அபூர்வ சக்திகளுடன் வாழ்ந்து வரும் 7 அசாத்திய இந்தியர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

எக்ஸ்-மென் படத்தில் தான் நாம் பல அபூர்வ சக்தி கொண்ட நபர்களை கண்டிருப்போம். ஒருவரது மனதை அறிவது, கண்களில் நெருப்புவிடுவது என பல வியக்க வைக்கும் சக்திகளை நமக்கு அறிமுகம் செய்து வைத்த படம் அது.

ஆனால், நமது இந்தியாவில் ஒருசிலர் இது போல வியக்க வைக்கும் சக்திகளுடன் இருக்கிறார்கள், நம் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

பல டன் எடையுள்ள வாகனத்தை பல்லால் இழுக்கும் நபர், தனது சொந்த உடலில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நபர், கால்குலேட்டர் இல்லாமல் ஸ்கொயர் ரூட் கச்சிதமாக கூறும் சிறுமி என ஏழு பேர் உலக மக்களை அசத்தி வரும் இந்தியர்கள் ஆவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனோஜ் சோப்ரா!

மனோஜ் சோப்ரா!

இந்தியாவின் வலிமையான ஆண் என்ற பெயர் கொண்டவர் மனோஜ் சோப்ரா. மேலும், உலக வலிமையான ஆண்களில் 14 இடத்தை பெற்றிருக்கிறார் மனோஜ்.

இவரை சத்தீஸ்கர் ஜெயின்ட் என்றும், பெங்களூர் பீமா என்றும் பிரபலமாக அழைக்கிறார்கள்.

இதை எல்லாம் தவிர இவர் சிறந்த ஊக்கம் அளிக்கும் பேச்சாளாராகவும் விளங்கி வருகிறார். இதுவரை, 40 நாடுகளில் 3,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பேசியுள்ளார்.

ராஜ் மோகன் நாயர்!

ராஜ் மோகன் நாயர்!

இந்தியாவின் எலக்ட்ரிக் மேன் என அழைக்கப்படும் நபர் ராஜ் மோகன் நாயர். இவரது நோய் எதிர்ப்பு மண்டலம் உயர் வோல்டேஜால் பாதிக்கப்பட்டுள்ளது. இவரது உடல் மின்சாரம் தயாரிக்கிறது. இவரது உடலில் உற்பத்தி ஆகும் எனர்ஜியை கொண்டு விளக்கு எரிய வைக்க முடிகிறது.

அக்ரித் ஜஸ்வால்!

அக்ரித் ஜஸ்வால்!

ஷேக்ஸ்பியர் நாவலை ஐந்து வயதிலேயே படிக்க துவங்கிய நபர் அக்ரித் ஜஸ்வால். ஏழு வயதில் மருத்துவ செலவு செய்ய முடியாத ஒரு குடும்பத்தின் மகளுக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். மேலும், 12 வயதில் மருத்துவ கல்லூரியில் இடம்பெற்ற ஒரே சிறுவன் அக்ரித் ஜஸ்வால் தான். இப்போது அப்ளைடு கெமிஸ்ட்ரியில் மாஸ்டர் டிகிரி செய்து வருகிறார்.

ஜோதி ராஜ்!

ஜோதி ராஜ்!

சுவர், மலை, கம்பம் என எதுவாக இருந்தாலும் எந்த ஒரு கருவியின் துணையும் இன்றி வெறும் கை, கால்களில் வேகமாக ஏறி அசத்தும் நபர். இவரை கோத்தி ராஜூ என்றும் அழைக்கிறார்கள். இதற்கு பொருள் குரங்கு அரசன்.

இவர் சித்ரா துர்கா கோட்டையை எந்த ஒரு கருவியின் உதவியும் இன்றி வெறும் கை, கால்களில் ஏறி அசத்தியவர். க்ரிப்புக்காக மெக்னீசியம் கார்பன் பவுடர் மட்டும் தடவிக் கொள்கிறார்.

நந்தனா உன்னிக்கிருஷ்ணன்!

நந்தனா உன்னிக்கிருஷ்ணன்!

Autistic spectrum disorder (ASD) மற்றும் attention deficit hyperactivity syndrome (ADHD)-வுடன் ஆக்டிவாக இருக்கும் சிறுமி நந்தனா. இவரால் ஒரு நபரின் உணர்வு மற்றும் எண்ணங்களை படிக்க முடிகிறது. இது ஜோக் அல்ல, உண்மை!

வேலு ராதாகிருஷ்ணன்!

வேலு ராதாகிருஷ்ணன்!

வேலு ராதாகிருஷ்ணன் உண்மையிலேயே வரம்பெற்றவர் என்றே கூற வேண்டும். பல டன் எடை கொண்ட ட்ரெயினை பற்கள் கொண்டு இழுக்கிறார். இவர் தனது குருவிடம் இருந்து உடலின் அனைத்து சக்தியையும் ஒரே உடல் பாகத்தில் கொண்டு வந்து செயற்படுத்தும் முறையை கற்றுள்ளார்.

2003ல் 260 டன் எடை கொண்ட இரண்டு கே.டி.எம் ட்ரெயின்களை இழுத்து சாதனை செய்தார். இவர் கோலாலம்பூர் ரயில் நிலையத்தில் 13 அடி 9 இன்ச் அந்த ட்ரெயின்களை இழுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indians Who Are Blessed With Super Powers!

These humans have super natural powers that can leave you completely shocked…
Subscribe Newsletter