Latest Updates
-
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும்
தாய் இறந்தது தெரியாமல், பால் குடிக்க முயற்சித்துக் கொண்டிருந்த 17 மாத குழந்தை - வீடியோ!
மத்திய பிரதேஷ் மாநிலத்தில் நடந்த சோகமான காட்சி. தாய் இறந்தது தெரியாமல் பால் குடிக்க முயற்சித்துக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை.
இதை விட சோகமான நிகழ்வு ஒரு குழந்தைக்கு நிகழுமா என்பது தெரியாது. இப்படி ஒரு சம்பவம் யார் வாழ்விலும் நடக்கவும் கூடாது. தனது தாய் இறந்தது கூட அறியாமல் பசியின் கடுமையால் ஒரு குழந்தை மாரில் வாய் வைத்து பால் குடிக்க முயற்சித்து வந்துள்ளது. அவ்வழி சென்ற ஒரு தம்பதி இதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டாமொஹ் மாவட்டம்!
மத்திய பிரதேசத்தில் இருக்கும் டாமொஹ் எனும் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில் தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த தம்பதியர் இந்த காட்சியை கண்டுள்ளனர்.
Image Courtesy - DAILY MAIL UK

காட்சி!
தனது அம்மா இறந்து கிடப்பதை அறியாத 17 மாதமே ஆன பச்சிளம் குழந்தை தனது மாயின் மார்பில் வாய் வைத்து பால் குடிக்க முயற்சித்து கொண்டிருந்துள்ளது. பசியால் அந்த குழந்தை அழுதுக் கொண்டிருந்துள்ளது.
Image Courtesy - KTN News

அதிர்ச்சி!
இந்த காட்சியை கண்ட அவ்வழி சென்ற தம்பதி பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அவர்கள் அருகே இருந்த போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.
Image Courtesy - Cover Asia News

டெய்லி மெயில் யு.கே பதிவு...
டெய்லி மெயில் யு.கே, செய்த பதிவில், அந்த ஜோடி, முதலில் அந்த பெண்ணின் உடலை கண்டதாகவும். பிறகு அருகே சென்று பார்த்த போது தான், பசியில் அழுதபடி இருந்த குழந்தை ஒன்று, இறந்த அந்த பெண்ணின் மாரில் பால் குடிக்க முயற்சித்து கொண்டிருந்ததை கண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
Image Courtesy - Cover Asia News

போலீஸ்!
போலீஸ் அந்த பெண் உடலை பிரேதப்பரிசோதனை செய்ய அனுப்பியுள்ளனர். அந்த குழந்தை ஒரு குழந்தைகள் காப்பகத்தில் பத்திரமாக சேர்க்கப்பட்டுள்ளது.
வீடியோ!
குழந்தையின் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை. அந்த பெண்ணின் குடும்பத்தை கண்டுபிடிக்கும் வரை குழந்தை பாதுகாப்பாக காப்பகத்தில் இருக்கும் என போலீஸ் தெரிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications