மறக்க முடியுமா? மணிப்பூர் தாய்மார்கள் இந்திய இராணுவத்திற்கு எதிராக நடத்திய நிர்வாண போராட்டம்!

Posted By:
Subscribe to Boldsky
https://www.thequint.com/videos/mothers-day-manipur-manorama-mothers-naked-protest-indian-army-assam-rifles

Image Courtesty: Quint

இந்த சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால்,இதற்கான நியாயம், நீதி கிடைத்ததா? என்ற கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது. 2004 ஜூலை 15ம் தேதி, நடுவயதிலான 12 மணிப்பூர் தாய்மார்கள் இந்திய இராணுவ அலுவலகம் முன்னர் நிர்வாணமாக வந்து "Indian Army Rape Us" என்ற வாசகத்துடன் போராட்டம் நடத்தினர். இது உலகளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.

ஆனால், அன்றில் இருந்து இன்று வரை அவர்கள் நடத்திய போராட்டத்திற்கும், அந்த போராட்டம் நடக்க காரணமாக இருந்த கொடூர கொலைக்குமான நீதி இன்னும் கிடப்பிலேயே இருக்கிறது. இந்தியாவில் வாக்களித்து மக்கள் நாதியற்றும், உண்மைக்காக போராடும் மக்கள் நீதியற்றும் வாழும் நிலை சாதாரணமாகிவிட்டது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தங்ஜம் மனோரமா!

தங்ஜம் மனோரமா!

32 வயதான அந்த பெண்ணின் பெயர் தஞ்சம் மனோரமா. அவரை கற்பழித்து, டார்ச்சர் செய்து, உருச்சிதைவு ஏற்படுத்தி கொலை செய்தனர் இந்திய இராணுவத்தினர் என்பதே குற்றச்சாட்டு.

2004 ஜூலை 10 அன்று தனது வீட்டில் இருந்து மனோரமா அழைத்து செல்லப்பட்டார். போராளி என்ற காரணம் காட்டி விசாரணை என்ற பெயரி அழைத்து செல்லப்பட்ட மனோரமா , மறுநாள் அவரது வீட்டில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பிணமாக கிடந்தார்.

பிறப்புறுப்பில் குண்டுகள்!

பிறப்புறுப்பில் குண்டுகள்!

மனோரமாவை பிரத பரிசோதனை செய்த போது பிறப்புறுப்பில் 16 துப்பாக்கி குண்டு துளையிட்டு இருந்தது அறியப்பட்டது. அவரது தொடையில் எங்கிலும் வெட்டு காயங்கள் இருந்தன. உடல் எங்கிலும் குண்டுகள் துளைத்த காயங்கள் இருந்தன.

மேலும், பிரத பரிசோதனை அறிக்கையில், மனோரமா கொடூரமாக பல முறை கற்பழிக்கப்பட்ட உண்மையும் வெளியானது. அந்த தடயத்தை அழிக்கவே அவரது பிறப்புறுப்பில் துப்பாக்கி குண்டுகளால் சுடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

வெகுண்டேழுந்த தாய்மார்கள்

வெகுண்டேழுந்த தாய்மார்கள்

தங்ஜம் மனோரமாவுக்கு நடந்த செய்தி வெளியானதுமே மணிப்பூர் தாய்மார்கள் வெகுண்டெழுந்தனர். ஜூலை 15 நாள் மணிப்பூர் சேர்ந்த 12 தாய்மார்கள் கங்களா கோட்டையில் (Kangla Fort) இருக்கும் அசாம் இராணுவ தலைமை செயலகம் முன்னே "Indian Army Rape US" என சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட துணியை ஏந்தி நிர்வாண போராட்டம் நடத்தினார்கள்.

கோபம்!

கோபம்!

மணிப்பூர் பெண்களிடம் வெளிப்பட்டதை வெறுமென கோபம் என கூறிவிட முடியாது. பொதுமக்கள், இராணுவ அதிகாரிகள், ஊடகங்கள் உட்பட அனைவரும் இந்த போராட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

எங்கள் உடலை வன்கொடுமை செய்தவர்களை, தங்கள் உடல் கொண்டே போராட்டம் நடத்தினார்கள் மணிப்பூர் தாய்மார்கள்.

ஆயுதம்!

ஆயுதம்!

இராணுவ வீரர்களிடம் ஆயுதங்கள் இருக்கிறது. அதை கொண்டு அவர்கள் வலுமையாக எங்கள் உடலை தாக்கினர். எங்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் எங்கள் உடல் மட்டும் தான். எனவே, இதை கொண்டு அவர்களை நாங்கள் தாக்குகிறோம் என அழுதபடி ஒரு பெண்மணி பேட்டியில் கூறியிருந்தார்.

