Latest Updates
-
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
விருது விழா ஒன்றிற்கு கருப்பு நிற கவுனில் சிக்குன்னு க்யூட்டா வந்த ஐஸ்வர்யா ராய்!
சமீபத்தில் 2015 ஆம் ஆண்டின் HT மோஸ்ட் ஸ்டைலிஷ் அவார்டு என்னும் மிகவும் ஸ்டைலானவர்களுக்கான விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு எண்ணற்ற பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மாமனார் அமிதாப் பச்சனுடன் வந்திருந்தார். அதுமட்டுமின்றி, இந்த விழாவிற்கு நடிகை தீபிகா படுகோனே படு கவர்ச்சியான உடையில் வந்திருந்தார். சோனம் கபூர், சோனாக்ஷி சின்ஹா போன்றோரும் வந்திருந்தனர்.
இங்கு HT மிகவும் ஸ்டைலானவர்களுக்கான விருது விழாவிற்கு வந்திருந்த பிரபலங்களும், நடிகை ஐஸ்வர்யா ராய் மேற்கொண்டு வந்த ஸ்டைலும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மாமனார் மற்றும் கணவருடன் ஐஸ்
இது அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் மூவரும் ஒன்றாக சேர்ந்து விருது விழாவில் எடுத்த போட்டோ.

கருப்பு நிற கவுனில் ஐஸ்
ஐஸ்வர்யா ராய் பச்சன் ப்ரில் கொண்ட கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் சிக்கென்று வந்திருந்தார்.

அபிஷேக் மற்றும் அமிதாப்
அபிஷேக் பச்சன் மெரூன் நிற பந்த்கலா மற்றும் கருப்பு நிற பேண்ட்டிலும், அமிதாப் பச்சன் கருப்ப நிற சட்டை பேண்ட் போட்டு, மேலே வெள்ளை நிற கோட் அணிந்து வந்திருந்தனர்.

ஐஸ்வர்யாவின் மேக்கப்
ஐஸ்வர்யா ராய் கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு, கன்னங்களுக்கு லேசாக பிளஷ் அடித்து, உதட்டிற்கு லைட்டாக லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

தீபிகா படுகோனே
நடிகை தீபிகா படுகோனே வெள்ளை நிற டீப் நெக் கொண்ட கவுனில் சற்று கவர்ச்சியாக வந்திருந்தார்.

சோனம் கபூர்
சோனம் கபூர் எலீசாப் கவுனில் வந்திருந்தார்.

சோனாக்ஷி சின்ஹா
நடிகை சோனாக்ஷி சின்ஹா வெள்ளை நிற நிக்ஷா லுல்லா கவுனில் வந்திருந்தார்.

ஸ்டைலிஷ் தம்பதியர்
இந்த விருது விழாவில் மிகவும் ஸ்டைலான தம்பதியர் என்ற விருதை அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் பெற்றனர்.



Click it and Unblock the Notifications
