இன்றைய அரசியல் சூழலை மாற்ற, தமிழகத்திற்கு தேவையான 9 பேர்!

Posted By:
Subscribe to Boldsky

ஜல்லிக்கட்டு, நீட், விவசாய தற்கொலைகள், காவிரி, மீத்தேன், ஆற்று மணல் அள்ளுவது, நீர் திருட்டு, மின்சார பங்கீடு, நீர்வரத்து தடுக்க அணைகள் என தமிழகம் இந்தியாவின் கால் பகுதியில் இருப்பதால் தான் நசுக்க பார்க்கிறார்கள். நாம் தனியே பிரிந்து வந்துவிட்டால் இந்தியா ஊனமகிவிடும் என்பதை அவர்கள் இன்னும் அறியவில்லை.

தமிழக அரசியல் சூழலில் ஒரு பெரும் புரட்சி தேவைப்படுகிறது. அதை ஏற்படுத்த நடிகர்கள் தான் வர வேண்டும் என்றில்லை. சகாயம் போன்ற நல்ல ஆட்சியர்கள் தான் நமக்கு தேவையான முதல்வர் வேட்பாளர்.

இன்று தமிழகத்தில் எற்பட்டுகொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண, சினிமாவில் பட்டையை கிளப்பிய இந்த ரீல் கதாபாத்திரங்கள் ரியலாக வந்தால் எப்படி இருக்கும்....?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கத்தி - கதிரேசன்!

கத்தி - கதிரேசன்!

விவசாய தற்கொலைகளை தடுக்க, மீத்தேன், ஓ.என்.ஜி.சி பிரச்சனைகளுக்கு விவசாயிகளுக்க குரல் கொடுத்து தலைமை தாங்க ஒரு கத்தி கதிரேசன் அவசியம் நமக்கு தேவை.

ஜென்டில்மேன் - கிச்சா!

ஜென்டில்மேன் - கிச்சா!

எதற்கு எடுத்தாலும் ஜாதி பிரிவினைகள், இந்த படிப்பை இவன் தான் படிக்க வேண்டும் என பாகுபாடு, அதையும் தாண்டி அனிதா போன்ற ஒரு பெண் மருத்துவம் படிக்க வந்தால், ஒரு புதிய தேர்வை புகுத்தி தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுவோம் என்ற பார்வை... இதை எல்லாம் தடுக்க... கல்வியில் சமநிலை பிறக்க நமக்கு தேவை ஒரு கிச்சா!

ஆயுத எழுத்து - மைக்கேல் வசந்த்!

ஆயுத எழுத்து - மைக்கேல் வசந்த்!

நாம் தவறு செய்தால், நமது கடமையை நாம் சரியாக செய்யவில்லை என்றால், மக்கள் அளித்த வாக்கை (ஓட்டு), மக்களுக்கு நாம் (அரசியல்வாதிகள்) அளித்த வாக்கை தவறாக பயன்படுத்தினால், இளைஞர் அரசியலில் காலடி எடுத்து வைக்க சற்றும் தயங்க மாட்டார்கள் என்பதை அரசியல் வாதிகளுக்கு ஒரு பாடமாக புகட்ட நமக்கு தேவை ஒரு மைக்கேல் வசந்த்!

ரமணா - ரமணா சார்!

ரமணா - ரமணா சார்!

நம்மள யாரு புடிக்க போறா...

குண்டும் குழியான ரோடு, அதுல வண்டி ஓட்ட ஒரிஜினல் லைசன்ஸ் காமிக்கணும். காமிச்சா, அது போலி ஒரிஜினல் கொண்டுவா என பணம் பிடிங்கும் அதிகாரிகள். இவர்களுக்கு எல்லாம் பயத்தை கண்முன் நிறுத்த நமக்கு தேவை ஒரு ரமணா!

இந்தியன் - சேனாதிபதி!

இந்தியன் - சேனாதிபதி!

சரியான மருத்துவம் கொடுக்காமல், குழந்தைகளின் உயிரை ஏதோ கிள்ளுக்கீரையாக துச்சமாக கருதிக் மழழை உயிர்களின் இறப்புக்கு காரணமான அதிகாரிகளை தைரியமாக மிரட்ட நமக்கு தேவை ஒரு சேனாதிபதி!

சிட்டிசன் - அறிவானந்தம்!

சிட்டிசன் - அறிவானந்தம்!

தவறு செய்தவர் ஆட்சியராக இருந்தாலும், நீதிபதியாக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும், சட்டம் அனைத்திற்கும் பொது, அனைவரும் கூண்டில் ஏற வேண்டும், அவர்களுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற சூழல் பிறக்க, நமக்கு தேவை ஒரு அறிவானந்தம்!

அந்நியன் - அந்நியன்!

அந்நியன் - அந்நியன்!

கல்வி, மருத்துவம், எரிவாயுன்னு அரசு கையில இருக்க வேண்டியது எல்லாம் தனியார் கைக்கு மாற்றிக் கொடுக்கிறத தடுக்க, நியாத்தை தட்டிக் கேட்க, நமக்கு தேவை ஒரு அந்நியன்!

சிவாஜி - சிவாஜி!

சிவாஜி - சிவாஜி!

எத்தனை முறை பண மதிப்பு இழப்பு கொண்டு வந்தாலும், நம்ம நாட்டுல ஊழல் ஒழிய போறது இல்ல, கறுப்புப்பணம் வெளிவர போறது இல்ல. நல்ல கல்வி, நல்ல அடிப்படை வசதி யாருக்கும் கிடைக்க போறது இல்லை. இத எல்லாம் கொண்டு வர, நமக்கு தேவை ஒரு சிவாஜி!

தம்பி - தம்பி வேலு தொண்டைமான்!

தம்பி - தம்பி வேலு தொண்டைமான்!

அரசியலுக்கு பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் ரவுடி கும்பல்களை வேரோடு அழிக்க, எதிர்த்து போராட நமக்கு தேவை ஒரு தம்பி வேலு தொண்டைமான்!

நாங்க தமிழனாவே இருந்துக்குறோம்...

நாங்க தமிழனாவே இருந்துக்குறோம்...

தமிழத்தின் இன்றைய நிலை இப்படியே தொடர்ந்தால் தனி மாநிலம் கேட்பதில் தவறே இல்லை என சமீபத்தில் ஒரு நிகழ்வில் இயக்குனர் மிஷ்கின் கூறியிருந்தார். இது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.

குஜராத்தில் இறந்தால் இந்திய மீனவன் என்றும், இராமேஸ்வரத்தில் இறந்தால் தமிழக மீனவர் என்றும் செய்தியில் கூட பிரித்து பார்க்கும் நிலை பல வருடங்களாக நாம் எதிர்கொண்டு வரும் கொடுமைகளில் ஒன்று.

இதுவே, ஏ.ஆர். ரகுமான், விஸ்வநாதன் ஆனந்த், மாரியப்பன் தங்கவேல் என்றால் பெருமையாக இந்தியன் என கூறுவார்கள்.

எப்படி வேணுமானாலும் இருக்கட்டும்ங்க... செத்தாலும், பொழச்சாலும் நாங்க தமிழனாவே இருந்துக்குறோம்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

In This Current Situation We Need These Reel Characters as Real in Tamil Nadu!

In This Current Situation We Need These Reel Characters as Real in Tamil Nadu!
Subscribe Newsletter