8 வருட பாலியல் தொல்லை, சாமியாரின் ஆணுறுப்பை அறுத்தெறிந்த கேரள மாணவி!

Posted By:
Subscribe to Boldsky

கற்பழிக்க முயற்சி செய்பவர்கள் இந்த சம்பவத்திற்கு பிறகு சற்று பயந்தே ஆகவேண்டும். மேலும், இதையே கற்பழிப்பு சம்பவங்களுக்கு நீதிமன்றம் தண்டனையாக அளிக்க துவங்கினால், இந்தியாவில் இனிமேல் கற்பழிக்க சம்பவங்களே நடக்காது.

மேலும், இனிமேல் எந்த ஒரு பெண்ணையும் தவறான பார்வையில் பார்ப்பதற்கு கூட ஆண்கள் அச்சம் கொள்வார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போலீஸில் சரண்!

போலீஸில் சரண்!

23 வயது கேரள சட்ட மாணவி, திருவனந்தபுரம் காவல் நிலையத்திற்கு சென்று, தன்னை பல ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி வந்த சாமியார் ஒருவரின் ஆணுறுப்பை அறுத்தெறிந்து விட்டேன் என கூறியுள்ளார்.

வெள்ளி இரவு!

வெள்ளி இரவு!

கடந்த வெள்ளி கிழமை இரவன்று 54 வயதுமிக்க சுவாமி கணேஷானந்தா என்ற சாமியாரை அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளார்.

அப்போது அந்த பெண் அவரது ஆணுறுப்பை அறுத்தெறிந்துள்ளார். அவர் இப்போது திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் கவலைக்கிடமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேர்க்க முடியாது!

சேர்க்க முடியாது!

கணேஷானந்தாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மீண்டும் அவரது ஆணுறுப்பை அவரது உடலுடன் சேர்க்க முடியாது என கூறிவிட்டனர்.

மூடி மறைத்த சாமியார்!

மூடி மறைத்த சாமியார்!

குற்றத்தை மூடி மறைப்பதற்காக, தானே தனது ஆணுறுப்பை அறுத்துக் கொண்டதாக கணேஷானந்தா காவலர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

16 வயதில் இருந்து!

16 வயதில் இருந்து!

அந்த பெண்ணை இந்த சாமியார் 16 வயதில் இருந்து பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி வருகிறார் என தகவல்கள் கூறுகின்றன. வெள்ளி இரவன்று கணேஷானந்தா வருவதை அறிந்து முன்னரே கத்தியை தயார் நிலையில் வைத்திருந்து அவரை தாக்கியுள்ளார் மாணவி.

தாயும் உடந்தை!

தாயும் உடந்தை!

இதில், திகைக்க வைக்கும் சம்பவம் என்னவென்றால், அந்த பெண்ணின் தாய் கணேஷானந்தாவுடன் உறவில் இருந்துள்ளார். அந்த பெண்ணின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் பாரளைஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

பூஜைகள்!

பூஜைகள்!

தந்தைக்கு உடல்நலம் குன்றி போன பிறகு தான் கணேஷானந்தா பூஜைகள் செய்ய வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். தாய்க்கு தெரிந்தே, அவரது மகளை சாமியார் பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்டுத்தி வந்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kerala Woman Chops Off Genitals of Godman Who Sexually Assaulted Her!

Kerala Woman Chops Off Genitals of Godman Who Sexually Assaulted Her!
Story first published: Saturday, May 20, 2017, 15:20 [IST]
Subscribe Newsletter