Latest Updates
-
கருப்பான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
ஜூலையில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்.. -
ஜூன் 29-ல் நிகழும் புதனின் வக்ர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் துரத்தப்போகுதாம் -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. -
ஐயங்கார் ஸ்டைல் கதம்ப சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் கூட இந்த சுவை கிடைக்காது -
உங்ககிட்ட இந்த 7 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க உடல் ஆரோக்கியமா இல்லன்னு அர்த்தம்.. உஷார்.. -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருக்கும் ஆண்களிடம் பெண்கள் எளிதில் மயங்கி விடுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா -
150 ஆண்டுகளுக்கு பின் பௌர்ணமியில் உருவாகும் 2 யோகங்கள்: இன்று இந்த 5 ராசியின் அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
கோதுமை ரவா பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 29 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப பதட்டமான நாளாக இருக்குமாம்
இந்த இந்திய அரசர் நகரும் ஆடம்பர அரண்மனையை வைத்திருந்தாராம் - இப்போது அது எங்குள்ளது தெரியுமா?
இந்திய வரலாறு என்பதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிறைந்தது. இந்தியாவில் ஆட்சியாளர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது என்பது தற்போது மட்டுமல்ல நிகழ்வதல்ல, பாரம்பரியமாகவே இந்தியாவில் ஆட்சியில் இருப்பவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்துள்ளனர்.

தனி விமானம் அல்லது தனிக்கப்பல் போன்ற சொகுசுப் பயணம் என்பது நவீன காலத்தின் கண்டுபிடிப்பு அல்ல. 130 ஆண்டுகளுக்கு முன்னரே, ஒரு இந்திய மகாராஜா கற்பனைக்கும் எட்டாத தனிப்பட்ட சொகுசுப்பயணத்தை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் எப்படிப்பட்ட சொகுசுப்பயணத்தை மேற்கொண்டார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பரோடா மகாராஜா
பரோடாவின் மகாராஜா சயாஜிராவ் கெய்க்வாட் III கடந்த கால இந்தியாவின் மிகவும் முற்போக்குச் சிந்தனை கொண்ட ஆட்சியாளர்களில் ஒருவரான சயாஜிராவ், கல்வி, சமூக சீர்திருத்தம் மற்றும் நவீன உள்கட்டமைப்பு ஆகியவற்றை முன்னெடுத்தார். அதேவேளையில், மற்றவர்கள் மீது ஒரு சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துவது எப்படி என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். அவரது தனிப்பட்ட ரயில் அதனை மிகச் சிறப்பாகப் பிரதிபலித்தது.
நகரும் அரண்மனை
1886-ஆம் ஆண்டில் 'பம்பாய், பரோடா மற்றும் மத்திய இந்திய ரயில்வே'யின் பரேல் பணிமனையில் உருவாக்கப்பட்ட இந்த ரயில் பெட்டி, வெறும் போக்குவரத்து சாதனமாக மட்டும் இல்லாமல், அது சக்கரங்கள் கொண்ட ஒரு நகரும் அரண்மனையாகத் திகழ்ந்தது.
அதன் உள்ளே ஆடம்பரமான அறைகள், நேர்த்தியான உணவருந்தும் இடங்கள் மற்றும் அரண்மனைகளுக்கு இணையான சிறப்பான அலங்காரங்கள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், அதன் மிகச்சிறப்பான அம்சம் இந்த ஆடம்பரங்கள் மட்டுமல்ல. அந்த சிறப்பு ஆடம்பரம்தான் 'அரியணை'. வரலாற்றுத் தகவல்களின்படி, மகாராஜா இந்தப் பெட்டியை ஒரு நடமாடும் அரசவையாகப் பயன்படுத்தினார். பயணத்தின்போதே அவர் முக்கியப் பிரமுகர்களைச் சந்திப்பது, விருந்தினர்களை உபசரிப்பது மற்றும் அலுவல் ரீதியான பணிகளைக் கவனிப்பது போன்றவற்றை மேற்கொண்டார்.
அந்த அரசவை எப்படி உருவாக்கப்பட்டிருந்தது?
அதன் மையப்பகுதியில் அரியணை போன்ற ஒரு இருக்கை அமைந்திருந்தது; அங்கிருந்தபடியே அவர் பார்வையாளர்களைச் சந்திக்கவும், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் முடிந்தது. சொல்லப்போனால், அந்த ரயில் பெட்டி ஒரு நகரும் அரசவை போலவே திகழ்ந்தது. மகாராஜா எங்கு சென்றாலும், அவரது அரசவையும் அவருடனேயே பயணித்தது. அத்தகையதொரு சிறப்பம்சமே அந்தச் சிறப்புப் பெட்டியை (saloon) புகழ்பெற்றதாக மாற்றியது.
ரயில் மீதான சயாஜிராவ் கொண்டிருந்த பேரார்வத்திற்கு அந்தப் பெட்டி ஒரு சான்றாகவும் திகழ்ந்தது. அவரது ஆட்சிக்காலத்தில், 'கெய்க்வாட் பரோடா மாநில ரயில்வே' இந்தியாவில் இருந்த மிகப்பெரிய சமஸ்தான ரயில்வே அமைப்புகளில் ஒன்றாக விரிவடைந்தது. மகாராஜாவைப் பொறுத்தவரை, ரயில்வே என்பது வெறும் போக்குவரத்துக்கான சாதனம் மட்டுமல்ல. அது அதிகாரம், முன்னேற்றம் மற்றும் கௌரவத்தின் அடையாளமாகவும் இருந்தது. அவரது அரசப் பெட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்பட்டதால், அவை பயன்பாட்டில் இல்லாதபோது பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்காக பரோடாவில் ஒரு பிரத்யேக இடம் கட்டப்பட்டது.
இந்த ரயில் பெட்டி அரச அதிகாரத்தின் நகரும் அடையாளங்களாக அவை திகழ்ந்தன. இன்று மீதமிருக்கும் கெய்க்வாட் அரசப் பெட்டிகளில் ஒன்று புது தில்லியில் உள்ள தேசிய ரயில் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பெரிய கோடீஸ்வரர்களிடம் உள்ள தனிப்பட்ட ஜெட் விமானங்களோ அல்லது பறக்கும் அலுவலகங்களோ வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, ஒரு இந்திய மகாராஜா அதைவிடவும் வியக்கத்தக்க ஒன்றை உருவாக்கியிருந்தார்.



Click it and Unblock the Notifications
