Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம்
Krishna Janmashtami 2023: கிருஷ்ணர் ஏன் ருக்மணியை மணந்தார்? ராதையை ஏன் மணக்கவில்லை?
Krishna Janmashtami 2023: கிருஷ்ணருக்கு ஏகப்பட்ட மனைவிகள் இருந்தால் கூட அவரை எப்பொழுதும் நாம் ராதா கிருஷ்ணன் என்றே அழைப்பதுண்டு. மற்ற பெண்களுக்கு இல்லாத இடம் ஏன் ராதைக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது என்று என்றாவது யோசிக்கிறீர்களா? உண்மையில் இதற்கு பின்னாடி ஒரு பெரிய புராணக்கதை இருக்கிறது.
கிருஷ்ணனின் மனைவி ருக்மணியாக இருந்தால் கூட நாம் கிருஷ்ணனை வணங்கும் போது ராதையுடன் சேர்த்து தான் வணங்குவோம். கிருஷ்ண ஜெயந்தி அன்று கூட குழந்தைகளுக்கு கிருஷ்ணன் மற்றும் ராதை வேடம் தான் போடுவதுண்டு. இத்தனைக்கும் ருக்மணி கிருஷ்ணனின் சட்டப்பூர்வமான மனைவி ஆவாள்.

ஆனால் ராதை அவரின் காதலியாக மட்டுமே இருந்தார். ராதை கிருஷ்ணனின் குழந்தை பருவ தோழியாகவும் இருந்தார். அவர்களின் காதல் இந்த உலகத்தில் நிபந்தனையற்ற ஒரு அன்பின் வெளிப்பாடாகும்.
கிருஷ்ணருடன் சேர்த்து ஏன் ராதையை வணங்குகிறார்கள்?
ராதாவும் கிருஷ்ணரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தார்கள். ராதாவும் கிருஷ்ணரும் ஒருவர் மேல் ஒருவர் அளவு கடந்த காதலை கொண்டிருந்தனர். ஆனால் ராதாவும் கிருஷ்ணரும் வெவ்வேறு நபர்களைத் தான் திருமணம் செய்தார்கள். இருப்பினும் காதலுக்கு எடுத்துக் காட்டு என்றால் ராதா கிருஷ்ணரைத் தான் சொல்வார்கள். அவர்களின் நிபந்தனையற்ற காதல் என்றைக்கும் தன்னலமற்றது என்பதை இந்த உலகுக்கு அவர்கள் காட்டினர்.
காதல் என்பது ஒரு எல்லையற்ற வானம் போன்றது. அது இந்த சமூகத்தையோ அல்லது வயதையோ சார்ந்து நின்று விடாது. அது சமூகத்தால் நிறுவப்பட்ட எல்லைகளுக்குள் நின்று விட முடியாத பொக்கிஷம் என்பதை ராதாவும் கிருஷ்ணரும் இந்த உலகிற்கு காட்டினர்.
ராதாவும்.. கிருஷ்ணரும்..
ராதையும் கிருஷ்ணரும் ஒருவருக்கொருவர் பக்தி கொண்டவர்கள். இவர்கள் இருவரும் மதுராவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ராஸ் லீலா என்ற வடிவில் காட்சி தருகிறார்கள். கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிக்க , ராதை மற்றும் கோபியர்கள் சேர்ந்து நடனமாடி மகிழ்வார்கள். தங்கள் அன்பையும் நட்பையும் கொண்டாடுவதற்காக ராதாவும் கிருஷ்ணரும் உடல் வடிவம் பெற்றதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த பூமியில் விஷ்ணு பகவான் கிருஷ்ணராக அவதரித்த போது லட்சுமி தேவி ராதையாக அவதரித்ததாக கூறப்படுகிறது. எப்பொழுதும் தீமைக்கு எதிராக நன்மை எவ்வாறு மேலோங்கும் என்பதை உலகிற்கு காட்டவே இவர்கள் வந்திருப்பதாக கூறப்படுகிறது. ராதா கிருஷ்ணன் மேல் கொண்ட பாசம், பக்தி, பச்சாதாபம் மற்றும் மென்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உலகிற்கு கற்பிக்கிறது.
கிருஷ்ணர் ஏன் ருக்மணியை மணந்தார்? ராதையை ஏன் மணக்கவில்லை?
கிருஷ்ணர் ருக்மணியை தன் கனவில் தான் கண்டுள்ளார். ருக்மணி ஒரு அழகான பெண். பிறகு அவரையே மணந்து கொண்டார். ருக்மணி உடனான வாழ்க்கை மனித அன்பை பிரதிபலிப்பதாகவும், ராதை மற்றும் கிருஷ்ணர் உடனான வாழ்க்கை தெய்வீக அன்பை பறைசாற்றுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
மற்றொரு புராணக்கதையில் ருக்மணியின் சகோதரன் ருக்மணியை ஒரு ராஜாவை மணக்க சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், ஆனால் ருக்மணி கிருஷ்ணனை காதலிப்பதால் அவளை கடத்திச் செல்லுமாறு கிருஷ்ணருக்கு கடிதம் எழுதியதாக புராணக் கதை கூறுகிறது. அந்தக் காலத்தில் பாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனனின் உதவியால் பகவான் கிருஷ்ணரும், ருக்மணியும் ஓடிப் போய் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்டனர்.
ஸ்கந்த புராணக் கூற்றுப்படி ராதாவும் ருக்மணியும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள் அல்ல என்று மக்கள் நம்புகிறார்கள்.
"ருக்மிணி துவாரவத்யம் து ராதா பிருந்தாவநே வனே" என்கிறது பாடல்.
அதாவது இந்த பாடல் என்ன சொல்கிறது என்றால், துவாரகையில் ருக்மணியின் பாத்திரமும், பிருந்தாவனத்தில் ராதையின் பாத்திரமும் ஒன்றே என்கிறது. துவாரகையில் ருக்மணியாக கிருஷ்ணருடனும், பிருந்தாவனத்தில் ராதையாக கிருஷ்ணருடனும் இருக்கிறாள்.
ராதையின் கிருஷ்ண பக்தி மற்றும் அவர்களின் நிபந்தனையற்ற அன்பினால் மட்டுமே கிருஷ்ணரும் ராதையும் இன்றளவும் ஒன்றாக வணங்கப்படுகிறார்கள். பல பக்தர்கள் அவர்கள் இருவரின் ஆத்மா ஒன்று என்று கூறுகிறார்கள்.
கிருஷ்ணரும் ருக்மணியும் இணைந்து காட்சி தரும் கோயில் இருக்கிறதா?
இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோயில்களில் கிருஷ்ணர் ராதையுடன் தான் காட்சி தருவார். இருப்பினும், துவாரகாவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ருக்மணி மாதா கோயில் என்று அழைக்கப்படும் கோயில் ஒன்று உள்ளது.
இது 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இதன் பிரதான சன்னதியில் ருக்மணி சிலையும் வெளிப்புற மற்றும் உட்புற சுவர்களில் யானைகள் மற்றும் மனித உருவங்களில் பல சிற்பங்களை காண முடியும். எனவே நீங்கள் துவாரகா சென்றால் ருக்மணி கோயிலை மறக்காமல் கண்டு தரிசித்து வாருங்கள்.



Click it and Unblock the Notifications