Latest Updates
-
டல்லான முகத்தை பொலிவாக்கணுமா? அப்ப பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
இந்த 5 சின்னங்களில் ஒன்று கையில் இருந்தாலும் அவர்கள் அரசாள பிறந்தவர்களாக இருப்பார்களாம் - உங்க கையில் இருக்கா? -
புதன் மிதுன ராசியில் வக்ரமடைவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
இதுல உங்கள் விரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்.. -
1/4 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த வித்தியாசமான மசாலா சாதம் செய்யுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்த 5 நபர்களை அவமதிப்பது மிகப்பெரிய பாவமாம் - இவர்களுக்கு நரகம் உறுதியாம் - சாணக்கிய ரகசியம் -
Chronic Disease Awareness Day 2026: நாள்பட்ட நோய்களும்.. அவற்றின் அறிகுறிகளும்.. - விளக்கும் டாக்டர்! -
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது... -
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
2015 இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கின் இரண்டாம் நாளில் ஷோஸ்டாப்பராக வந்த பிரபலங்கள்!!!
நடந்து கொண்டிருக்கும் 2015 ஆம் ஆண்டின் இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கின் இரண்டாம் நாளில் அழகிய டிசைன்களை வடிவமைத்த நகை வடிவமைப்பாளர்களின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. இந்த இரண்டாம் நாளில் வெளிவந்த கலெக்ஷன்களுக்கும் ஷோஸ்டாப்பராக பிரபலங்கள் வந்திருந்தனர்.
இரண்டாம் நாளன்று சூர்யா கோல்ட், IIGJ Delhi, அவந்திகா, துருவ் போன்றவைகள் வெளிவந்தன. இவைகளில் பல்வேறு அழகான வைரம், தங்கம், சில்வர், பிளாட்டினம் போன்றவைகளைக் கொண்டு அழகிய டிசைன்களைக் கொண்டு ஆபரணங்கள் வெளியிடப்பட்டன.
சரி, இப்போது 2015 இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த கலெக்ஷன்களையும், ஷோஸ்டாப்பராக வந்த பிரபலங்களையும் பார்ப்போமா!!!

சோஹா அலி கான்
நடிகை சோஹா அலி கான், சூர்யா கோல்ட்டின் டிசைனரான மணாலி ஜக்தாப் டிசைன் செய்த அற்புதமான கலெக்ஷன்களை அணிந்து தங்க நிற உடையில் ஜொலித்தார். அதிலும் அவர் அணிந்த இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட காதணி, மோதிரம், கிரீடம் போன்றவை அவருக்கு ராணி தோற்றத்தைக் கொடுத்தது.

அதிதி ஆர்யா
2015 ஆம் ஆண்டின் இந்திய அழகியான அதிதி ஆர்யா, IIGJ Delhi-யின் வைர கழுத்தணி, முத்துக்கள் பதிக்கப்பட்ட காதணி மற்றும் நெற்றிச்சுட்டி அணிந்து வந்தது, அவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.

நிதி சுப்பையா மற்றும் அனூஜ் சச்தேவா
IIGJ Delhi-க்கு மேலும் இரண்டு ஷோஸ்டாப்பர்கள் வந்தனர். அதில் நிதி பல அடுக்குகள் கொண்ட தங்க நெக்லேஸ் மற்றும் காதுகளுக்கான கஃப் அணிந்தும், அனூஜ் பட்டன் செயின் கொண்ட சூட் அணிந்தும் ராம்ப் வாக் நடந்தனர்.

ஸ்வேதா சால்வே
டிசைனர் அவந்திகாவிற்கு ஷோஸ்டாப்பராக ஸ்வேதா சால்வே வந்திருந்தார். இதில் ஸ்வேதா ரூபி மற்றும் மரகத கற்கள் பதிக்கப்பட்ட சிவப்பு கற்களால் ஆன செயினை அணிந்து வந்திருந்தார்.

ஈவ்லின் ஷர்மா
நடிகை ஈவ்லின் ஷர்மா துருவ் ஜூவல்லரி கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். அப்போது ஈவ்லின் லேஸ் காலர் வைர நெக்லேஸ் மற்றும் வைர பிரேஸ்லெட் அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications