Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
17 முறை முகலாயர்களை தோற்கடித்து விரட்டிய சக்திவாய்ந்த இந்திய அரசர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் தெரியுமா?
இந்தியாவை ஆண்ட பல்வேறு வம்சங்களில் மிகவும் முக்கியமானவர்கள் முகலாயர்கள். ஆங்கிலேயர்களுக்கு முன்னர் இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள் முகலாயர்களே. இந்தியாவின் பெரும்பகுதி அவர்களின் ஆதிக்கத்தின் கீழோ அல்லது அவர்களுக்கு அடிப்பணிந்தோ இருந்தது. முகலாயர்களின் இந்த மாபெரும் ஆதிக்கத்திற்கு காரணமாக இருந்தது அவர்களின் படைபலம்தான்.
முகலாயர்கள் மிகப்பெரிய படைப்பலத்துடன் இருந்தாலும் சில இந்திய அரசர்கள் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்கள். சொல்லப்போனால் அவர்கள் தொடர்ந்து முகலாயர்களை தோற்கடித்து தங்கள் நாட்டை தொடர்ந்து பாதுகாத்து வந்தனர். குறிப்பாக் ஒரு அரசர் முகலாயர்களை 17 முறை தோற்கடித்து அவரது நாட்டிற்குள் முகலாயர்கள் நுழையாமல் தடுத்தார்கள். இந்த பதிவில் முகலாயர்களை தொடர்ந்து தோற்கடித்த இந்திய அரசர் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அஹோம் மன்னர்கள்
அஹோம் மன்னர்கள் இன்றைய அஸ்ஸாமின் சில பகுதிகளையும் அதன் அண்டை மாநிலங்களின் சில பகுதிகளையும் 600 ஆண்டுகளாக ஆட்சி செய்தனர். அவர்களின் ஆட்சிகாலமும் முகலாயர்கள் தெற்காசியாவின் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்திய காலமும் கிட்டதட்ட ஒன்றுதான், இருப்பினும் அஹோம்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி, முகலாயர்களை 17 முறை தோற்கடித்ததாக கூறப்படுகிறது.
லச்சித் போர்புகான், அஹோம் மன்னர்களில் மிகவும் முக்கியமானவராக உயர்ந்து நிற்கிறார். ஏனெனில் அவர்கள்நீ நாட்டை நோக்கி படையெடுத்து வந்த பெரும் முகலாயப் படையை எதிர்த்து நின்று மிகப்பெரிய போர்களை நடத்தி, அவர்களை விரட்டியடித்தார். அசாம் மாநில மக்கள் அவரை ஒரு சிறந்த இராணுவ வீரராக நினைவு கொள்கிறார்கள். இந்திய வரலாற்றின் மறக்கப்பட்ட இந்த மாவீரரைப் பற்றி மேற்கொண்டு பார்க்கலாம்.
லச்சித் போர்புகன்
லச்சித் போர்புகன் 1622 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி அஹோம் மன்னர்களின் தலைநகரான சரைடியோவில் பிறந்தார். அவர் முகலாய இராணுவத்திற்கு எதிராக இரண்டு முக்கியப் போர்களை வழிநடத்தினார், மேலும் வடகிழக்கு எல்லைகளில் முகலாயர்கள் தங்கள் எல்லையை விரிவுப்படுத்த எடுத்த கடைசி முயற்சிகளில் ஒன்றாகக் கூறப்படும் சராய்கோட்டில் நடந்த துணிச்சலான போரில் அவர் முகலாயர்களை வீழ்த்தினார். அதற்கு முன்னரே, வடக்கு குவஹாத்தியில் உள்ள தாதாராவிற்கு அருகிலுள்ள அலபோய் மலைகளில் ஆகஸ்ட் 5, 1669 அன்று நடந்த அரைபோல் போரில் அவர் தோற்கடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அலபோய் போர்
1669 ஆம் ஆண்டு தனது கூட்டாளியான ராஜபுத்திர அரசர் ராம் சிங் I இன் கீழ் படையெடுப்பை நடத்த ஔரங்கசீப் உத்தரவிட்டார், அவர் முகலாய மற்றும் ராஜபுத்திர இராணுவத்தை முகலாயப் பேரரசின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள தேசத்தை கைப்பற்ற அனுப்பினார். அஹோமின் நன்மை என்னவென்றால், அவர்களுக்கு அந்த பகுதியை பற்றி புரிதல் அதிகம் இருந்தது, அதே நேரத்தில் முகலாயர்கள் திறந்தவெளி போரை விரும்பினர். ஆனால் போர்புகன் புத்திசாலித்தனமாக ஒரு கொரில்லாப் போரில் ஈடுபட்டார், படையெடுப்பாளர்களைத் தாக்கினார், இந்த எதிர்பாராத தாக்குதலால் அவர்கள் பின்வாங்கினர், ஆனால் ராம் சிங் I தனது முழுப் படைகளையும் அஹோம்ஸ் மீது கட்டவிழ்த்து, அலபோய் போரில் அவர்களைத் தோற்கடித்தார்.
சராய்கோட் போர்
அலபோயில் ஏற்பட்ட தோல்வி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சராய்கோட்டில் மற்றொரு உற்சாகமான போருக்கு அஹோம்களை தூண்டியிருக்கலாம், அங்கு அஹோம்கள் முகலாயர்களுடன் ஒரு கடற்படைப் போரில் ஈடுபட்டனர். வரலாற்றுக் குறிப்புகளின்படி, லச்சித் ஒரு போலி தாக்குதலை நடத்தி முகலாயர்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. பிரம்மபுத்ரா நதியில் கடற்படை முன்னேறும்போது, முக்கிய அஹோம் கடற்படை பின்னால் இருந்து தாக்கி,அவர்களுக்கு வெற்றியை உறுதி செய்தது.
ராம் சிங்-ன் கடிதம்
அஹோம் வீரர்களின் வீரத்தைப் பற்றி ராம் சிங் ஔரங்கசீப்பிற்கு பதில் கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது, அந்த கடிதத்தில் அவர்,' அஹோம் அனைவரும் படகு ஓட்டுதல், அம்பு எய்தல், அகழிகள் தோண்டுதல் மற்றும் துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் நிபுணர்கள் ' என்று குறிப்பிட்டுள்ளார். வரலாற்றாசிரியர்கள் கூற்றுப்படி, ராம் சிங் ஒரு தனி நபர் அனைத்துப் படைகளையும் வழிநடத்தியதாகவும், அத்தகைய வீரர்களை இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் பார்த்ததில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
ஆனால் பல ஆண்டுகள் அவரது வீரம் அங்கீகரிக்கப்படாமலே இருந்தது. இறுதியாக லச்சித் போர்புகனின் அசாதாரண துணிச்சலையும் தலைமைத்துவத்தையும் தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) கௌரவிக்கத் தொடங்கியது, இது 1999 முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கேடட்டுக்கு அவரது பெயரில் தங்கப் பதக்கத்தை வழங்குகிறது. NDA நுழைவாயிலில் லச்சித்தின் மார்பளவு சிலை ஒன்றும் உள்ளது.



Click it and Unblock the Notifications