குடும்பத்தார்!

குடும்பத்தார்!

Meira Paibi எனும் குழுவை சேர்ந்த பெண்கள், இரவோடு இரவாக இந்த போராட்டம் குறித்து திட்டமிட்டு. தங்கள் குடும்பத்தார் யாரிடமும் கூறாமல், இராணுவ செயலகம் முன்னே போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிர்வாண போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட 12 பெண்களும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். வேலைக்கு செல்பவர்கள்.

ஞானேஸ்வரி!

ஞானேஸ்வரி!

ஞானேஸ்வரி என்ற பெண், இந்த நிர்வாண போராட்டத்திற்கு செல்லும் முன் தனது கணவரின் கால்களை தொட்டு வணங்கிவிட்டு கிளம்பினேன் என கூறி இருந்தார். தனது கணவரிடம் இது போன்ற போராட்டத்தில் ஈடுபட போகிறேன் என கூறினால், அவர் அனுமதிப்பார் என்ற நம்பிக்கை இல்லை.

பெண்களை மிக எளிதாக மானபங்கப்படுத்தி, கற்பழித்துவிடுகிறார்கள். பிறகு ஏன் அதற்காக நிர்வாணமாக போராடக் கூடாது என்ற எண்ணம் எழுந்தது என கூறியுள்ளார் ஞானேஸ்வரி.

சிறை!

சிறை!

நீதிக் கேட்டு நிர்வாணமாக போராடிய அந்த 12 மணிப்பூர் தாய்மார்களையும் கைது செய்து மூன்று மாதம் சிறையில் அடைத்தனர். மேலும், அசாமில் இருந்த அந்த இராணுவ படையை அங்கிருந்து உடனே வெளியேற உத்தரவிடப்பட்டது.

எந்த கேள்வியும் இன்றி, அந்த 12 மணிப்பூர் தாய்மார்களையும், அந்த ஊர் மக்கள் கொண்டாடினார்கள்.

இராணுவம்?

இராணுவம்?

இந்திய இராணுவம் மற்றும் இராணுவ வீரர்கள் நம் தாய் நாட்டுக்காக பல தியாகங்கள் செய்துள்ளனர். பலர் தங்கள் இன்னுயிர் கொடுத்து சண்டையிட்டுள்ளனர். ஆனால், அதற்காக இந்த கொடூரமான கற்பழிப்பு சம்பவத்தை நாம் எளிதாக மறந்துவிட முடியுமா?

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஆனால், அங்கே வாழும் ஜனங்களுக்கு நியாயம் கிடைக்கிறதா? என்ற கேள்வி மட்டும் பெரிதாகி கொண்டே போகிறது.

10 இலட்சம்!

10 இலட்சம்!

பல ஆண்டுகள் நீடித்த இந்த கொடூர கற்பழிப்பு வழக்கில். 2014ம் ஆண்டு, பாதிக்கப்பட்ட தங்ஜம் மனோரமா குடும்பத்திற்கு பத்து இலட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பு வந்தது. மேலும் எக்காரணம் கொண்டும், அவசியம் இன்றி எங்கேயும் கூடுதல் படைகளை வைத்திருக்க கூடாது என்றும் கூறியது நீதிமன்றம்.

இதுவொரு ஆயுதமா?

இதுவொரு ஆயுதமா?

இந்திய இராணுவத்தால் செக்ஸுவல் கொடுமைகள் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப் படுகிறது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. தவறு செய்தவர்களாகவே இருப்பினும், இம்முறையை கையாள்வது குற்றம். மற்றும், எந்த குற்றமும் செய்திடாத அப்பாவி மக்கள் மீது இப்படி அத்துமீறல்களில் ஈடுபடுவது முற்றிலும் தடுக்கப்பத வேண்டியது, தண்டிக்கப்பட வேண்டியது ஆகும்.

கைதானார்களா?

கைதானார்களா?

இந்நாள் வரை, தங்கஜம் மனோரமாவை கொடூரமாக கற்பழித்து கொலை செய்த அந்த இராணுவ வீரர்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை. அவர்கள் கைதாகவும் இல்லை. அவர்களது கைகளில் இரத்தக்கறை இருக்கிறது. அதுவும், தவறான முறையில் படிந்த கறையது.

தவறு செய்தவர்கள் பச்சை பசும்புல் போர்த்திய தளத்தில் சொகுசாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள், அந்த இரத்த கறையை துடைக்க முடியாமல், தினம், தினம் எண்ணி, எண்ணி வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Manipuri Mothers Naked Protest Against Indian Army - Where is Justice?

Manipuri Mothers Naked Protest Against Indian Army - Where is Justice?