Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
இந்தியா ரிசார்ட்வியர் ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் வெளிவந்த கலக்கலான ஆடைகள்!!!
நேற்று மும்பையில் இந்தியா ரிசார்ட்வியர் ஃபேஷன் வீக் நடைபெற்றது. அந்த ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் எப்போதும் வித்தியாசமான கலெக்ஷன்களை வடிவமைக்கும் ஏஸ் டிசைனரான ப்ரியாக கட்டாரியா பூரியின் ஆடைகள் வெளிவந்தன. இவர் இந்த ஃபேஷன் வீக்கில் பல வண்ணங்கள் கலந்த, விசித்திரமான, அதே சமயம் கவர்ச்சியாக இருக்கும் பல ஆடைகளை வெளியிட்டார்.
அதுமட்டுமின்றி, இவர் வடிவமைத்த ஆடைகளை மற்ற டிசைனர்களுடன் ஒப்பிட முடியாத அளவில் வடிவமைத்து வெளியிட்டுள்ளார். அந்த ஆடைகளைப் பார்க்க ஆவலாக உள்ளதா? அப்படியானால் இங்கு தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக ப்ரியா கட்டாரியா பூரி வடிவமைத்த ஆடைகளை உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளது. அதைப் பார்த்து, அவற்றில் எது உங்களுக்கு பிடித்துள்ளது என்று சொல்லுங்கள்.

எலுமிச்சை பச்சை
ப்ரியா கட்டாரியா பூரி வடிவமைத்த ஆடைகளில் மிகச்சிறந்த ஆடை தான், இந்த சில்வர் எம்பிராய்டரி கொண்ட எலுமிச்சை பச்சை நிற கவுன்.

ரொட்ரோ நிறங்கள்
இந்த ரெட்ரோ லுக்கானது மிகவும் ஸ்டைலாக காணப்படுகிறது. அதிலும் இதில் மஞ்சள், சிவப்பு, நீலம் என்று அனைத்தும் கலந்து, ஒரு கலக்கான தோற்றத்தைக் கொடுக்கிறது.

பிங்க் ரெட்ரோ
பிங்க் மற்றும் நீலம் கலந்த இந்த ஆடையானது, மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுப்பதோடு, வித்தியாசமாகவும் உள்ளது.

கடல் நீலம்
உண்மையிலேயே இந்த கடல் நீல நிற உடையானது மிகவும் சூப்பரான தோற்றத்தைக் கொடுக்கிறது. அதிலும் இந்த உடையில் ஆங்காங்கு அடர் சிவப்பு நிறத்தால் பூக்கள் போட்டிருப்பது, உடையின் அழகை அதிகரித்து வெளிப்படுத்துகிறது.

நீல நிற கவுன்
ப்ரியா கட்டாரியா பூரி வடிவமைத்த உடைகளில் ஒற்றை தோற்பட்டை கொண்ட சில்வர் எம்பிராய்டரி கோடு போடப்பட்ட உடையும் மிகச்சிறந்த உடையாகும்.

பளீச் ஆரஞ்சு
கண் கூசும் அளவிலான ஆரஞ்சு நிறத்தில், கருப்பு நிறத்தை சேர்த்து ஒரு வித்தியாசமான குட்டையான ஆடை, அழகாக இருக்கிறதோ இல்லையோ, விசித்திரமாக காணப்படுகிறது.

பாதி பிகினி
ப்ரியா கட்டாரியா பிகினியில் ஒரு ஒரு வித்தியாசத்தைக் கொண்டு வந்து, வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், இந்த பிகினியின் மேல் பாதியானது நன்கு கவர் செய்யப்பட்டிருப்பதோடு, அதனை முனைகளில் கோல்டன் முத்துக்கள் தொங்கவிடப்பட்டுள்ளது.

பிரிண்ட்டட் உடை
பொதுவாக சிவப்புடன் கருப்பு நிறத்தை தான் பல டிசைனர்கள் சேர்ப்பார்கள். ஆனால் ப்ரியா சற்று வித்தியாசமாக சிவப்பு மற்றும் கருப்புடன் வெள்ளையையும் சேர்த்து சற்று வித்தியாசமான ஆடையை வெளியிட்டுள்ளார்.

வெள்ளை நிற ஆடை
இந்த வெள்ளை நிற ஆடையின் ஸ்பெஷலே, அதன் மேல் போடப்பட்டுள்ள கோடு தான். அதிலும் அந்த கோடானது சில்வர் நூலால் எம்பிராய்டரி செய்யப்பட்டது.



Click it and Unblock the Notifications
