Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
இன்ஜினியரிங் படித்துவிட்டு வேறு துறைகளில் சாதித்த பிரபலங்கள்!!!
இன்ஜினியரிங் என்பது இன்றைய தலைமுறை மாணவர்களின் சாபக்கேடாக தான் இருக்கிறது. இதற்கு பெற்றோரை தான் காரணம் கூற வேண்டும். தங்கள் பிள்ளைகளுக்கு என்ன படிக்க பிடிக்கிறது என்பதை அறிந்துக்கொள்ளாமல், அக்கம், பக்கத்தார், உறவினர், நண்பர்கள், உடன் பணிபுரிவோர் பேச்சை கேட்டு இன்ஜினியரிங் சேர்த்துவிடும் கூட்டம் ஒரு பக்கம்.
மார்பகப் புற்றுநோயுடன் போராடிய பிரபலங்கள்!!
என் கனவை நீதான் மெய்பிக்க வேண்டும் என்று, தங்கள் கனவை திணித்து, குழந்தைகளின் கனவுகளை சிதைக்கும் கூட்டம் ஒரு பக்கம். இந்த இரு கூட்டங்களின் தீராத ஆசையினால் தான், இன்று பல இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர்கள் வெறும் கல்லாய் ஊரிக் கொண்டிருக்கின்றனர்.
சிறு வயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிரபலங்கள்!!
நீங்கள் தினம் தோறும் பார்த்து ஆச்சரியப்படும் சில பிரபலங்களும், இன்ஜினியரிங் படித்துவிட்டு தான் இன்று, அவர்களுக்கு பிடித்த வேறு துறைகளில் சாதித்துக் கொண்டிருக்கின்றனர், என்பதை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதன் பிறகாவது பிள்ளைகளின் ஆசை மற்றும் கனவுகளுக்கு வழியை காட்டி, நல்ல வழிக்காட்டியாக இருப்போம்....
சொட்டை விழுந்த பின் தலையில் முடி நட்டு வந்த இந்திய பிரபலங்கள்!!!

அணில் கும்ப்ளே
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலை சிறந்த சுழற்பந்துவீச்சாளருமான அணில் கும்ப்ளே மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். இவர் தனது இன்ஜினியரிங் படிப்பை ராஷ்ற்றீயா வித்யாலயா பொறியியல் கல்லூரியில் கடந்த 1991 - 92ஆம் ஆண்டுகளில் படித்து முடித்தார்.

ஹர்ஷா போக்லே
உலகின் முன்னணி கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே வேதியல் இன்ஜினியரிங் படித்தவர் ஆவார். ஒஸ்மானியா பல்கலைகழகத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த இவர், அகமதாபாத் ஐ.ஐ.எம்-ல் PGDM'யும் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோவன் அட்கின்சன் (மிஸ்டர்.பீன்)
பிரபலமான மிஸ்டர். பீன் கதாபாத்திரத்தில் தோன்றிய முன்னணி ஹாலிவுட் நடிகர் ரோவன் அட்கின்சன் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படித்தவர் ஆவார்.

கெளதம் வாசுதேவ் மேனன்
தென்னிந்தியாவின் பிரபல திரைப்பட இயக்குனாரான கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு இயக்குனர் ஆனார் என்பது பெரும்பாலானோர் அறிந்தது தான்.

சங்கர் மகாதேவன்
இந்தியாவின் பிரபல பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவனும் கூட, தனது பெற்றோரின் ஆசை படி பொறியியல் படித்துவிட்டு, பிறகு தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள பாடகராக உருவெடுத்து வெற்றியும் கண்டார்.

சார் அல்பிரேட் ஹிட்ச்காக்
பிரபல ஹாலிவுட் திரைப்படமான "சைக்கோ"வின் (Psycho) இயக்குனரான இவர் ஓர் மெரைன் இன்ஜினியர். காலம் இவரை ஓர் திரில்லர் இயக்குனாராக மாற்றிவிட்டது.

சேட்டன் பகத்
இந்தியாவின் பிரபல நாவல் எழுத்தாளரான சேட்டன் பகத் ஐ.ஐ.டி-யில் படித்தவர். நண்பன் (3-idiots) இவர் எழுதிய புத்தகத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் டெல்லி ஐ.ஐ.டி-யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் அகமதாபாத் ஐ.ஐ.எம்-ல் எம்.பி.ஏ-வும் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகார்ஜுனா
தெலுங்க திரைப்பட முன்னணி நட்சத்திரமான நாகார்ஜுனா ஆட்டோ-மொபைல் பட்டப்படிப்பில் எம்.எஸ் முடித்தவர். ஈஸ்டர்ன் மிச்சிகன் பல்கலைகழகத்தில் எம்.எஸ். முடித்தார்.

சோனு சூட்
"அருந்ததி" மற்றும் ஷாருக்கானின் "ஹேப்பி நியூயர்" போன்ற படங்களின் மூலம் பிரபலமடைந்த நடிகர் சோனு சூட் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்தவர். அதன் பிறகு தனக்கு பிடித்த மாடலிங் துறையில் நுழைந்து, இப்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி வில்லனாக நடித்து வருகிறார்.

சுஷ்ந்த் சிங் ராஜ்புட்
பாலிவுட்டில் தடம் பதிப்பதற்கு முன்பே, இவர் டெல்லியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தான் வந்தார்.



Click it and Unblock the Notifications