Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் ஷோஸ்டாப்பராக வந்த சானியா மிர்சா!!!
மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் நான்காம் நாளில் சாந்தனு மற்றும் நிகில் என்னும் டிசைனர்களின் 'டூ டை' கலெக்ஷன்கள் வெளிவந்தன. இந்த ஃபேஷன் வீக்கில் சாந்தனு மற்றும் நிகில் மார்டன் மணப்பெண் மற்றும் மணமகன்கள் அணிவதற்கு ஏற்றவாறான பல்வேறு ஸ்டைலான ஆடைகளை வெளியிட்டனர்.
இவர்கள் வெளியிட்ட ஆடைகள் அனைத்தும் உண்மையிலேயே மிகவும் அழகாக இருந்தது. இருப்பினும் டெல்லியில் நடைபெற்ற இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் 'டூ டை ஃபார்' என்னும் பெயரில் கலெக்ஷன்களை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்களுக்கு ஷோஸ்டாப்பராக மிகவும் பிரபலமான டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா வந்துள்ளார். சானியா மிர்சா மிகவும் அழகான சந்தன நிற உடையில் ராம்ப் வாக் நடந்தார்.
சரி, இப்போது சாந்தனு மற்றும் நிகில் அவர்களின் கலெக்ஷன்களைப் பார்ப்போமா!!!

ஷோஸ்டாப்பர்
டிசைனர்கள் சாந்தனு மற்றும் நிகில் ஒரு சூப்பரான ஷோஸ்டாப்பரான சானியா மிர்சாவை அழைத்து ராம்ப் வாக் நடக்க வைத்துள்ளனர். சானியா மிர்சா அழகான சந்தன நிற உடையில் மிகவும் அழகாக ராம்ப் வாக் நடந்தார்.

கோல்ட் மற்றும் க்ரீம்
எப்போதுமே கோல்ம் மற்றும் க்ரீம் நிறங்கள் ஒன்று சேர்ந்தாலே, அது அழகான தோற்றத்தைக் கொடுக்கும். ஆகவே சாந்தனு மற்றும் நிகில் கூட பெரும்பாலும் இந்த நிறங்களைத் தான் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் ஒன்று தான் இந்த உடை.

ப்ரில் கவுன்
இது தான் சாந்தனு மற்றும் நிகில் வடிவமைத்த கோல்டன் உடல் கொண்ட ப்ரில் கவுன்.

வெள்ளை குர்தா
இந்த வெள்ளை குர்தா மற்றும் சந்தன நிற பைஜாமாவானது, ஆண்களுக்காக ஸ்பெஷலாக டிசைன் செய்யப்பட்டது.

வெந்தயம் மற்றும் காபி கலந்த உடை
சாந்தனு மற்றும் நிகில் வடிவமைத்த உடைகளிலேயே ஒரு சிறந்த உடை என்றால், அது இந்த உடை தான்.

பழுப்பு நிற குர்தா
வெள்ளை நிற லேஸ் குர்தாவின் மேலே பழுப்பு நிற கோட் அணிந்திருப்பது சற்று வித்தியாசமாக இருந்தாலும், இதனை இந்த டிசைனர்கள் தான் வடிவமைத்தனர்.

இரட்டை நிறங்கள்
இது தான் வெந்தயம் மற்றும் அடர் ஊதா கலந்த ப்ரில் கொண்ட சுடிதார்.

பலவண்ண குர்தா
எப்போதும் பலவண்ணங்கள் கலந்த உடையை பெண்கள் தான் அணிவார்கள். ஆனால் சாந்தனு மற்றும் நிகில் இந்த பலவண்ணம் கலந்த உடையை ஆண்கள் அணியுமாறு வடிவமைத்துள்ளனர்.

சாக்லெட் கோல்ட்
இந்த உடையை ஜமீன் வீட்டு மணப்பெண்கள் அணிந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் இது அந்த அளவில் ராயல் லுக் கொடுக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

ஜொலிக்கும் கவுன்
அடர்ந்த ப்ரவுன் மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த இந்த அதிகப்படியான ப்ரில் கொண்ட உடையை சாந்தனு மற்றும் நிகில் தான் வடிவமைத்தனர்.

கிளியோபட்ரா
பொதுவாக சிவப்பு நிறமானது ஹாட் லுக் கொடுக்கும். அதிலும் இந்த சிவப்பு நிறத்துடன், கருப்பு மற்றும் கோல்டன் கலந்தால், அது எகிப்தியன் அழகி கிளியோபட்ரா போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.

கருப்பு
இந்த உடையானது முழுமையாக கருப்பாக இருந்தாலும், சாந்தனு மற்றும் நிகில் அவர்களால் மணமகன்கள் அணிவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு ராணி
இந்த சிவப்பு நிற லேஸ் சுடிதாரில் எந்த ஒரு ஸ்பெஷலும் இல்லை. இருப்பினும் இதனை சாந்தனு மற்றும் நிகில் வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.



Click it and Unblock the Notifications
