Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
'லைப் ஓகே' விருது விழாவிற்கு அழகான அனார்கலியில் வந்த வித்யா பாலன்!!!
சமீபத்தில் நடிகை வித்யா பாலன் 'லைப் ஓகே' விருது விழாவில் பங்கு கொண்டார். அப்படி பங்கு கொள்ளும் போது, மிகவும் அழகான அனார்கலி உடையில் வந்திருந்தார். அதுமட்டுமின்றி, பொருத்தமான மேக்கப் போட்டு க்யூட்டாக வந்திருந்தார். பொதுவாக மேக்கப் சென்ஸ் குறைவாக கொண்ட வித்யா பாலன், இந்த விருது விழாவிற்கு உடைக்கு பொருத்தமான மேக்கப் போட்டு வந்திருந்தது, அனைவரது பார்வையையும் அவர்மேல் விழ வைத்தது.
இங்கு 'லைப் ஓகே' விருது விழாவிற்கு வித்யா பாலன் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மனீஷ் மல்ஹொத்ராவில் வித்யா பாலன்
வித்யா பாலன் டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த நீளமான அனார்கலி உடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடையானது ஃபுல் ஸ்லீவ் கொண்டுள்ளது.

வித்யா பாலனின் காதணிகள்
வித்யா பாலன் நீளமான கோல்டன் மற்றும் முத்து கலந்த காதணியை அணிந்து வந்திருந்தார். காதணி பெரியதாக இருந்ததால், அவரது முகம் பளிச்சென்று அழகாக காணப்பட்டது.

வித்யா பாலனின் மேக்கப்
வித்யா பாலன் இந்த முறை மிகவும் அழகான மற்றும் அளவான மேக்கப் போட்டு, உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக்கையும், கண்களுக்கு மை போட்டும் வந்திருந்தார்.

வித்யா பாலனின் ஹேர் ஸ்டைல்
வித்யா பாலன் தற்போது 'பாபி ஜாசோஸ்' ஹேர் ஸ்டைலை அதிகம் பின்பற்றுகிறார். இருப்பினும் இந்த ஹேர் ஸ்டைலும், உடைக்கு பொருத்தமாகத் தான் உள்ளது.

மோதிரம்
வித்யா பாலன் உடைக்கு மேட்ச்சான காக்டைல் மோதிரம் அணிந்து வந்திருந்தார்.

சில்வர் காலணி
வித்யா பாலன் அனார்கலி உடைக்கு சில்வர் நிற காலணி அணிந்து வந்திருந்தார். இந்த காலணி அவ்வளவு பொருத்தமாக இல்லாவிட்டாலும், உடை நீளமாக இருப்பதால் மறைந்துவிடுவதால், ஒன்றும் அவ்வளவு அசிங்கமாக புலப்படவில்லை.

மொத்தத்தில் அழகு ராணி
மொத்தத்தில் வித்யா பாலன் இத்தனை நாட்கள் பின்பற்றி வந்த ஸ்டைலை விட, இந்த முறை அழகாகவும், க்யூட்டாகவும் உள்ளார்.



Click it and Unblock the Notifications
