சிப்பியைப் பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்!!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

சிப்பிகள், கடல் அன்னை தரும் பல பொருட்களில், மிக அழகான மற்றும் சுவாரஸ்யமான ஒரு பொருளாகும் . இஃது கடல் வளங்களில் முக்கிய பொருளாக விளங்குகிறது. அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித சமுதாயத்தோடு பின்னி பிணைந்துள்ளன. அவை ஆபரணங்கள், நகை, பணமாகவும் பயன் படுத்தப் பட்டன/படுத்தப் படுகின்றன. சில சமயங்களை அவை மத அடையாளங்களாகவும் பார்க்கப் படுகின்றன.

சிப்பிகள் என்பது சில வகை கடல் வாழ் உயிரினங்களின் உடலின் ஒரு பகுதி ஆகும். அவை அந்த உயிரினங்களை பாதுகாக்கும் ஒரு கவசமாக இருக்கிறது. அந்த உயிரினங்கள் இறந்ததும், அவைகளின் மிருதுவான உடல் பாகங்களை மற்ற உயிரினங்கள் உண்டு விட்டு சிப்பிகளை விட்டு விடுகின்றன.

கடற்கரைகளில் மணலில் எடுக்கப்படும் வண்ணமயமான சிப்பிகள், கடல் மொல்லஸ்குகள் (Mollusks) எனப்படும் ஒரு வகை உயிரினத்தால் பெரிதும் உருவாக்கப் படுகின்றன. மொல்லஸ்குகள் (Mollusks) பொதுவாக மென்மையான முதுகெலும்பு கொண்ட உயிரினம் ஆகும்.

இவை மிருதுவான உடலை பாதுகாப்பதற்கும் தமது உருவத்தை மறைப்பதற்கும் ஓடுகளை உருவாக்குகின்றன. இந்த ஓடுகள் பெரும்பாலும் கால்சியத்தை அடிப்படையாக கொண்டே உருவாகின்றன.

Useful information about Oyster

மொல்லஸ்குகள் (Mollusks) எனப்படும் வகையில், நத்தைகள், கடற்புலிகள் (Sea Slugs), ஸ்குயிட்ஸ் (Squids), ஆக்டொப்பி (Octopi) முதலிய உயிரினங்கள் அடங்கும். இதில் ஆக்டொப்பியின் (Octopi) ஓடுகள் கடினமாக இல்லாமல், மிருதுவாக இருந்த போதும், இவை மொல்லஸ்குகள் குடும்பத்தை சார்ந்த ஒரு கடல் வாழ் உயிரினமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மொல்லஸ்குகளின் நன்மைகள்

மொல்லஸ்குகளின் நன்மைகள்

மனித இனத்திற்கு இந்த மொலஸ்க்குகள் பல நன்மைகளை தருகின்றன. நமது நாகரீகத்தின் தொடக்க நாட்களில் அவை மனித இனத்திற்கு உணவாக இருந்தது. மீன் பிடித்தல் அதிகமான பின்னர் பல மொல்லஸ்குகள் இனம் அழிக்கப்பட்டுவிட்டன.

மொலஸ்க்குகளில் இருந்து உருவாக்கப்படும் முத்துகள் மற்றும் ஓடுகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் ஆபரணங்களில் வடிவமைப்பில் மற்றும் வேறு பல கலைகளிலும் அதனை உபயோகித்தனர். கடல் சூழ்நிலைகளை சீராக்கவும் அவை பெரிதும் துணை நிற்கின்றன.

மற்ற உயிரினங்களுக்கு இவை உணவாக இருக்கின்றன. இருந்தாலும், மிகவும் மெதுவாக நகரும் தன்மையை கொண்டிருந்தாலும், இவைகள் இருக்கும் சூழலை வலிமையாக்கும் தன்மை மொலஸ்க்குகளுக்கு உண்டு .

சிப்பி ஓடுகள் :

சிப்பி ஓடுகள் :

சிப்பி ஓடுகள் மூன்று தனித்துவமான அடுக்குகளைக் கொண்டுள்ளவை ஆகும், அவை பெரும்பாலும் CaCO3, அல்லது கால்சியம் கார்பனேட் எனும் வேதி பொருளாலும், சிறிய அளவில் புரோட்டீன் (protein) எனப்படும் புரதத்தாலும் உருவாகிறது. ஆனால் ஓடுகளில் இருக்கும் புரதத்தின் அளவு மிகக் குறைவே.

பொதுவாக புரதம் 2% கும் குறைவாகவே இருக்கும், மற்றும் கால்சியம் கார்பனேட் மட்டுமே அதிகமாக இருக்கும். கால்சியம் கார்பனேட் என்பது வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒரு வேதி பொருள். சில பாறைகள், முட்டை ஓடு மற்றும் முத்துக்கள் முதலிய பொருட்கள் கூட இந்த கால்சியம் கார்பனேடால் உருவாக்கப் பட்டவையே.

கால்சியம் கார்பனேட், கடலில் அதிக அளவு இருப்பது தான், கடல் நீர் கடுமையாக இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.

சிப்பிகளின் நிறங்கள்:

சிப்பிகளின் நிறங்கள்:

சிப்பி ஓடுகள் பொதுவாக பல நிறங்களில் காணப்படும். அதற்கு காரணம்,அவை உயிரினங்களுடன் பிணைத்து இருக்கும் போது அவை வெளியிடும் கழிவுகள் மற்றும் அசுத்தங்களால் இவைகளின் நிறம் உருவாகிறது.

சில நேரங்களில் அந்த உயிரினங்கள் எடுத்து கொள்ளும் உணவு மற்றும் அந்த உயிரினங்கள் வாழும் தண்ணீரின் தன்மை பொருத்தும் சிப்பிகளுக்கு நிறங்கள் வருகின்றன.

உதாரணமாக, பவளப்பாறையில் வாழ்கின்ற மற்றும் அங்கு உணவு எடுத்துக் கொள்ளும் மொல்லஸ்குகள் (Mollusks) வகைகளுக்கு பவளப்பாறைகளின் அதே நிறத்தை எடுத்துக் கொள்ளும் ஓடுகள் உள்ளன. இது அவைகளை தங்களின் சூழலிலிருந்து பாதுகாக்க உதவும் இயற்கையான ரசாயன எதிர்வினை ஆகும்.

பளபளப்பு:

பளபளப்பு:

சிப்பி ஓடுகளுக்கு பளபளப்பை தருவது நக்ரே (nacre) என்னும் ஒரு வித பூச்சு. அவை பெரும்பாலும் முத்துக்கள் மீது படந்திருப்பதால், முத்துக்கள் பார்க்க பளபளப்பாக இருக்கின்றன .

ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்களிலிருந்து தங்கள் உடல்களைப் பாதுகாக்க சில மொல்லாக்ச்களில் (Mollusks) நக்ரே (nacre) என்னும் இந்த பூச்சை சுரந்து ஓடுகள் முழுவது பரவலாக பூசி தம்மை பாதுகாத்துக் கொள்கின்றன.

நக்ரே (nacre) பூச்சு மிகவும் மெல்லியதான, பல நூறு நானோ மீட்டர்கள் அடர்த்தியான ஒரு பூச்சு ஆகும். ஆனால் அவை மிகவும் வலுவான மற்றும் நெகிழ்திறன் கொண்டவையும் கூட. முத்துக்களை முழுமை அடைய செய்யும் ஒரு பூச்சும் இது தான்.

மொலஸ்க்குகள் மற்றும் சிப்பிகள் தன்மைகளை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தற்போது கொடுத்துள்ளோம். நாம் இனி கடற்கரைக்கு சென்று சிப்பிகளை பார்க்கும்போது அவைகள் கடந்து வந்த பாதையும் நம் நினைவுக்கு வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Useful information about Oyster

Useful information about Oyster
Story first published: Saturday, August 26, 2017, 12:41 [IST]
Subscribe Newsletter