உலக வரலாற்றில் பெரும் புரட்சியும், அழியா தடமும் பதித்த சாதனை மனிதர்கள்!!!

By John

பிறக்கும் போதே அனைவரும் பணக்காரனாகவோ, புத்திசாலியாகவோ பிறப்பது அல்ல. ஆனால், அள்ள அள்ள குறையாத செல்வமுள்ள இந்த பூமியில் இறக்கும் போதும் ஏழையாக, அறிவும், பண்பும் வளர்த்துக்கொள்ளாமல், அறிவிலியாக இறப்பது நாமே நமக்கு செய்துக்கொள்ளும் துரோகம்.

உலக வரலாற்றில் பெரும் மாற்றங்கள் மற்றும் புரட்சி ஏற்படுத்திய கடிதங்கள்!!!

நாம் இப்போது இப்படி மிக வசதியாக, உடல் வேலை குறைவாக செய்துக்கொண்டு ஸ்மார்ட் போன்களில் உலகை சுற்றி வர, சுதந்திரமாக, தனி மனித உரிமையோடு வாழ எவ்வளவோ பேர் தானது உயிரை தியாகம் செய்து, அழியா புகழ் அடைந்துள்ளனர்.

உலகின் சில நாடுகளில் வழங்கப்படும் விசித்திரமான இராணுவ பயிற்சிகள் !!!

அவர்கள் சென்ற பாதையும், தளமும் கரடுமுரடாக இருந்தாலும், அதில் அழியாத வண்ணம் தங்களது தடத்தை பதித்து சென்றவர்கள் அவர்கள். வரலாற்றில் நாம் மறக்க கூடாத சில உலக அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை பற்றி ஓர் சிறிய நினைவு கூறும் கட்டுரை தான் இது...,

நகைச்சுவை நடிகர்கள் வாழ்வில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவங்கள் : சிறப்பு கட்டுரை!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வில்லியம் ஷேக்ஸ்பியர்

வில்லியம் ஷேக்ஸ்பியர்

தனது சிறப்பான இலக்கிய ஞாலத்தினால், அழியாத கவிதைகளும், காவியங்களும் படைத்து சென்றவர் வில்லியம் ஷேக்ஸ்பியர். இன்றளவும், ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டுமானால், இவரது துணையின்றி இயலாது என்று தான் கூற வேண்டும். ஏன் நம்ம ஊர் பாட புத்தகத்தில் கூட எவ்வளவு வில்லியம் ஷேக்ஸ்பியர் பாடல்களையும், கதைகளையும் படித்து தானே நாம் வளர்ந்திருக்கிறோம்.

வால்ட் டிஸ்னி

வால்ட் டிஸ்னி

குழந்தைகளின் கேளிக்கைக்கும், மகிழ்ச்சிக்கும் ஆதாரமாய் இருப்பது டிஸ்னி. ஓர் தனி மனித உழைப்பினால் இன்று அனிமேஷன் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது லேசுப்பட்ட காரியமல்ல. இன்று நாம், நமது கற்பனையில் உதிக்கும் பலவற்றை நேரில் திரையில் காண இவரது உழைப்பு தான் விதையாக இருந்தது. இவர் இல்லாமல் மிக்கி மவுஸில் இருந்து இன்றைய பாகுபலி வரை எதுவும் சாத்தியமில்லை.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர், இவரது எண்ணமும், உழைப்பும் தான் இன்றைய ஸ்மார்ட் போன் உலகின் அச்சாணி. இன்று நாம் உலகம் மொத்தத்தையும் உள்ளங்கையிலேயே சுற்றி பார்க்கிறோம் எனில், அது இவரது அயராத உழைப்பினால் தான்.

பிளாடோ (Plato)

பிளாடோ (Plato)

தத்துவ ஞானி சாக்ரட்டீஸின் முதன்மை சீடர் பிளாடோ. எண்ணற்ற தத்துவங்களும், வரலாறு, கலை, மனிதம், குடும்பம், ஆன்மிகம் பற்றி எல்லாம் எடுத்துரைத்தவர்.

லியோனார்டோ டா வின்சி

லியோனார்டோ டா வின்சி

உலக அளவில் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தலை சிறந்த ஓவியர் லியோனார்டோ டா வின்சி. இவர் வரைந்த பல ஓவியங்கள் "மாஸ்டர் பீஸ்" என்று புகழாராம் சேர்க்கப்பட்டது. இன்று இவ்வளவு தொழில்நுட்ப வசதிகளில் செய்யப்படும் கலைநயத்தை, இவர் அப்போதே செய்துவிட்டார்.

