Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
2014 லாக்மி ஃபேஷன் வீக்கில் அழகு நடை போட்ட சுஷ்மிதா சென்!
அனைவரும் எதிர்பார்த்திருந்த 2014 ஆம் ஆண்டின் லாக்மி ஃபேஷன் வீக்கானது ஆரம்பமாகிவிட்டது. இந்த ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் டிசைனர் அமித் அகர்வாலின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. மேலும் இவர் ஃபேஷன் வீக்கின் முதல் நாளை அசத்தும் விதமாக, தாம் வடிவமைத்து வெளியிடும் ஆடைகளுக்கு ஷோஸ்டாப்பராக முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் மற்றும் நடிகையுமான சுஷ்மிதா சென் அவர்களை கொண்டு வந்தார்.
அதிலும் சுஷ்மிதா சென் அணிந்து வந்த கருப்பு நிற ஷீர் கவுன் அவருக்கு அட்டகாசமான தோற்றத்தைக் கொடுத்தது. அதுமட்டுமின்றி, அமித் தான் வடிவமைத்த உடைகளை அணிந்து வரும் மாடல்களக்கு 3-D ஆபரணங்களை அணிவித்து ராம்ப் வாக் நடக்க வைத்தது, அவரது கலெக்ஷன்களின் அழகை இன்னும் வித்தியாசப்படுத்தி அழகாக வெளிக்காட்டியது. இங்கு லாக்மி ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் வெளிவந்த அமித் அகர்வால் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

புடவை வடிவ கவுன்கள்
அமித் அகர்வாலின் கலெக்ஷன்களில் புடவை வடிவ கவுன்கள் இடம் பெற்றிருந்தன.

கச்சிதமான கவுன்
அமித் கலெக்ஷன்களில் ஒருசில கவுன்கள் உடலை அழகாக வெளிக்காட்டும் வகையில் கச்சிதமாக உடலை ஒட்டியவாறு இருந்தன.

இறக்கை போன்ற ஸ்லீவ்ஸ்
அமித் அகர்வாலின் கலெக்ஷன்களில் ஒருசில ஆப்பிரிக்க பழங்குடியினரின் ஆடைகள் போன்றும், இறக்கை போன்ற ஸ்லீவ்களையும் கொண்டிருக்கும்.

வித்தியாசமான புர்கா
அமித் அகர்வாலின் கலெக்ஷன்களில் இஸ்லாமிய பெண்கள் அணியுமாறு அழகான மற்றும் வித்தியாசமான புர்காக்களும் இடம் பெற்றிருந்தன.

பெப்லம் டிசைன்கள்
அமிர் அகர்வாலின் கலெக்ஷன்களில் உள்ள ஒருசில கவுன்கள் பெப்லம் டிசைன்களில் இருக்கும். அதாவது இடுப்பில் புஷ் என்று இருக்கும்.

விராப் கவுன்கள்
பெரும்பாலான கவுன்கள் விராப் கவுன்கள் போன்று இடுப்பில் கட்டிக் கொள்வது போன்று காணப்படும்.

ஷீர் உடலமைப்பு
முக்கியமாக அமித் அகர்வாலின் கலெக்ஷன்களில் ஷீர் மற்றும் கோடு போட்டவாறான டிசைன்கள் இடம் பெற்றிருந்தன.

டீப் நெக் உடைகள்
அதுமட்டுமின்றி, இவர் வடிவமைத்து வெளியிட்ட உடைகள் அனைத்தும் டீப் நெக் கொண்டிருக்கும்.

3-D ஆபரணங்கள்
குறிப்பாக அமித் அகர்வால் வடிவமைத்த ஆடைகளை அணிந்து வந்த மாடல்கள் அனைவரும் குட்டிச்சாத்தான்கள் போன்று காதுகளுக்கு ஒருவித வளையத்தை அணிந்து வந்திருந்தனர்.

தலைக்கவசம்
அதுமட்டுமல்லாமல், ஹேர் பேண்ட் போன்று, தலைக்கவசமும் அணிந்து வந்திருந்தனர்.

ஷோஸ்டாப்பர்
அமித் அகர்வால் நடிகை சுஷ்மிதா சென் அவர்களைத் தான் ஷோஸ்டாப்பராக கொண்டு வந்திருந்தார்.

கருப்பு நிற ஷீர் கவுன்
இது தான் சுஷ்மிதா சென் அணிந்து வந்த கருப்பு நிற ஷீர் கவுன். இதில் இவர் மிகவும் அட்டகாசமாக காணப்படுகிறார் தானே!



Click it and Unblock the Notifications
