நவராத்திரியை ஏன் வருடத்திற்கு இரண்டு முறை கொண்டாடுகிறோம்?

By: Ashok CR
Subscribe to Boldsky

நவராத்திரி வருடத்தில் இரண்டு முறை கொண்டாடப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. குளிர் கால தொடக்கத்தில் (செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களின் இடைப்பட்ட காலத்தில்) கொண்டாடப்படும் அஷ்வினா நவராத்திரி தான் புகழ்பெற்றதாகும். வெகு சிலருக்கே சைத்ர நவராத்திரியை பற்றி தெரியும். கோடைக்கால தொடக்கமான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் இடைப்பட்ட காலத்தில் இது கொண்டாடப்படும். இந்த இரண்டு நவராத்திரிகளுமே துர்கை, பார்வதி என பல இடங்களில் பல விதமாக அழைக்கப்படும் கடவுள்களின் தாயான சக்தி தேவிக்காக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் கொண்டாடப்படும் நவராத்திரியின் வகைகள்!!!

நவராத்திரியை ஒன்பது நாட்களுக்கு கொண்டாடுவதற்கும். வருடத்தில் இரண்டு தடவை கொண்டாடுவதற்கும் சில முக்கியமான காரணங்கள் உள்ளது. ஆன்மிகம், இயற்கை மற்றும் புராண காரணங்கள் இதில் அடக்கம். இந்த அனைத்து காரணங்களால் தான் நவராத்திரி ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை கொண்டாடப்படுகிறது.

வீட்டில் கொலு வெச்சுருக்கீங்களா? இதோ சில சூப்பர் டிப்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வானிலை மாற்றம்

வானிலை மாற்றம்

வானிலை மாற்றத்தின் போது தான் இரண்டு நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது என்பதை கூர்ந்து கவனித்தால் புரியும். கோடை மற்றும் குளிர் காலம் தொடங்குவதற்கு சற்று முன்பாக தான் இயற்கை அன்னை பெரிய மாற்றங்களுக்கு உள்ளாவார். அதனால் தான் அதனை கொண்டாடும் விதமாக, இயற்கையாக கருதப்படும் சக்தி தேவியை வழிபட்டு நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பகல் மற்றும் இரவின் நீளம்

பகல் மற்றும் இரவின் நீளம்

விஞ்ஞானத்தின் படி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு நடுவே உள்ள நாட்களிலும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு நடுவே உள்ள நாட்களிலும், பகல் மற்றும் இரவின் நீளம் சரிசமமாக இருக்கும். அதனால் கோடைக்காலம் மற்றும் குளிர்காலம் தொடங்கும் வேளையில் சரியாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது என்பது விஞ்ஞான ரீதியாக புலப்படுகிறது.

இனிமையான வானிலை

இனிமையான வானிலை

இரண்டு நவராத்திரிகளும் வானிலை இனிமையாக இருக்கும் போது கொண்டாடப்படுகிறது. கொளுத்தும் வெயிலையும் அனுபவிக்க தேவையில்லை; அதே போல் உறைய வைக்கும் குளிரையும் அனுபவிக்க வேண்டும். வானிலை மிதமாக இருப்பதால், இந்த இரண்டு நேரமும் கொண்டாட்டத்திற்கு சரியான நேரமாக இருக்கும்.

ராமபிரானின் பூஜை

ராமபிரானின் பூஜை

கோடை தொடங்குவதற்கு சற்று முன்பாக தான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது என இந்து மத புராணத்தில் நம்பப்படுகிறது. ஆனால் ராவணனுடன் போரில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, துர்கை அம்மனின் ஆசீர்வாதத்தை வாங்க இன்னொரு 6 மாதங்களுக்கு காத்திருக்க ராமபிரான் விரும்பவில்லை. அதனால் குளிர் காலத்திற்கு முன்பாக நவராத்திரி கொண்டாடும் பழக்கத்தை அவர் கொண்டு வந்துள்ளார். இலங்கைக்கு செல்வதற்கு முன்பாக அவர் துர்கை பூஜை புரிந்து, திரும்பி வரும் போது வெற்றியுடன் வந்தார்.

நவராத்திரியின் முக்கியத்துவம் இரண்டு நேரத்திலும் ஒரே மாதிரி தான் உள்ளது. அந்த காலமே இயற்கையின் வெளிப்பாடாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Navratri Is Celebrated Twice In A Year?

Have you ever wondered by Navratri is celebrated twice in a year? If you want to know why Navratri is celebrated for ninne days twice in a year, read on.. 
Please Wait while comments are loading...
Subscribe Newsletter