Latest Updates
-
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்!
வாழ்வியல் சிறக்க விவேகானந்தர் கூறிய பொன்மொழிகள்!!!
காரத்தை உணராத நாவினால் எந்நாளும் இனிப்பின் முழுமையான சுவை என்ன வென்று உணர முடியாது. தோல்வியை காணாத ஒருவனால் எந்நாளும் வெற்றியின் முழுமையான மகிழ்ச்சியை உணர முடியாது. அதே போல தான் உறவுகளில் சண்டை அல்லது பிரச்சனைகளை எதிர்கொள்ளாத ஒருவனால் உறவின் முழு அன்பு மற்றும் பிரியத்தை உணர முடியாது.
சண்டை, பிரச்சனை போன்றவற்றை எதிர்கொள்வது ஓர் தவத்தை போன்றது, இது உங்கள் பொறுமை மற்றும் நிதானத்தை சோதிக்கும் பயிற்சி. இதில் எவன் ஒருவன் வெற்றிக் கொள்கிறானோ அவனே வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு தன்னை எடுத்து செல்கிறான். இனி , உறவுகள் மற்றும் வாழ்வியல் சிறக்க விவேகானந்தர் கூறிய பொன்மொழிகள் பற்றி காணலாம்....

பொன்மொழிகள்
பலமே வாழ்வு; பலவீனமே மரணம்.
பலத்தை இழக்கும் ஒருவன் தன்னை வாழ்க்கையை மட்டுமின்றி, உயிரையும் இழந்து நடைபிணமாக தான் வாழ்கிறான்.

பொன்மொழிகள்
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

பொன்மொழிகள்
எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்
எழு, விழித்துக் கொள், உன் குறிக்கோளை அடையும் வரை விடா முயற்சியுடன் உழைத்துக் கொண்டே இரு.

பொன்மொழிகள்
வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இந்த மாயத்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.
நன்மை, தீமை பற்றி பகுத்தறியும் புத்தி வந்துவிட்டாலே இவ்வுலகின் மாயை பற்றி புரிந்துக் கொள்ள முடியும். அதே போல நன்மை, தீமை இரண்டும் நிரந்தரம் அல்ல என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

பொன்மொழிகள்
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்.

பொன்மொழிகள்
'இவனை நம்பு' அல்லது 'அவனை நம்பு' என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் -- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.
மற்றவர் பேச்சை கேட்டு, உன் சுய அறிவை இழப்பது தான், உன் வாழ்வியலையும், உறவுகளையும் சிதைக்கும் முதல் செயல்.

பொன்மொழிகள்
வாழ்வில் வேகம் மட்டும் இருந்தால் போதாது, விவேகம் இருக்க வேண்டும்.
வாழ்வில் நாம் முன்னேற வேகம் மட்டும் போதாது, எதிர்காலத்தை பற்றிய சிந்தனை, இந்த நொடி நாம் செய்யும் செயல் அடுத்த நொடியில் எப்படி எதிரொலிக்கும் என முன்கூட்டிய எண்ணத்துடன் விவேகத்துடன் இருக்க வேண்டும். அது தான் உறவுகளும், வாழ்க்கையும் சிறக்க உதவும்.

பொன்மொழிகள்
பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்.
பிறர் முதுகின் பின்னால் பேசும் முறையை கைவிடுதல் வேண்டும். நாம் பேசிய வார்த்தைகள் அவர்களது முகத்திற்கு முன்னால் தெரியவரும் போது, உறவுகள் முழுமையாக சிதைந்துவிடும்.



Click it and Unblock the Notifications
