தொடர்ந்து படிக்க விரும்பினார் அனிதா. ஆனால், அவரது பாரம்பரியம், சடங்கு போன்ற தடைகள் திருமண வாழ்வில் தள்ளியது. தன்னைவிட பத்து வயது மூத்த நபருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார் அனிதா.

வாய்ப்புகள் இழந்தார்!

வாய்ப்புகள் இழந்தார்!

அனிதாவின் பொருளாதார நிலையால் பாதிக்கப்பட்ட போதிலும், நான்கு வருடத்தில் பட்டம் படித்து முடித்தார். கடைசி வருட பரிட்சைகள் கணவர் விபத்தில் சிக்கியதால் எழுத முடியாமல் போனது.

இதனால் வங்கியில் வேலை வாங்கும் கனவும் தகர்ந்தது அனிதாவிற்கு.

விடா முயற்சி!

விடா முயற்சி!

தன் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவிய வேண்டிய நிலையில் இருந்த அனிதா ஒப்பனை கலைஞராக வேலை செய்ய துவங்கினார் . கணவரால் மறுமுனையில் தொல்லைகளுக்கு ஆளானார் அனிதா.

எதுவும் இல்லை..

எதுவும் இல்லை..

பிடித்த வேலை இல்லை, மகிழ்ச்சியான வாழ்க்கை இல்லை, குடும்பமும் இல்லை... ஆனாலும் 2013-ல் வனத்துறை அதிகாரி தேர்வில் தேர்ச்சி பெற்றார். 14 கிலோமீட்டரை நான்கு மணி நேரத்தில் கடந்து டிசம்பர் 2013-ல் பாலாகாட் மாவட்டத்தில் பணியில் அமர்ந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர்!

சப்-இன்ஸ்பெக்டர்!

தனது லட்சியங்களை உயர கொண்டு சென்ற அனிதா சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி, கடின பயிற்சிகளில் வெற்றி பெற்று தேர்வானார். இதன் இடையில் அனிதாவின் கருப்பையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து!

விவாகரத்து!

ஒருபக்கம் வேலையில் முன்னேற்றம் கண்ட அதே நேரத்தில் இல்லறத்தில் சோதனைகள் அதிகரித்துக் கொண்டிருந்தது. தனது 22 வயதில் விவாகரத்து பெற்றார் அனிதா பிரபா.

சற்றும் மனம்தளராத அனிதா மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பொது சேவை ஆணைக்குழு தேர்வு எழுதி முதல் அட்டம்ப்ட்டிலேயே தேர்ச்சி பெற்றார். பெண்கள் பிரிவில் 17-ம் இடம் பிடித்து, டி.எஸ்.பி-யாக தேர்வு செய்யப்பட்டார்.

உயரிய இலட்சியங்கள்!

உயரிய இலட்சியங்கள்!

இத்துடன் நின்றுவிடவில்லை அனிதா பிரபா. இப்போது கலெக்டர் பதவிக்கு தனது இலட்சியத்தைய உயர்த்தி அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டார்அனிதா பிரபா. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்வில் தேர்ச்சியும் பெற்றார்.

சபாஷ்!

சபாஷ்!

25 வயதில் ஒரு பெண் என்ன செய்து விட முடியும்? அனைத்தும் சாத்தியம் என செய்து காட்டியுள்ளார் அனிதா பிரபா.

அதிலும், இளம் வயதில் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பிறகு. இவருக்கு சபாஷ் போடாவிட்டால், வேறு யாருக்கு சபாஷ் போடுவது!

சபாஷ் அனிதா பிரபா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Married Off At Age 17, Filed For Divorce At 22; The Story Of 25-Year-Old DSP Anita Prabha

Married Off At Age 17, Filed For Divorce At 22; The Story Of 25-Year-Old DSP Anita Prabha
Please Wait while comments are loading...
Subscribe Newsletter