அக்ஷ்யத திரித்யை அன்று நீங்கள் அவசியம் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்!!

By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

அட்சய திரிதியை இந்துக்களின் பண்டிகைகளில் மிகவும் மங்களகரமான நாள். இந்த நாளில் தொடங்கிய அனைத்துக் சுபக்காரியங்களும் மற்றும் தொழில்களும் சிறப்பாக நடைபெறும் என்பது ஒரு நம்பிக்கை. அதுவும் இந்த நாளில் மட்டும் எந்த ஒரு நல்ல நேரமும் பார்க்கத் தேவை இருக்காது என்பர். அட்சய திரிதியை அன்று நாள் முழுவதுமே சிறந்த நாள் தான் என்றும் கூறுவர். இவை அனைத்துமே இந்திய மக்களின் ஒரு சிறந்த நம்பிக்ககையாகவே பின்பற்றப்பட்டு வருகின்றது.

இந்த நாளில் எந்த நல்ல காரியமோ அல்லது 'கர்மா' செய்தாலும் அது பத்து மடங்கு பலனைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த கிடைக்கும் அனைத்தும் காலம் காலமாக அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை என்றும் நம்பப்படுகிறது.

தேவலோகத்தில் செல்வதிற்கு அதிபதியாக கூறப்படுபவர் "குபேரர்". அந்த குபேரரே அந்த செல்வ நிலையை அடைய மகாலட்சுமி தேவி தான் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆமாங்க, அது தான் உண்மை.

Lakshmi Stotram for Akshaya tritiya

குபேரர் அவர்கள் அட்சய திரிதியை அன்று மகாலட்சுமி தேவியை நினைத்து துதித்தார். அதனால் மகாலட்சுமி தேவி அவருக்கு ஆசி வழங்கி, குறையாத செல்வம் நிலைக்க வரம் அளித்தார்.

இந்த கட்டுரையில் ஸ்ரீ மகாலட்சுமி தேவியை துதித்து வழிபடுவதற்கான மகாலட்சுமி ஸ்தோத்திரம் கொடுக்கப்பட்டுள்ளன. அட்சய திரிதியை அன்று இந்த ஸ்தோத்திரங்களை சொல்லி மகாலட்சுமி தேவியைத் துதித்து அவரின் ஆசியுடன் செல்வ வளத்தை பெறலாம்.

இந்த ஸ்தோத்திரங்களை அட்சய திரிதியை அன்று மட்டும் தான் கூற வேண்டும் என்பதல்ல. தினமும் ஒரு முறை அதை சொல்லி வந்தால் வாழ்வில் எந்த ஒரு பணக் கஷ்டமும் ஏற்படாமல் நிம்மதியாக வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்லோகம்-1

ஸ்லோகம்-1

"நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே

சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே"

மஹாமாயே என்பது மகாலட்சுமி தேவியை குறிக்கிறது. நான் உன்னை வணங்குகிறேன். மனிதர்கள் வேண்டுவதை அருளும் கடவுள் நீங்களே. கைகளில் சங்கு, சக்கரம் மற்றும் ஃகதை ஆகியவற்றை வைத்துள்ள கடவுள் நீங்களே. நான் உங்களை எப்பொழுதும் துதிப்பேன்.

ஸ்லோகம் 2

ஸ்லோகம் 2

"நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி

ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே"

தாயே உன்னை வணங்குகிறேன். கருடனை வாகனமாக கொண்ட கடவுள் மற்றும் கோலாசுரனை வதைத்த தேவியும் நீங்களே. உன் பக்தர்களின் பாவங்களை நீயே திருடிக் கொள்வாய். மகாலட்சுதி தாயே நான் உன்னை வணங்குகிறேன்.

ஸ்லோகம் 3

ஸ்லோகம் 3

"ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி

ஸர்வ துர்க்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே"

நான் மகாலட்சுமிக்கு தேவிக்கு வணக்கம் செலுத்துகிறேன். நீங்கள் அனைத்து வலி மற்றும் துயரங்களையும் அகற்றிடுவீர்கள். மகாலட்சுமி தாயே நான் உன்னை வணங்குகிறேன்.

