Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா?
1 கோடியில் ரச்சின் ரவிந்திராவை அல்லேக்காக தூக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்! அப்படி என்ன ஸ்பெஷல் இவர்கிட்ட இருக்கு
CSK Player Rachin Ravindra: 2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று துபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வீரர்களைப் போட்டிப் போட்டு அதிகப் பணம் கொடுத்து வாங்கி வந்தனர். இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பாராத வகையில் குறைவான விலையில் நியூசிலாந்து அணியின் இளம் வீரரான ரச்சின் ரவிந்திராவை வாங்கியுள்ளது.
பொதுவாக ரச்சின் ரவிந்திராவை 10 கோடி வரை பணம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் என்று பலர் நினைத்திருந்தார்கள். மேலும் இவரை வாங்க பல அணிகள் போட்டிப் போடும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக இவரை குறைந்த பணம் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கிவிட்டது.

2024 ஆம் ஆண்டில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு முக்கிய வீரராக இவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி, இவர் ஏன் அவ்வளவு ஸ்பெஷல் என்று நீங்கள் யோசிக்கலாம். ஏனெனில் ரச்சின் ரவிந்திரா 2023 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரில் 8 இன்னிங்ஸ்களில் சுமார் 523 ரன்களை குவித்துள்ளார்.
முக்கியமாக இவர் வெறும் பேட்ஸ் மேன் மட்டுமல்ல, பவுலர் மற்றும் ஆல்ரவுண்டரும் கூட. எனவே இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருப்பது ஒரு பெரிய பலம். அதுவும் தோனியின் கீழ் விளையாடவுள்ளார். நமது தோனி இவரை அழகாக இந்த ஐபிஎல்லில் ஜொலிக்க வைக்கப் போகிறார். இப்போது ரச்சின் ரவிந்திரா பற்றிய சில சுவாரஸ்யமான மற்றும் பலரும் அறியாத சில விஷயங்களைக் காண்போம்.
1. ரச்சின் பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் சிஸ்டம் ஆர்க்கிடெக்ட் ரவி கிருஷ்ணமூர்த்திக்கும், தீபா கிருஷ்ணமூர்த்திக்கும் நியூசிலாந்தின் வெலிங்டனில் 1999 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி, இந்தியாவின் பெங்களூருவில் முன்னாள் கிளப் அளவிலான கிரிக்கெட் வீரர். ரச்சின் 5 வயதாக இருக்கும் போதே, தனது தந்தையுடன் பிளாஸ்டிக் பால் கொண்டு கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். கிரிக்கெட் மீதான ஆர்வத்தால், அன்று முதல் அவர் கிரிக்கெட் பயிற்சியை செய்து வருகிறார்.
2. 1990 களில் தனது தளத்தை நியூசிலாந்திற்கு மாற்றிய ரச்சினின் தந்தை, 2011 இல் நியூசிலாந்தில் ஹட் ஹாக்ஸ் கிளப்பை நிறுவினார். இதனால் இவர் தனது 13 வயது முதலாக ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்திலும் இந்தியாவிற்கு வருவதோடு, கிளப் கிரிக்கெட் விளையாட பெங்களூருக்கு வருவாராம். இவ்வாறு கிரிக்கெட் விளையாட்டின் மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
3. ரச்சினின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தியும், ஜவகல் ஸ்ரீநாத்தும் நல்ல நண்பர்களாவர். கிருஷ்ணமூர்த்தி நியூசிலாந்து செல்வதற்கு முன்பு பெங்களூருவில் ஸ்ரீநாத்துடன் ஒன்றாக கிரிக்கெட் விளையாடுவாரார். மேலும் ரச்சின் இவரை ஸ்ரீ மாமா என்று தான் அழைப்பாராம் மற்றும் இவர்கள் எப்போதும் கிரிக்கெட் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம். ஒவ்வொரு முறை சொந்த ஊருக்கு வரும் போதும் ஸ்ரீநாத்தை தவறாமல் சந்திப்பாராம்.
4. முக்கியமாக ரச்சின் ரவிந்திரா என்ற பெயர் இவருக்கு வைத்தற்கு பின் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. அது என்னவெனில் இப்பெயரானது பிரபல கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் பெயர்களால் ஈர்க்கப்பட்டது.
5. ரச்சின் ரவிந்திரா 16 வயதில், அதாவது 2016-ல் வங்கதேசத்தில் நடந்த யு-19 உலக கோப்பையில் பங்கேற்ற இளம் வீரர் ஆவார். மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு யு-19 உலக கோப்பையிலும் விளையாடியுள்ளார்.



Click it and Unblock the Notifications