For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்களுக்கு ஒரு நல்ல செய்தி! இந்தியாவின் முதல் ஃப்ரீ காண்டம் ஸ்டோர் வந்தாச்சு!

இந்தியாவில் மட்டுமே 21 இலட்சம் பேர் எச்.ஏய்.வி-யினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஐநா கூறும் தகவல். இது அதிகரிக்காமல் பாதுகாக்க ஆணுறை மிகவும் அவசியம் அமைச்சரே!

By Staff
|

இந்தியர்கள் பான்பராக் போட்டுக் கொண்டு வீதியில் பொளீச், பொளீச் என காறித்துப்புவார்கள், கெட்ட வார்த்தைகளில் சரமாரியாக பேசிக் கொள்வார்கள். ஆனால், காண்டம் / ஆணுறை வாங்க வேண்டும் என்றால் மட்டும்... வெட்கப்படுவார்கள்.

இதற்காகவே சிலர் இப்போது காண்டமை ஆன்லைனில் வாங்கிக் கொள்கிறார்கள். இதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது, வேறு யாராவது அந்த பார்சலை வாங்கிவிட்டால் உங்கள் கதி அதோகதி தான்.

இதற்கு எல்லாம் ஒரு முற்றிப் புள்ளி வைப்பது போல தான் எய்ட்ஸ் சுகாதார பவுண்டேஷன் காண்டம் ஸ்டோர் ஒன்றை ஆரம்பித்துள்ளது. அதுவும் ஆன்லைனில். இதுதான் உலகின் முதல் இலசவ காண்டம் ஸ்டோர்.

இந்தியாவில் மட்டுமே 21 இலட்சம் பேர் எச்.ஏய்.வி-யினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஐநா கூறும் தகவல். இது அதிகரிக்காமல் பாதுகாக்க ஆணுறை மிகவும் அவசியம் அமைச்சரே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்லது தான்!

நல்லது தான்!

ஐநா கூறுவது போல இந்தியாவில் 21 இலட்சம் எச்.ஐ.வி நோயாளிகள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலாளிகள். இவர்கள் கடைகளில் ஆணுறை வாங்க தயக்கம் காட்டுவது இந்த தாக்கத்தின் பெரும் காரணியாக இருக்கிறது.

எனவே, பால்வினை நோய் தாக்கம் இல்லாமல் இருப்பதற்கு இந்த திட்டம் ஒரு உதவியாக இருக்கும்.

ஆன்லைனில்!

ஆன்லைனில்!

இதற்கு அந்த என்.ஜி.ஒ. ஒரு திட்டமும் வகுத்துள்ளது. இந்த இலவச காண்டம் ஸ்டோர் ஒரு மின்னஞ்சல் மூலமாக இயங்குகிறது. மேலும், இதை எளிமை ஆக்க, என்.ஜி.ஒ மொபைல் எண் மூலமாக இதை இயக்கவும் முயற்சித்து வருகிறார்கள்.

இலவச எண்!

இலவச எண்!

இதற்கு தேவை ஒரே ஒரு இலவச எண் எனப்படும் டோல் ஃப்ரீ எண் தான். அந்த எண்ணுக்கு கால் அல்லது மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்பினால், வீட்டுக்கு காண்டம் இலவசமாக வந்துவிடும்.

தொடர்புக் கொள்ள...

தொடர்புக் கொள்ள...

ஒருவர் இலவச காண்டம் வாங்க வேண்டும் என்றால் 1800 102 8102 எண்ணுக்கு கால் செய்ய வேண்டும். அல்லது [email protected] இந்த மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்ப வேண்டும்.

எல்லாம் ஓகே... ஆனா...

எல்லாம் ஓகே... ஆனா...

இப்போது ஜி.எஸ்.டி-க்கு பிறகு காண்டமை காட்டிலும், நாப்கின் மிகவும் அத்தியாவசியமானது என்ற விவாதம் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. சமீபத்தில் ஸ்காட்லாந்து அரசு வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இலவச நாப்கின்கள் வழங்க சட்டம் கொண்டுவந்துள்ளது.

இதை, இந்திய அரசும்... முடிந்தால் இந்த இலவச காண்டம் வழங்குவதை போல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கைக் கோர்த்து இந்தியாவில் நாப்கின் குறித்த பயன்பாடும், மாதவிடாய் காலத்தில் சரியான கருவிகள் பயன்படுத்தாமல் போவதால் பெண்களுக்கு ஏற்படும் சுகாதார / அந்தரங்க பிரச்சனைகள் குறித்தும் விழிப்புணர்வுகள் நடத்த வேண்டும். மேலும், ஸ்காட்லாந்து போல ஏழை, எளிய பெண்களுக்கு இவற்றை இலவசமாக அளிக்க வேண்டும்.

அரிசியை இலவசமாக அளிக்கும் அரசு. ரேஷன் கடைகளில் இதை இலவசமாக தரலாம். இது அத்தியாவசியம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Good News! The World's First Free Condom Store Is In India!

Good News! The World's First Free Condom Store Is In India!
Story first published: Thursday, July 13, 2017, 18:14 [IST]
Desktop Bottom Promotion