இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள் ஷோஸ்டாப்பராக வந்த பிரபலங்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

2015 ஆம் ஆண்டின் இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கின் முதல் நாளில் எண்ணற்ற நகை வடிவமைப்பாளர்களின் டிசைன்கள் வெளிவந்தன. அதில் முதலில் வெளிவந்தது கீதாஞ்சலி நகைகள் தான். இதற்கு ஷோஸ்டாப்பராக வந்தவர் நடிகை சோனம் கபூர். இதுப்போல் வேறுசில டிசைனர்களின் நகைகளும் வெளிவந்தது.

இங்கு 2015 இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கின் முதல் நாளில் வெளிவந்த டிசைனர்களின் நடிகைகளும், அதற்கு ஷோஸ்டாப்பராக வந்த பிரபலங்களின் போட்டோக்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சானியா மிர்சா

சானியா மிர்சா

சானியா மிர்சா டிசைனர் மோனி அகர்வால் டிசைன் செய்த நகைகளுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். மேலும் சானியா மிர்சா ராம்ப் வாக் நடக்கும் போது, அழகாக பட்டுப்புடவை அணிந்து, டிசைனர் வடிவமைத்த கமர்பந்த் மற்றும் வைர நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார்.

ஜூஹி சாவ்லா

ஜூஹி சாவ்லா

நடிகை ஜூஹி சாவ்லா தனிஷ்க்கிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். அதிலும் சிவப்பு நிற உடையணிந்து, ராணி ஹார் நெக்லேஸ், காக்டைல் மோதிரம் மற்றும் நெற்றிச்சுட்டி அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

சோனம் கபூர்

சோனம் கபூர்

நடிகை சோனம் கபூர் கீதாஞ்சலி ஜெம்ஸ் நகைகளுக்காக ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். மேலும் இவர் ராம்ப் வாக் நடக்கும் போது பேக்லெஸ் உடை அணிந்து, மரகதம் மற்றும் வைர கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்திருந்தார்.

ஊர்வசி சர்மா மற்றும் அனு மாலிக்

ஊர்வசி சர்மா மற்றும் அனு மாலிக்

முதல் நாளில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் பிரபலங்கள் ஊர்வசி சர்மா மற்றும் அனு மாலிக், அவர்களின் குழந்தைகளுடன் டிசைனர் ஜூவல்லரிக்காக ராம்ப் வாக் நடந்தார்.

சித்ரங்கதா சிங்

சித்ரங்கதா சிங்

நடிகை சித்ரங்கதா சிங், ஷோபா ஸ்ரீநகர் என்னும் டிசைனருக்காக ராம்ப் வாக் நடந்தார். அதுவும் சிவப்பு நிற லெஹெங்கா அணிந்து, கோல்டன் நெக்லேஸ், மோதிரத்துடன் இணைக்கப்பட்ட பிரேஸ்லெட், செயின் கொண்ட காதணி அணிந்து அழகாக ராம்ப் வாக் நடந்து வந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

India International Jewellery Week 2015: Day 1 Celebrity Showstoppers

Day 1 at the India International Jewellery Week 2015, we saw a lot of celebrities walking the ramp in style. Take a look at these divas.
Story first published: Tuesday, August 4, 2015, 16:34 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter