Latest Updates
-
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்
நமது சுதந்திர தினம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள்!
Independence Day 2023: ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியை நாம் சுதந்திர தின விழாவாக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் நம் இந்தியாவில் நாளை (ஆகஸ்ட் 15) 77 வது சுதந்திரத் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஆகஸ்ட் 15, 1947 இல் இந்தியா பிரிட்டிஷ் மேலாதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றது.
நாம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இருந்து விடுபட்ட போது இந்தியா முழுவதும் எல்லையில்லாத மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் 200 ஆண்டுகால அதிகாரத்தின் பயங்கர ஆட்சியில் இருந்து விடுபட்டு நாம் ஒவ்வொருவரும் நம் சுதந்திர காற்றை சுவாசித்தோம்.

இங்கிலாந்து பாராளுமன்றம் இந்திய சுதந்திரச் சட்டம், 1947 ஐ இயற்றிய பிறகு, இந்திய அரசியலமைப்புச் சபைக்கு சட்டமன்ற இறையாண்மையை ஒப்படைத்த பிறகு இந்தியா தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மாறியது. இருப்பினும் இந்தியாவின் சுதந்திரத்தை பற்றி நீங்கள் அறிந்திராத நிறைய விஷயங்கள் இதில் உள்ளன. அதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
சுதந்திர தினம் ஏன் எப்போது கொண்டாடப்படுகிறது?
சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ல் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நம் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களை நினைவு கூரும் வகையில் இந்த சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. நம் தலைவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் கெளரவிக்கும் வகையில் இந்த சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டின் பிரதமர் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றி நாட்டின் பெருமைகளை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
சுதந்திர தின விழாவை பற்றி அறிந்திராத சுவாரஸ்யமான விஷயங்கள்:
1. இந்திய தேசிய கீதம் 1950 ல் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது
சுதந்திரம் பெற்ற சமயத்தில் நமக்கென்று அதிகாரப்பூர்வமான தேசிய பாடல்கள் எதுவும் இல்லை. 1911 ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூரால் உருவாக்கப்பட்ட பரோதோ பாக்யோ பிதாதா என்ற பாடல் 'ஜன கண மன' என மறுபெயரிடப்பட்டு ஜனவரி 24, 1950 அன்று இந்திய அரசியல் நிர்ணய சபையால் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது.
2. ஆகஸ்ட் 15 ஆம் நாள் சுதந்திர தின நாளாக மவுண்ட் பேட்டன் பிரபுவால் தேர்ந்தெடுக்கப்பட்டது
இந்திய சுதந்திரச் சட்டம் ஜூலை 18, 1947 இல் நிறைவேற்றப்பட்டாலும், இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்ததால், ஆகஸ்ட் 15 ஆம் தேதியை இந்தியாவின் சுதந்திர நாளாக மவுண்ட்பேட்டன் பிரபு தேர்ந்தெடுத்தார் என்று கூறப்படுகிறது.
3. முதன் முதலாக இந்தியக் கொடி 1906 இல் ஏற்றப்பட்டது
ஆகஸ்ட் 7, 1906 அன்று கொல்கத்தாவில் உள்ள பார்சி பாகன் சதுக்கத்தில் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய 3 கிடைமட்ட கோடுகளுடன் கூடிய இந்திய தேசியக் கொடி ஓங்கி உயர்ந்த கம்பத்தில் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு தான் நம் மூவர்ணக் கொடி வடிவமைக்கப்பட்டது.
தற்போதுள்ள நம் தேசியக் கொடி 1921 இல் பிங்கலி வெங்கய்யாவால் வடிவமைக்கப்பட்டது. இந்த மூவர்ணக் கொடி ஜூலை 22, 1947 இல் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 15, 1947 அன்று காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறக் கோடுகளுடன் கூடிய 24 கோடுகள் அடங்கிய அசோக சக்ராவுடன் நம் தேசியக் கொடி வானுயர்ந்த கம்பத்தில் ஏற்றப்பட்டு பறக்க விடப்பட்டது.
4. ஆகஸ்ட் 14 ஆம் தேதியை பாகிஸ்தான் சுதந்திர தினமாக கொண்டாடுகிறது
நம் அண்டை நாடான பாகிஸ்தான் ஆகஸ்ட் 14 ஆம் தேதியை சுதந்திர நாளாக கொண்டாடி வருகின்றனர். இப்படி பாகிஸ்தான் நமக்கு முந்தைய நாளை சுதந்திர தினமாக கொண்டாட ஒரு முக்கிய காரணம் உள்ளது.
பாகிஸ்தானும் இந்தியாவும் பிரிக்கப்படாத இந்தியாவின் கடைசி நாளில் மவுண்ட் பேட்டன் பிரபு இரு நாடுகளின் சுதந்திர தின விழாக்களில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. எனவே தான் பாகிஸ்தான் அவர்களுடைய சுதந்திர தினத்தை ஒரு நாள் முன்னதாக கொண்டாடி வருகின்றனர்.
5. ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழா கொண்டாடும் மற்ற நாடுகள்
நம் இந்தியாவைப் போல மேலும் 5 நாடுகள் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றனர். தென் கொரியா, வட கொரியா, காங்கோ குடியரசு, பஹ்ரைன் மற்றும் லிச்சென்ஸ்டைன் போன்ற நாடுகள் கொண்டாடி வருகின்றனர்.
6. நம் தேசியக் கொடி இந்த இடத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது
நம் இந்தியக் கொடி இந்தியாவில் ஒரு இடத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. நம் கர்நாடகாவின் தார்வாட்டில் அமைந்துள்ள கர்நாடக காதி கிராமோத்யோக சம்யுக்த சங்கம் (KKGSS), இந்தியாவின் தேசியக் கொடியை தயாரித்து வழங்குகிறது. நம் தேசியக் கொடி முற்றிலும் கையால் சுழற்றப்பட்ட மற்றும் கையால் நெய்யப்பட்ட பருத்தி காதி துணியால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications