Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Duplicate Whisky: போலி விஸ்கியை எப்படி கண்டுபிடிப்பது-ன்னு தெரியுமா? இதோ சில எளிய வழிகள்!
Duplicate Whisky: தற்போது மது அருந்துவது என்பது ஒரு ட்ரெண்ட்டாகி விட்டது. பார்ட்டி என்றால் மது இல்லாமல் அந்த பார்ட்டி முழுமையடையாது. அதுவும் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் வெளிப்படையாக மது அருந்துகிறார்கள். மதுவில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் விஸ்கி.
இந்த விஸ்கியானது பார்வி, கோதுமை மக்காச்சோளம், மால்ட் பார்லி போன்ற வெவ்வேறு தானியங்களை நொதிக்க வைத்து வடிகட்டி பிரித்தெடுக்கப்படும் ஒரு வகையான மதுபானமாகும். நல்ல சுத்தமான விஸ்கியை அளவாக குடித்தால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அதுவே கலப்படமிக்க போலி விஸ்கியைக் குடித்தால், அதன் விளைவாக உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும்.

தற்போது கலப்படமிக்க போலி மது பானங்கள் சந்தைகளில் அதிகம் உலா வருகின்றன. நீங்கள் விஸ்கி பிரியரா? உங்களுக்கு போலி விஸ்கியை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியுமா? இல்லாவிட்டால், இந்தியாவின் மாஸ்டர் ஆஃப் ஒயின் சோனல் ஹாலண்ட் தனது இன்ஸ்டா பக்கத்தில் போலி விஸ்கியை கண்டறியும் வழியை பகிர்ந்துள்ளார். கீழே அந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் நீங்கள் குடிக்கும் விஸ்கி தரமானதா அல்லது போலியானதா என்பதை கண்டறியுங்கள்.
1. லேபிளை கவனிக்கவும்
விஸ்கி வாங்கினால், முதலில் பாட்டிலில் உள்ள விஸ்கியின் பிராண்ட்டை பார்க்க வேண்டும். அந்த பிராண்ட்டின் பெயரில் ஏதேனும் எழுத்துப் பிழை இருந்தால், அது போலியானதாக இருக்க வாய்ப்புள்ளது.
2. முத்திரையை கவனிக்கவும்
அடுத்ததாக, விஸ்கி பாட்டிலில் உள்ள முத்திரையை கவனிக்க வேண்டும் அந்த முத்திரை உடைந்திருந்தால் அல்லது பாட்டிலின் மூடியானது தளர்வாக இருந்தால், அது போலியான விஸ்கியாக இருக்க நிறைய வாய்ப்புள்ளது.
3. மிதந்தால்
நல்ல தூய்மையான விஸ்கியில் எந்த ஒரு தூசியும் இருக்காது. அதுவே விஸ்கியில் ஏதேனும் தூசிகள் மிதப்பதைக் கண்டால், அந்த விஸ்கி போலியானதாக இருக்கலாம். எனவே கவனமாக இருங்கள்.
4. நிறமாற்றம்
விஸ்கியின் நிறத்தில் ஏதேனும் வித்தியாசமான மாற்றங்களைக் கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இப்படியான மற்றும் போலி விஸ்கியின் அறிகுறியாக இருக்கலாம்.
5. சுவை மாற்றம்
விஸ்கியின் நிறத்தில் மட்டுமின்றி, அதன் மணம் மற்றும் சுவையிலும் மாற்றத்தைக் கண்டால், அது அந்த விஸ்கியின் போலித்தன்மையைக் குறிக்கிறது. ஆகவே வழக்கமாக குடிக்கும் விஸ்கியின் சுவையை விட, வித்தியாசமான சுவையை அனுபவித்தால், அது போலி விஸ்கி என்று அர்த்தம்.
முக்கியமாக ஆஃபரில் விஸ்கியின் விலை மிகவும் குறைவான விலையில் கிடைத்தால், அதை வாங்காதீர்கள். மிகவும் விலைக்குறைவில் கிடைக்கும் விஸ்கி போலியான விஸ்கியாக இருக்க வாய்ப்புள்ளது என்று இந்தியாவின் மாஸ்டர் ஆஃப் ஒயின் சோனல் ஹாலண்ட் தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