ஸ்லோகம் 4

ஸ்லோகம் 4

"ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி

மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே"

கடவுளே, நீங்கள் உங்கள் பக்தர்களுக்கு ஞானத்தையும் நுண்ணறிவையும் கொடுப்பவர். உங்கள் பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் விடுதலையும் தருகிறீர்கள். நீங்கள் அனைத்து புனித சின்னங்களிலும் இருக்கிறீர்கள். மகாலட்சுமி தாயே நான் உன்னை வணங்குகிறேன்.

ஸ்லோகம் 5

ஸ்லோகம் 5

"ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி

யோகக்ஞே யோக ஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே"

தேவி, நீங்கள் தொடக்கம் மற்றும் முடிவுகளை நல்லதாக அமைய செய்கிறாய். பிரபஞ்சத்திலிருந்து பிறந்த முதல் சக்தியாக நீங்கள் இருந்தீர்கள். நீங்கள் தூய சக்தியில் இருந்து பிறந்தாய், அதை ஆதரிக்கிறாய். மகாலட்சுமி தாயே நான் உன்னை வணங்குகிறேன்.

ஸ்லோகம் 6

ஸ்லோகம் 6

"ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே

மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே"

தாயே, நீங்கள் மிகப்பெரிய சக்தியாக உள்ளீர்கள், நீங்கள் மகிழ்ச்சிக்கும் செல்வத்துக்கும் பொறுப்பாக இருக்கிறீர்கள். நீங்கள் மிக பெரிய பாவங்களையும் அழித்துவிடவீர்கள். மகாலட்சுமி தாயே நான் உன்னை வணங்குகிறேன்.

ஸ்லோகம் 7

ஸ்லோகம் 7

"பத்மாஸன ஸ்திதே தேவி பரப்பிரம்ஹஸ்வ ரூபிணி

பரமே ஸி ஜகன்மாதக மஹாலக்ஷ்மி நமோஸ்துதே"

தாமரை மலர் மீது அமர்ந்துள்ள தேவியே. நீங்கள் பிரம்மாவின் வடிவம். நீங்கள் உன்னத சக்தி மற்றும் இந்த உலகின் தாய். மகாலட்சுமி தாயே நான் உன்னை வணங்குகிறேன்.

ஸ்லோகம் 8

ஸ்லோகம் 8

"ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே

ஜகத்ஸ்திதே ஜகன்மாதக மஹாலக்ஷ்மி நமோஸ்துதே"

வெள்ளை ஆடைகளை அணிந்து, விலை மதிப்பற்ற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இந்த பிரபஞ்சத்தில் வீற்றிருக்கும் தாய் நீங்களே ஆவீர். இந்த உலகின் தாயே உங்களை நான் வணங்குகிறேன்.

ஸ்லோகம் 9

ஸ்லோகம் 9

"மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் யவ்படேத் பக்திமான் நரக

ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா"

இத்தகைய புனிதமான ஸ்தோத்திரத்தை முழு பக்தியுடனும் எப்போதும் எல்லா வகையான திறன்களையும் எல்லா வகையான ஞானத்தையும் தருகிறாய். மேலும், இதை துதிப்பவர்கள் அனைத்து ஆடம்பரமாக பொருட்களையும் சொந்தமாகக் கொண்டிருப்பார் மற்றும் உலக ஆசைகளை நிறைவேற்றுவார்.

ஸ்லோகம் 10

ஸ்லோகம் 10

"ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்

த்காளேயவ் படேந்நித்யம் தனதான்ய ஸமன்விதக

த்ரிகாலம் யவ் படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்

மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா"

இந்த ஸ்தோத்திரத்தை கூறும் ஒருவரை பெரும் பாவங்களில் இருந்து தாய் விடுவிப்பார், இரண்டு முறை கூறுபவர்ககளுக்கு அவர் செழிப்பையும் மற்றும் செல்வ வளத்தையும் கொடுப்பார். இதை மூன்று முறை கூறுபவர்களுக்கு எல்லா எதிரிகளும் அழிக்கப்பட்டு, மகாலட்சுமி எப்போதும் அந்த நபருடன் இருந்து மகிழ்ச்சியை அருளுவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lakshmi Stotram for Akshaya tritiya

Lakshmi Stotram for Akshaya tritiya
Story first published: Tuesday, April 25, 2017, 12:40 [IST]
Subscribe Newsletter