Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
'இந்த' 6 டிப்ஸை ஃபாலோ பண்ணுன்னா போதுமாம்... 40 வயசுக்குள்ள நீங்க பெரிய கோடீஸ்வரரா ஆகிடலாமாம்!
கோடீஸ்வரராக அல்லது பணக்காரராக வேண்டும் என்று ஆசை பெரும்பாலும் எல்லா மக்களுக்குள்ளும் இருக்கும். ஆனால், சிலர் மட்டுமே அந்த ஆசையை அடைகிறார்கள். நீங்கள் என்றைக்காவது எப்படி சீக்கிரமாக பணக்காரராவது என்று யோசித்து இருக்கிறீர்களா?
தினமும் காலையில் எழுந்ததும் பலர் பலவிதமான செயல்களில் ஈடுபடுவார்கள். குறிக்கோள் மற்றும் இலட்சியங்களை கொண்ட நபர்கள், அதற்கான திட்டமிடலுடன் தங்கள் நாளை பயனுள்ளதாகத் தொடங்குவார்கள். நீங்கள் கோடீஸ்வரராக ஆசைப்பட்டால், உங்கள் நாளை பயனுள்ளதாக நாங்கள் மாற்றுகிறோம்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கலாம். அந்த வகையில், 40 வயதிற்குள் கோடீஸ்வரராக மாறுவது என்பது உங்கள் மனதில் வைக்கும் அடையக்கூடிய நிதி இலக்காக இருக்கலாம். இருப்பினும், இதற்கு ஸ்மார்ட் நிதி திட்டமிடல், ஒழுக்கமான சேமிப்பு மற்றும் முதலீடு மற்றும் தொழில் முனைவோர் மனப்பான்மை ஆகியவற்றின் திறன் தேவைப்படுகிறது.
இந்த இலக்கை அடைய நீங்கள் தொடங்க வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
நிதி இலக்குகளை அமைத்தல்
40 வயதிற்கு முன் கோடீஸ்வரராக ஆக வேண்டும் என்றால், அதற்கான முதல் படி, திட்டமிடல். நல்ல தெளிவான நிதித் திட்டத்துடன் உங்கள் இலக்கை தொடங்க வேண்டும். 40 வயதிற்குள் எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும் அல்லது முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்பதற்கான உங்கள் இலக்கை சரியாக வரையறுக்க வேண்டும். இவை உங்களை தொடர்ந்து, அதே பாதையில் செல்ல ஊக்குவிக்கும்.
உங்கள் வருமானத்தை அதிகரிக்கவும்
பணத்தை அல்லது செல்வத்தைக் குவிப்பதற்கான மிகவும் எளிமையான வழிகளில் ஒன்று, உங்கள் சம்பாதிக்கும் திறனை அதிகரிப்பதாகும். உங்கள் தொழிலில் முன்னேற வாய்ப்புகளைத் தேடுங்கள். புதிய திறன்களைப் பெறுவதில் வேலை செய்யுங்கள். எந்த நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் வருமான ஆதாரங்களை பல்வகைப்படுத்துவது உங்கள் வருவாயை கணிசமாக அதிகரிக்கும்.
உங்கள் வசதிக்குக் கீழே வாழுங்கள்
நீங்கள் பணத்தை சேமிக்க விரும்பினால், உங்கள் வருமானத்திற்கு கீழே செலவு செய்து வாழ வேண்டும். நீங்கள் உங்கள் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் மற்றும் உங்களுக்கு உண்மையில் தேவையில்லாத பொருட்களுக்கு அதிக செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது, உங்கள் சேமிப்பது அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். உங்கள் வருமானத்தில் இருந்து எவ்வளவு அதிகமாக சேமிக்க முடியுமோ, அவ்வளவு அதிகமாக முதலீடு செய்து உங்கள் செல்வத்தை இரண்டு மடங்காக வளர்க்கலாம்.
புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்
சொத்துக் குவிப்பதற்கு முதலீடு முக்கியம். பங்குகள், பத்திரங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் பிற சொத்துக்களை உள்ளடக்கிய பல்வகைப்பட்ட முதலீட்டு உத்தியைக் கவனியுங்கள். காலப்போக்கில் உங்கள் செல்வத்தை அதிகரிக்க கூட்டு வட்டியைப் பயன்படுத்தி, நீண்ட கால முதலீட்டு உத்தியில் உறுதியாக இருங்கள்.
உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுக்க நிதி ஆலோசகர் அல்லது திட்டமிடுபவரை அணுகி ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்.
தொடர்ந்து உங்களைப் பயிற்றுவிக்கவும்
நிதி உலகம் எப்போதும் உருவாகி வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால், எப்போதுமே உங்களை பயிற்றுவிக்க வேண்டும். புத்திசாலித்தனமான முதலீட்டு முடிவுகளை எடுக்க, நீங்கள் தொடர்ந்து விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். அவற்றைப் படிக்கவும், சரியான வழியில் யோசிக்க வேண்டும், நிதிச் செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் உத்திகளைப் பற்றி அறிந்துகொள்வது, தகவலறிந்து முடிவுகளை எடுக்கவும், உங்கள் நிதி அபாயங்களைக் குறைக்கவும் மற்றும் உங்கள் வருமானத்தை அதிகரிக்கவும் உதவும்.
பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருங்கள்
40 வயதிற்கு முன் கோடீஸ்வரராக மாற, உங்களுக்கு பல வருட கடின உழைப்பும் விடாமுயற்சியும் தேவைப்படும். பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருங்கள், பின்னடைவுகள் அல்லது தற்காலிக நிதி சவால்களால் ஏற்படுவது பொதுவானது. ஆதலால், அதை கண்டு சோர்வடைய வேண்டாம், உங்கள் இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் பயணியுங்கள்.



Click it and Unblock the Notifications
