2015 லேக்மி ஃபேஷன் வீக் நிகழ்ச்சியைக் காண வந்த பிரபலங்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

2015 ஆம் ஆண்டின் லேக்மி ஃபேஷன் வீக் குளிர்கால விழாக்கால நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் பல நடிகைகளின் விருப்பமான டிசைனரான மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. இந்த கலெக்ஷன்களைக் காண பல்வேறு நடிகர், நடிகைகள் வந்திருந்தனர்.

மேலும் இந்த முறை மனீஷ் மல்ஹொத்ரா ஆண்களுக்கான பல்வேறு உடைகளை வடிவமைத்து வெளியிட்டிருந்தார். மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷனைக் காண பல நடிகர், நடிகைகள் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

இங்கு 2015 ஆம் ஆண்டு லேக்மி ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்களைக் காண வந்த பிரபலங்களின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாரதா கபூர்

சாரதா கபூர்

நடிகை சாரதா கபூர் லேஸ் எம்பிராய்டரி செய்யப்பட்ட மனீஷ் மல்ஹொத்ராவின் மேக்ஸி கவுனில் நிகழ்ச்சியைக் காண வந்திருந்தார்.

தமன்னா

தமன்னா

நடிகை தமன்னா மனீஷ் ஷோவிற்கு முன் நடந்த பாயல் சிங்கால் நிகழ்ச்சிக்கு கருப்பு நிற ஜம்ப்சூட்டை அணிந்தும், பின் மனீஷ் மல்ஹொத்ராவின் நிகழ்ச்சிக்கு ஸ்ட்ராப்லெஸ் மனீஷ் மல்ஹொத்ரா கவுன் அணிந்திருந்தார்.

சோனாலி பிந்த்ரே

சோனாலி பிந்த்ரே

நடிகை சோனாலி பிந்த்ரே, கருப்பு நிற டாப் மற்றும் டெனிம் அணிந்து, ஆண்களுக்காக டிசைன் செய்த மனீஷ் மல்ஹொத்ராவின் சிவப்பு நிற ஷெர்வானியை மேலே அணிந்து வந்திருந்தார்.

ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா சரண் கோபால்ட் நீல நிற மனீஷ் மல்ஹொத்ராவின் உடையை அணிந்து வந்திருந்தார்.

டாப்ஸி

டாப்ஸி

நடிகை டாப்ஸியும் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த நீல நிற ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து வந்திருந்தார்.

தபு

தபு

நடிகை தபு ஸ்கின்னி ஜீன்ஸ் அணிந்து, மனீஷ் மல்ஹொத்ரா டிசைன் செய்த டாப்ஸ் அணிந்து வந்திருந்தார்.

மரியா கொரட்டி

மரியா கொரட்டி

மரியா கொரட்டி டிசைனர் பாயல் சிங்கால் நிகழ்ச்சியை காண, பாயல் சிங்கால் வடிவமைத்த ஓர் உடையை அணிந்து வந்திருந்தார்.

பூமி பெட்னேக்கர்

பூமி பெட்னேக்கர்

நடிகை பூமி பெட்னேக்கர் நிகில் தம்பியின் ஷோவைக் காண சாக்லேட் நிற உடையணிந்து வந்திருந்தார்.

தனிஷா முகர்ஜி

தனிஷா முகர்ஜி

நடிகை தனிஷா முகர்ஜி மனீஷ் மல்ஹொத்ராவின் நிகழ்ச்சியைக் காண ஷீர் உடை அணிந்து வந்திருந்தார்.

நிதா அம்பானி

நிதா அம்பானி

இது தான் நிதா அம்பானி மனீஷ் மல்ஹொத்ராவின் நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறங்கள் கலந்த உடை.

கிரிஸ்டல் டிசோசா

கிரிஸ்டல் டிசோசா

கிரிஸ்டல் டிசோசா, மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த வெள்ளை மற்றும் கருப்பு கலந்த லெஹெங்கா மற்றும் கிராப்-டாப் அணிந்து வந்திருந்தார்.

அர்ஜுன் கபூர்

அர்ஜுன் கபூர்

நடிகர் அர்ஜுன் கபூர் கூட மனீஷ் மல்ஹொத்ராவின் ஆண்களுக்கான கலெக்ஷன்களைக் காண வந்திருந்தார்.

அலி பசல்

அலி பசல்

நடிகர் அலி பசல் கருப்பு நிற சூட் அணிந்து மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்களைக் காண வந்திருந்தார்.

சூரஜ் பஞ்சோலி

சூரஜ் பஞ்சோலி

நடிகர் சூரஜ் பஞ்சோலி வெள்ளை நிற சட்டை மற்றும் நீல நிற சூட் அணிந்து வந்திருந்தார். அவருடன் சூரஜ்ஜின் தாயான ஜரினாவும் வந்திருந்தார்.

கரண் ஜோஹர்

கரண் ஜோஹர்

கரண் ஜோஹர் கருப்பு நிற சூட் அணிந்து மனீஷ் மல்ஹொத்ராவின் ஷோவைக் காண வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lakme Fashion Week Winter-Festive 2015: Celebs Attend Manish Malhotra's Show

We snapped a lot of celebrities who were seated on the front row at Lakme Fashion Week Winter/Festive 2015 for Manish Malhotras show.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter