எச்சரிக்கை! ஜூலை 2025-ல் உலகம் ஒரு பேரழிவை சந்திக்கும் - ஜப்பானிய பாபா வாங்காவின் அதிர்ச்சிகரமான கணிப்பு!

Japanese Baba Vanga Predictions For 2025: உலகில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணித்துக் கூறும் ஏராளமான தீர்க்கதரசிகள் உள்ளன. அதில் உலகளவில் மிகவும் பிரபலமான இருவர் தான் நோஸ்ட்ரடாமஸ் மற்றும் பாபா வாங்கா. இவர்களுள் பாபா வாங்கா பல்கேரியாவைச் சேர்ந்தவர். இவரது கணிப்புகளுள் பல இன்று வரை நடந்துள்ளன.

இதனால் ஒவ்வொரு ஆண்டில் நுழையும் போதும், அந்த ஆண்டிற்குரிய பாபா வாங்காவின் கணிப்புகள் என்னவென்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆவல் கொள்வர். இப்படி பல்கேரியாவின் பாபா வாங்காவின் கணிப்புகள் ஒருபுறம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஜப்பானிலும் ஒரு பாபா வாங்கா உள்ளார். இவரது பெயர் ரியோ டாட்சுகி. இவர் தனது கனவுகளில் இருந்து எதிர்காலத்தை கணிக்கும் ஒரு தீர்க்கத்தரசி மற்றும் இவர் ஒரு மங்கா கலைஞரும் ஆவார்.

Japanese Baba Vanga Ryo Tatsuki s Chilling Predictions For 2025 Will Shock You

இந்த ஜப்பானிய பாபா வாங்காவின் ஒரு அதிர்ச்சிகரமான கணிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் இவர் இன்னும் ஓரிரு மாதங்களில் உலகம் ஒரு பேரழிவை சந்திக்கவுள்ளதாக கூறியுள்ளார். இவர் ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கடல் கொதித்துக் கொண்டிருக்கும் காட்சியை கண்டதாக கூறினார்.

இந்த கடல் கொதிப்பு 2025 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் ஒரு பெரிய சுனாமியை வரவழைக்கும் என்றும் கணித்துள்ளார். அதுவும் இந்த சேதம் ஜப்பான், தைவான், இந்தோனேசியா மற்றும் வடக்கு மரியானா தீவுகளில் மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் கணித்துள்ளார்.

ஜப்பானிய பாபா வாங்காவின் முந்தைய கணிப்புகள்

எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை தனது கனவின் மூலம் தெரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட ரியோ டாட்சுகி, "தி ஃபியூச்சர் ஐ சா" என்ற மங்கா புத்தகத்தை வெளியிட்டார். இவர் 1980 களில் இருந்து, எதிர்கால நிகழ்வுகளைக் காட்டும் தெளிவான கனவுகளை அனுபவித்து வருகிறார்.

இவர் 1991 ஆம் ஆண்டில் ராக் இசைக்குழு குயின் புகழ்பெற்ற முன்னணி வீரரான ஃப்ரெடி மெர்குரியின் மரணத்தை கணித்திருந்தார். அவர் கணித்த சில மாதங்களுக்கு பிறகு, மெர்குரி எய்ட்ஸ் தொடர்பான சிக்கல்களால் இறந்தார்.

அடுத்த கணிப்பு சுமார் 15 நாட்களில் நடந்தது. 1995 ஆம் ஆண்டில், ஒரு வயதான மனிதர் தன்னை 'விரிசல் பூமிக்கு' அழைத்துச் செல்வதாக கனவு கண்டதாகக் கூறினார், மேலும் அவர் கனவில் இருந்து விழித்தெழுந்த பிறகு, ஜப்பானிய நகரமான கோப் 15 நாட்களில் அல்லது 15 ஆண்டுகளில் 'விரிசல்' அடையும் என்று தட்சுகி தனது குறிப்பில் எழுதினார். 15 நாட்களுக்குப் பிறகு, பேரழிவு தரும் கோப் பூகம்பம் ஜப்பானைத் தாக்கியது. இந்த பூகம்பத்தால் 6000 உயிர்கள் பறிபோனது. இதுவே 20 ஆம் நூற்றாண்டின் ஜப்பானின் இரண்டாவது மிக மோசமான நிலநடுக்கம் ஆகும்.

1992 ஆம் ஆண்டில், ரியோவுக்கு ஒரு விசித்திரமான மற்றும் தெளிவற்ற கனவு வந்தது. அவரால் முழுமையாக அடையாளம் காண முடியாத ஒரு பெண். அந்தக் கனவு அவ்வளவு தெளிவாக இல்லை, ஆனால் அதைப் பற்றிய ஏதோ ஒன்று அவரை அமைதியற்றவராக்கியது.

