Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
குரு நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 16 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் ஆதரவா இருக்கும்...
Jupiter Nakshatra Transit 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரங்களையும் மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த குரு பகவான் ஏப்ரல் 16 ஆம் தேதி கிருத்திகை நட்சத்திரத்திற்கு செல்கிறார். கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். சூரினும், குரு பகவானும் நண்பர்கள் என்பதால், இந்த நட்சத்திரப் பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் தரும்.

அதுவும் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியானது அதிர்ஷ்டமாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும், வெற்றிகள் குவியும். இப்போது குரு நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
குரு நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். அரசியலில் இருந்து தேர்தலில் போட்டியிட்டால், வெற்றி பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு குருவின் அருளால் வருமானத்தில் உயர்வு ஏற்படக்கூடும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சியானது சிறப்பான பலன்களைத் தரும். குருவின் அருளால் பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. அரசியலில் இருந்தால் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. சிலர் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவார்கள். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற கனவு நனவாகும். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சியானது நன்மைகளை வழங்கும். முக்கியமாக பொருளாதார ரீதியாக நல்ல பலனைப் பெறக்கூடும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள், தேர்தலில் நின்றால் வெற்றி பெறலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களை வழங்குவதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
