Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
தொப்புள்கொடி அகற்றப்படாத நிலையில் குப்பையில் சிசு - இன்னும் எத்தனை நாளுக்கு இந்த அவலம்!
குழந்தை என்பது வரம் என்பார்கள். அது கிடைக்க பெறாதவர்களுக்கு மட்டும் தான் தெரியும். இச்சையில் கலந்து கருத்தரித்து குப்பையில் சிசுவை எரியும் அவலம் இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரும்?
எங்கே செல்கிறோம், நீரை அழித்து, காற்றை அழித்து, காட்டை அழித்து, மனித இனத்தையும் அழித்து, நமக்கு வாழ்வளித்த இந்த உலகையும் அழித்து, அடுத்த செவ்வாய் கிரகத்தை அழிக்க பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம். எதற்கு அங்கேயும் பிறந்து சில நிமிடமே ஆன சிசுக்களை குப்பை பைகளில் சுற்றி வீசவா?

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அவலம்? தமிழகம், இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்நிலை பரவி இருக்கிறது என்பது தான் உண்மை. சமீப சில நாட்களாக சென்ற சென்ற வருடம் அட்லாண்டாவில் தெருவில் தொப்புள்கொடி அகற்றப்படாத நிலையில் குப்பையில் வீசப்பட்ட குழந்தையின் காணொளிப்பதிவு மீண்டும் அதிகம் பரவிவருகிறது.
இக்குழந்தை இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறது. குழந்தை என்பது வரம் என்பார்கள். அது கிடைக்க பெறாதவர்களுக்கு மட்டும் தான் தெரியும். இன்றளவும் அங்கும் இங்குமாக ஆங்காங்க இந்த நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டு தான் இருக்கிறது...

காதல் அழிந்துவிட்டது?
காதலுக்கு அழிவில்லை, காதலர்களுக்கு தான் அழிவு என்பார்கள். ஆனால், இன்றும் காதல் அதன் தூய தன்மையோடு விலங்குகள் மத்தியில் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், மனிதர்கள் மனதில் தான் காதல் அழிந்துவிட்டது.

இச்சை போதவில்லையோ...?
உலகில் உள்ள அத்தனை உயிர் இனங்களும் காலநிலை மாற்றம் மற்றும் இனப்பெருக்கும் செய்ய அந்தந்த காலத்தின் போது மட்டுமே உறவில் ஈடுபடுகின்றன. மனிதர்களை தவிர. வேண்டும், வேண்டும் என்ற இச்சை வெறி தான் இதுப் போன்ற சம்பவங்களுக்கு கருவாக இருக்கின்றன.

பித்தனாகும் மனம்!
தனக்கென ஒரு துணை இருப்பினும், வேறு ஒருவர் தேவைப் படுகிறது. அடக்கிக் கொள்ள முடியவில்லையோ? ஆசை எனும் போர்வைக்குள் உறங்கும் அரக்கன் சுவைக் கண்டு விடுகிறான். இறைச்சி ஆவதோ ஒன்றும் அறியா சிறு உயிர்.

யோசிக்க மறக்கும் தருணங்கள்...
வேண்டாத உறவு, வேண்டாத கருத்தரிப்பு என்றால் அதை முதலிலேயே கலைத்துவிடலாமே, குப்பையில் வீசும் பாவத்திற்கு, இந்த பாவம் சிறிது தான். தகாத உறவில் ஈடுபட இல்லாத அச்சம், உங்களுக்காகவே விற்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கி பயன்படுத்த வந்துவிடுகிறது. கருத்தடை வழிகளை பின்பற்றினால், அந்த சிசு வலி இல்லாமல் இருந்திருக்குமே?

என்று முடியும் இந்த அவலம்?
எப்போது முடிவுக்கு வரும் இந்த அவலம். கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும் மனிதர்களாகிய நாம் திருந்த போவதில்லை. மனம் மாறினால் தான் இதற்கு ஒரே முடிவு. அப்பா - அம்மா இழந்து அனாதை ஆவதே கொடிய விஷயம். அப்பா - அம்மா யார் என்று அறியாமல் அனாதையாக வாழ்வது நரகம் போன்றது.
வரும் நாட்களிலாவது இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க வேண்டும்!



Click it and Unblock the Notifications