இவர் தூங்கி எழுந்தவுடனே தனது டைரியில் ஒரு குறிப்பை எழுதினார். அது "டயானா? இறந்துவிட்டாரா?" என்று எழுதியிருந்தார். பின் அந்த பெண்ணின் உருவத்தையும் வரைந்தார். இந்த பதிவை ரியூ 1992 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 31 ஆம் தேதி பதிவிட்டார். சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் 31, 1997 அன்று, இளவரசி டயானா கார் விபத்தில் உயிரிழந்தார்.

ரியூவின் மற்றொரு அதிர வைக்கும் கணிப்பு 2011 ஆம் ஆண்டில் நடந்தது. அதுவும் மார்ச் 2011 ஆம் ஆண்டில் நடக்கும் என்று இவர் தனது குறிப்பில் பதிவு செய்திருந்தார். அந்த மாதத்தில் தான் ஜப்பான் டோஹோகு பூகம்பத்தாலும், வரலாற்றில் மிக மோசமான சுனாமியாலும் பாதிக்கப்பட்டது. இது பல உயிர்களைக் கொன்றது. அதுவும் சுமார் 19,759 பேர் இறந்தனர். இந்த நிகழ்வுக்கு பின் மக்கள் இவரது கணிப்புக்களை தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டினர்.

அதன் பின் ரியூ உலகளாவிய சுகாதார நெருக்கடியைப் பற்றிய மற்றொரு அதிர்ச்சியூட்டும் கணிப்பையும் கணித்திருந்தார். இதுக்குறித்து தனது குறிப்பில் எழுதினார். அது "25 ஆண்டுகளில், ஒரு மர்மமான வைரஸ் 2020 இல் வெளிப்படும். அது ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை எட்டும், சிறிது காலம் மறைந்துவிடும், பின்னர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும்." என்பதாகும்.

அவரது கணிப்பின் படி, 2020 ஆம் ஆண்டில் கொரோனா என்னும் கோவிட்-19 தொற்றுநோய் பரவத் தொடங்கி, ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை அடைந்து, பின் தணிந்தது. இந்த ஒரு கொடிய நோய்த்தொற்றால் உலகளவில் மில்லியன் கணக்கானோர் உயிரிழந்தனர்.

2025 பற்றிய ரியோ டாட்சுகியின் கணிப்பு

ஜப்பானிய பாபா வாங்கா என்று அழைக்கப்படும் ரியோ டாட்சுகியின் கணிப்பின் படி, 2025 ஆம் ஆண்டில் ஒரு பேரழிவு உலகில் நடக்கும் என்றும், இந்த பேரழிவு நாம் இதுவரை அனுபவித்த துயரங்களை விட சற்று குறைவாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார். அதுவும் இந்த பேரழிவு 2025 ஜூலையில் நடக்கும். குறிப்பாக உலகம் பெரிய சுனாமியைக் காணும் என்றும், இது 2011 இல் ஜப்பான் அனுபவித்ததை விட மூன்று மடங்கு பெரியதாக இருக்கும் என்றும் டாட்சுகி எச்சரித்துள்ளார். இந்த பேரழிவு ஜப்பானை மட்டுமின்றி, பிலிப்பைன்ஸ், தைவான், இந்தோனேசியா மற்றும் பல இடங்களையும் பாதிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

ரியோ டாட்சுகி இதுவரை கணித்ததில் கொரோனா வைரஸ் தொற்று தான் மிகவும் பயங்கரமானது. அதுவும் இவர் கனவு கண்டதில் இருந்து இன்னும் 25 ஆண்டுகளில் புதிய ஒரு வைரஸ் 2020 ஆம் ஆண்டில் பரவத் தொடங்கி, ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை அடைந்து, பின் மறைந்துவிடும். அதோடு 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்த வைரஸ் தோன்றும் என்ற டாட்சுகி தனது குறிப்பில் எழுதியதாக கூறப்படுகிறது. அப்படி பார்த்தால், இன்னும் சில ஆண்டுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவலாம்.

உங்களுக்கு பாபா வாங்காவின் கணிப்புகள் மீது ஆர்வம் இருக்கலாம். ஆனால் இந்த ஜப்பானிய பாபா வாங்காவின் கணிப்பு ஜூலை மாதத்தில் ஏற்படாமல் போனால், அவரது கணிப்புகள் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion