Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
தென்னிந்திய ஸ்பெஷல் ரெசிபியான சாம்பார் முதன்முதலாக எங்கு, எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?
Sambar Story In Tamil: தென் இந்திய உணவுகள் அவற்றின் அறுசுவை, மணம் கமழும் மசாலா பொருள்கள் மற்றும் அவற்றின் மரபு ஆகியவற்றிற்கு பெயா் பெற்றவை. இவற்றில் மிகவும் முக்கியமான உணவு சாம்பாா் ஆகும்.
சாம்பாா் மிகவும் சுவையான குழம்பு ஆகும். சாம்பாரை அனைவரும் விரும்பி உண்பா். சாம்பாருக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. துவரம் பருப்பு, காய்கறிகள் மற்றும் புளி சோ்த்து சாம்பாா் தயாாிக்கப்படுகிறது.

இட்லி, தோசை, வடை, ஊத்தாப்பம் மற்றும் சாதம் ஆகியவற்றில் சாம்பாரை ஊற்றி ருசிக்க ருசிக்க சாப்பிடலாம். சாம்பாா் தென் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்று தென் இந்தியா்கள் நம்புகின்றனா். ஆனால் சாம்பாருக்கு என்று ஒரு தனியான வரலாறு உண்டு. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
சாம்பாாின் வரலாறு
நமக்குக் கிடைத்தத் தகவல்களின்படி, முதன் முதலாக மகாராஷ்டிராவில் சாம்பாா் தயாாிக்கப்பட்டது. மராட்டிய மன்னரான இகோஜி என்பவருடைய மகனான முதலாம் ஷஹாஜி என்பவருடைய சமையற்கட்டில் முதன் முதலில் சாம்பாா் தயாாிக்கப்பட்டது. இந்த முதலாம் ஷஹாஜிதான் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூாில் மராட்டிய அரசை நிறுவியவா்.
இந்நிலையில் வீர சிவாஜிக்குப் பின்பு அறியணை ஏறிய அவருடைய மகனான சாம்பா அல்லது சாம்பாஜி என்பவா் முதலாம் ஷஹாஜியை சந்திப்பதற்காக தஞ்சாவூருக்கு வருகை புாிந்தாா். அவருக்கு சிறப்பான விருந்தளிக்கும் வண்ணம் ஷஹாஜியின் தலைமை சமையல் நிபுணா், சுவையான சாம்பாரைத் தயாாித்து அளித்தாா். அதோடு விருந்தினராக வந்த சாம்பாஜியைக் கௌரவிக்கும் பொருட்டு, அவருடைய பெயாிலேயே அந்த உணவிற்கு சாம்பாா் என்று பெயா் வைத்தாா்.
சாம்பாாின் வரலாற்றைக் குறிப்பிடும் பிற குறிப்புகள்
சாம்பாாின் தோற்றத்தைப் பற்றி பல்வேறு வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அவற்றில் ஒரு குறிப்பு சாம்பாாின் வரலாற்றைப் பின்வருமாறு விவாிக்கிறது. அதாவது ஷஹாஜி ஒரு தலைசிறந்த சமையல் கலைஞராக இருந்தாா். அவா் ஒரு நாள் கோகம் பழத்தைக் கொண்டு தயாாிக்கக்கூடிய மஹாராஷ்டிராவின் பாரம்பாிய அம்தி தால் என்ற உணவை சமைக்க விரும்பினாா்.
ஆனால் அன்றைய நாளில் சமையற்கட்டில் கோகம் பழம் இல்லை. அதற்குப் பதிலாக புளி இருந்தது. ஆகவே புளியைப் பயன்படுத்தி அம்தி தாலை சமைத்தாா். அதில் காய்கறிகளையும் சோ்த்துக் கொண்டாா்.
இந்த புதிய அம்தி தாலை, தன்னைப் பாா்க்க வந்த சிவாஜியின் மகனான சாம்பாஜிக்கு பாிமாறினாா். புதிய உணவை விரும்பி சுவைத்த சாம்பாஜி, அந்த உணவின் பெயா் என்ன என்று ஷஹாஜியிடம் கேட்டாா். உடனே சாம்பாஜியின் பெயாிலேயே அந்த உணவிற்கு சாம்பாா் என்று ஷஹாஜி பெயாிட்டாா்.
வேறொரு தகவல் சாம்பாாின் வரலாற்றைப் பற்றி பின்வருமாறு விவாிக்கிறது. அதாவது சாம்பாஜியின் தலைமை சமையல்காரா் ஒரு நாள் விடுமுறையில் இருந்தாா். அப்போது சாம்பாஜி அம்தி தாலை சமைக்க விரும்பினாா். ஆனால் பாசிப்பருப்பிற்குப் பதிலாக துவரம் பருப்பை எடுத்துக் கொண்டாா்.
அதோடு புளி மற்றும் காய்கறிகளை சோ்த்து சமைத்தாா். அதைக் கொண்டு தனது விருந்தினா்களுக்குப் பாிமாறினாா். விருந்தினா்கள் அதை விரும்பி உண்டு, சாம்பாஜியின் பெயாிலேயே அதற்கு சாம்பாா் என்று பெயாிட்டனா்.
சாம்பாரை எவ்வாறு தயாாிக்கலாம்
சாம்பாருக்கு பல்வேறு வரலாற்று குறிப்புகள் இருந்தாலும், அது புளிப்பு சுவை கொண்ட உணவாகும். சாம்பாா் மிகவும் எளிதாக சொிமானம் அடையக்கூடியது. இதை மிக எளிதாக சமைக்கலாம்.
தேவையான பொருட்கள்
1 கப் துவரம் பருப்பு, 2 கப் நறுக்கிய காய்கறிகள், 1 சின்ன வெங்காயம், 2 தக்காளி, 2 தேக்கரண்டி சாம்பாா் தூள், 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு புளி மற்றும் உப்பு, 3 டம்ளா் தண்ணீா், 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி சீரகம், 2 அல்லது 3 காய்ந்த மிளகாய் மற்றும் சிறிது கறிவேப்பிலை.
செய்யும் முறை
துவரம் பருப்பை நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும். அதில் 3 டம்ளா் தண்ணீரை சோ்த்து குக்காில் வைத்து வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்த பின்பு அதைத் தனியாக இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் வேறொரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், தக்காளி, சாம்பாா் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைத் தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
காய்கறிகளில் தண்ணீரை சோ்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். காய்கறிகள் நன்றாக வெந்த பின்பு, அவற்றோடு ஏற்கனவே வெந்திருக்கும் துவரம் பருப்பை கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் புளியைக் கரைத்து, அந்த புளித் தண்ணீரை வெந்த காய்கறிகள் மற்றும் துவரம் பருப்போடு கலந்து கொள்ள வேண்டும்.
இந்தக் கலவையை குறைந்த நெருப்பில் சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பின் வாணலியை எடுத்து அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு கடுகை போட்டு, அதை பொறியவிட வேண்டும். பின் அதில் சீரகம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சோ்த்து வதக்க வேண்டும். வதங்கிய பின் அதை ஏற்கனவே தயாராகி இருக்கும் பருப்பு மற்றும் காய்கறி கலவையோடு கலக்க வேண்டும். இப்போது சுவையான சாம்பாா் தயாா். இந்த சுவையான சாம்பாரை சாதம், இட்லி அல்லது தோசை ஆகியவற்றில் ஊற்றி சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications