Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
உங்கள் குழந்தைகள் மீது கண் திருஷ்டி விழாமல் பாதுகாக்கணுமா? அப்ப இத பண்ணுங்க போதும்...!
கண் திருஷ்டி என்பது இந்தியாவில் அனைத்து மதத்தினரிடமும் இருக்கும் ஒரு பொதுவான நம்பிக்கையாகும். கண் திருஷ்டி ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது பொறாமையாகும். இது ஒருவரின் வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றல், அவமானங்கள், விரும்பத்தகாத நிகழ்வுகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.
பெரியவர்களை விட குழந்தைகள் அதிகமாக கண் திருஷ்டியால் பாதிக்கப்படலாம். குழந்தைகளின் அழகு, குறும்பு மற்றும் புத்திசாலித்தனம் போன்றவை மற்றவர்களின் ஆர்வத்தைத் தூண்டலாம். இது கண் திருஷ்டிக்கு வழிவகுக்கும். இது அவர்களின் உடல்நிலையில் கோளாறுகள், எப்போதும் அழுவது, உடல் எடைகுறைதல் போன்ற பிரச்சினைகளை அவர்களுக்கு ஏற்படுத்தும்.

நீங்களோ அல்லது உங்கள் குழந்தையோ கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டுள்ளதாக நீங்கள் நினைத்தால் அதனை சில எளிய வழிகள் மூலம் குணப்படுத்தலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
- குழந்தை தூங்கி எழுந்திருக்கும் போது அவர்களுடன் இருக்க வேண்டும், குழந்தை எழுந்தவுடன் உங்களை எவ்வளவு அதிகமாகப் பார்க்கிறறார்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் முகத்தை அவர் மனதில் வைத்திருப்பார். நீண்ட நேரம் அவர்கள் முன் உங்களை வைத்திருப்பது அவர்களுக்குள் தைரியத்தைத் தூண்டும்.
- குழந்தைக்கு உணவை எப்போதும் உங்கள் கைகளால் ஊட்ட வேண்டும், உணவை யார் தயார் செய்திருந்தாலும், அதை உங்கள் கைகளால் ஊட்டும்போது, குழந்தைகள் அதனை நீங்கள் செய்ததாகவே கருதுவார்கள், அது குழந்தை பருவத்தில் தாய்ப்பாலைப் போலவே அவர்கள் உடலுக்கு வலிமையைக் கொடுக்கும்.
- குழந்தைகள் நிச்சயமாக மற்றவர்களின் தீய கண்களை உணர்வார்கள், அது தனது சொந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் உணர்வார்கள். மாலையில், குழந்தை படுக்கையில் உறங்கச் செல்லும் போது, ஒரு கல்லை சிறிது தண்ணீரில் கழுவி, குழந்தையை தூக்க வைத்த பிறகு, ஒரு நிலையான இடத்தில், குழந்தைகள் மிகவும் பலவீனமாக இருக்கும் நாளில் வைக்கவும். குழந்தைகள் மீது கண்திருஷ்டி இருந்தால் அது உடைந்து விடும் அல்லது காணாமல் போய்விடும்.
- குழந்தை மீது இருக்கும் கண் திருஷ்டியை போக்க மாவிளக்கு செய்து, அதில் எள் எண்ணெயை நிரப்ப வேண்டும். அதன்பிறகு ஒரு விளக்கை ஏற்றி, உங்கள் குழந்தையின் தலை முதல் பாதம் வரை 21 முறை நகர்த்த வேண்டும். அதன்பிறகு அந்த தீபத்தை ரோட்டில் வைத்து விட வேண்டும். இதன்மூலம் உங்கள் குழந்தையின் கண்திருஷ்டி உடனடியாக நீங்கும்.
- அனுமன் அனைத்து பிரச்சனைகளின் மீட்பராக கருதப்படுகிறார். அவர் அனைத்து பிரச்சனைகளையும் அழிப்பவர். எனவே, ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தைக்கு பஜ்ரங் பான் என்ற மந்திரத்தை ஓத வேண்டும். இது தவிர அனுமன் சாலிசாவை தினமும் செய்யவும். இதனால் உங்கள் குழந்தைகளை அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்.
- கண் திருஷ்டியை நீக்க, சுத்தமான கைக்குட்டையில்சந்தனத்தை தடவி, அதன் பிறகு, பத்து கிராம் கறுப்பு எள், கருப்பு உளுந்து, மூன்று முழு காய்ந்த மிளகாய், இரும்பு ஆணிகள் போன்றவற்றை இந்தக் கைக்குட்டையில் வைத்து மூட்டையாகக் கட்டவும். அதன் பிறகு, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அந்த மூட்டையை குழந்தையின் தலையணையின் கீழ் வைக்கவும். 24 மணி நேரம் கழித்து அந்த மூட்டையை ஆற்றில் தூக்கி எரிந்து விடுங்கள்.



Click it and Unblock the Notifications