பீத்தோவன்

பீத்தோவன்

தனது இசையால் உலகையே மயக்கியவர். இசைக்கு மறு பெயரை விளங்கியவர். காலப் போக்கில் இவருக்கு காது கேட்கும் திறன் குறைந்த போதும் கூட, இவ்வுலகை விட்டு பிரிக்க முடியாத இசையை பரிசளித்து சென்றவர்.

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

உலகெங்கிலும் விடுதலைக்காக போர்கள் மூண்டுக் கொண்டிருந்த போது, அகிம்சையால் விடுதலை பெற்று உலகையே தன் பக்கம் திருப்பியவர் காந்தி.

மார்டின் லூதர் கிங் ஜூனியர்

மார்டின் லூதர் கிங் ஜூனியர்

அநீதிக்காகவும், குற்ற செயல்களையும், இனம் வாதத்தையும் எதிர்த்து போராடியவர் மார்டின் லூதர் கிங் ஜூனியர். இன்று உலகில் இனவாதம் கொஞ்சமாவது குறைந்திருக்கிறது என்றால் அதில் இவரது பங்கு பெருமளவில் இருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

நிகோலா டெஸ்லா (Nikola Tesla)

நிகோலா டெஸ்லா (Nikola Tesla)

இன்றைய மாடர்ன் தொழில்நுட்பத்திற்கு இவர் ஓர் முன்னோடி, இப்போது நாம் போகுமிடமெல்லாம் உபயோகப்படுத்தும் "Wi-Fi"க்கு இவரை தந்தை என்று கூட குறிப்பிடலாம். மற்றும் ப்ரீ எனர்ஜி எனப்படும் இவரது கோட்பாடு மிகவும் பிரபலமானது.

அரிஸ்டாட்டில்

அரிஸ்டாட்டில்

சாக்ரட்டீஸ், பிளாடோவை தொடர்ந்து இவர்களது சீடனாய் வந்தவர் அரிஸ்டாட்டில். பெரும் ஞானம் கொண்டவர். மேற்கத்திய கொள்கைகள் மற்றும் வழிகளை மாற்றி அமைத்ததில் பெரும் பங்கு வகிப்பவர் அரிஸ்டாட்டில். இவரது தத்துவங்கள் அனைத்தும் இவரது புகழுக்கு பறைசாற்றும்.

கிளியோபாட்ரா

கிளியோபாட்ரா

பெண் சக்திக்கு வரலாற்று சான்றாய் விளங்குபவள் கிளியோபாட்ரா. ஆணாதிக்கம் நிறைந்திருந்த போதே, தனது மேலாண்மை திறன் மற்றும் ஆட்சி செயல்திறன் கொண்டு நாட்டை ஆண்டவள். அழகுக்கு மாட்டுமே கிளியோபாட்ராவை உவமையாக எடுத்துரைப்பவர்கள், வீரத்திற்கும் இவள் பெயர்போனவள் என்று மறந்துவிட கூடாது.

சாக்ரட்டீஸ்

சாக்ரட்டீஸ்

உலகின் மாபெரும் தத்துவஞானி என்று புகழப்படும் நபர். மேற்கத்திய தத்துவங்களின் தந்தை இவர். இவரின்றி அவை எல்லாம் சத்தியமே இல்லை. சாக்ரடீஸ் கூறிய தத்துவங்கள் யாவும், உலகம் அழியும் வரை மனிதர்களுக்கு ஓர் பாடமாய் அமைந்திருக்கும்.

அலெக்சாண்டர்

அலெக்சாண்டர்

அலெக்சாண்டர், மாவீரன், மாமன்னன். உலகையே வென்று, தன் காலுக்கு கீழே ஆட்சி புரிவேன் என்று சொன்னது போல ஆட்சியையும் செய்து காட்டிய ஆண்மகன். வெற்றியின் தத்து பிள்ளை. தான் இறந்த பிறகு, தனது கைகளை சவப்பெட்டிக்கு வெளியே தொங்கும் படி செய்ய கூறினார், ஏனெனில் அப்போது தான் தனது மக்களுக்கு, உலகையே ஆண்டாலும் கூட, மரணமடைந்த பிறகு நாம் வெறும் கையுடன் தான் செல்ல வேண்டும் என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்று எண்ணினார் அலெக்சாண்டர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion