Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும்
உலகின் மொத்த தங்கத்தில் இந்தியாவில் எவ்வளவு இருக்கு தெரியுமா? அடேங்கப்பா தமிழ்நாட்ல மட்டும் இவ்வளவு இருக்கா?
தங்கம் மற்ற நாடுகளில் சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது, ஆனால் இந்தியாவில் தங்கத்தின் அடையாளம் என்பதே வேறு. தங்கம் நீண்ட காலமாக இந்தியாவில் செல்வம், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்திய பெண்களுக்கும், தங்க நகைகளுக்கும் ஆழமான தொடர்பு உள்ளது.
இந்தியாவின் ஒவ்வொரு பண்டிகையிலும் தங்கம் இன்றியமையாத பங்கு வகிக்கிறது, குறிப்பாக திருமணங்களில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. மணப்பெண் அணியும் நகையாக இருந்தாலும் சரி அல்லது தங்கக் கட்டிகளாக இருந்தாலும் சரி, எந்த இந்திய திருமணமும் தங்கம் பரிசாக இல்லாமல் முழுமையடைந்ததாக வரலாறே இல்லை.

தங்கத்தின் மீதான இந்த நெருங்கிய தொடர்பு, இந்தியப் பெண்கள் உலக தங்க உற்பத்தியின் கணிசமான அளவுகளை குவிக்க வழிவகுத்துள்ளது. இதன் விளைவாக, தங்கத்தின் கொள்முதலில்.குறிப்பாக வீட்டுத் தங்கத்தில், உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது.
உலக தங்க கவுன்சிலின் அறிக்கையின்படி, இந்தியப் பெண்கள் மொத்தமாக 24,000 டன் தங்கத்தை வைத்துள்ளனர், உலகின் மொத்த தங்க இருப்பில் 11% நகை வடிவில் உள்ளது. சொல்லப்போனால், இந்தியப் பெண்கள் நகையாக அணியும் தங்கத்தின் அளவு, முதல் 5 நாடுகளின் மொத்த தங்க இருப்பைக் காட்டிலும் அதிகம்.
மற்ற நாடுகளின் தங்க இருப்பு
உலக தங்க கவுன்சில் அறிக்கையின்படி, அமெரிக்காவில் மொத்தம் 8,000 டன் தங்கம் உள்ளது, ஜெர்மனியிடம் 3,300 டன் தங்கம் உள்ளது, இத்தாலியிடம் 2,450 டன் தங்கம் உள்ளது. பிரான்ஸ் 2,400 டன் தங்கத்தையும், ரஷ்யா 1,900 டன் தங்கத்தையும் வைத்துள்ளது. இந்த நாடுகளின் தங்க கையிருப்பு மொத்தமாக சேர்த்தாலும், அது இந்தியப் பெண்களுக்குச் சொந்தமான தங்கத்தின் அளவிற்கு ஈடாகாது.
ஆக்ஸ்போர்டு கோல்ட் குழுமத்தின் அறிக்கை, அமெரிக்கா, சர்வதேச நாணய நிதியம் (IMF), சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த கையிருப்புகளை விட, இந்திய குடும்பங்கள் உலகின் 11% தங்கத்தை வைத்திருப்பதாக அறிவித்துள்ளது.
உலகளவில், Economy and Markets அறிக்கையின்படி, அமெரிக்காவின் மிகப்பெரிய அதிகாரப்பூர்வ தங்க இருப்பு 8,133.5 டன்களாகும், இது நாட்டின் வெளிநாட்டு இருப்புகளில் 75% ஆகும். ஜெர்மனி 3,359.1 டன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, இது சமீபத்திய ஆண்டுகளில் ஜெர்மன் மக்கள் தங்கத்தில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை பிரதிபலிக்கிறது. அதேசமயம் 2,451.8 டன் தங்கத்துடன் இத்தாலி மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களில் தங்கம் அதிகம் உள்ளது?
தங்கத்தை அதிகம் வாங்குவதில், தென்னிந்தியாவைச் சேர்ந்த பெண்கள் முன்னணியில் உள்ளனர். நாட்டின் மொத்த தங்கத்தில் 40% தென்னிந்தியாவில்தான் உள்ளது, அதில் 28% தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. உலக தங்க கவுன்சில் (WGC) இந்திய இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில், 2020-21 ஆய்வில், இந்திய குடும்பங்கள் 21,000-23,000 டன் தங்கம் வைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. 2023 வாக்கில், அது 24,000-25,000 டன்கள் அளவுக்கு உயந்திருக்கும். இந்த அளவு தங்கத்தின் மூலம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% நிறைவு செய்யப்படுகிறது.
இந்தியாவில் தங்கத்தின் வரம்பு என்ன?
வருமான வரிச் சட்டங்களின்படி, திருமணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது, அதே நேரத்தில் திருமணமாகாத பெண்களுக்கு 250 கிராம் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஆண்கள் 100 கிராம் தங்கம் வரை மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
