Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
2024-ல் இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஆபத்தானவங்களா மாறப்போறாங்களாம்... இவங்ககிட்ட ரொம்ப உஷாரா இருங்க...!
Horoscope 2024: 2024 ஆண்டு ஜோதிடக் கணிப்புகளின் படி, சில ராசிக்காரர்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பல சிரமங்களையும், சவால்களையும் சந்திப்பார்கள். இந்த ராசிக்காரர்கள், மாறாக, கிரகங்கள் மற்றும் ஜோதிட நிகழ்வுகளின் எதிர்மறையான செல்வாக்கின் காரணமாக ஆண்டு முழுவதும் எளிதில் எரிச்சல், கோபம், பிரச்சனையை ஏற்படுத்துவது மற்றும் சுற்றியுள்ள மக்களுடன் எளிதில் மோதக்கூடியவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் கோபம் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த ராசிக்காரர்கள் இந்த ஆண்டின் மிகவும் ஆபத்தான மனிதர்களாக மாறுகிறார்கள். இந்த பதிவில் 2024-ல் மிகவும் ஆபத்தானவர்களாக மாறப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

துலாம்
தங்கள் மனதில் பட்டதைப் பேசும் போது, துலாம் சில சமயங்களில் மிகவும் வெளிப்படையானவர்களாக இருப்பார்கள், அவர்கள்தங்கள் வார்த்தைகளால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள்.
2024 ஆம் ஆண்டில், உங்கள் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்று அவர்கள் ஏன் நம்புகிறார்கள் என்பதைத் தெளிவாகக் கூற துலாம் ராசிக்காரர்கள் பயப்பட மாட்டார்கள். அவர்கள் தங்கள் வார்த்தைகளையே சக்திவாய்ந்த ஆயுதமாக பயன்படுத்துவார்கள்.
இந்த நேரத்தில் அவர்களுடன் தொடர்புகொள்வது சவாலாக இருக்கலாம், ஏனென்றால் அவர்கள் அனைத்திற்கும் கோபப்படுவார்கள் மற்றும் குறை கூறுவார்கள், மேலும் அனைவரையும் காயப்படுத்துவார்கள். கூடுதலாக துலாம் ராசிக்காரர்கள் இந்த ஆண்டு பொறாமையால் பல தவறுகளை செய்வார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பொதுவாக மிகவும் நேர்மையானவர்களாக அறியப்படுகிறார்கள், சில சமயங்களில் வெளிப்படையாகப் பேசுவது எல்லை மீறி மற்றவர்களுக்கு வலியை ஏற்படுத்தும்.
உண்மையைப் பேசுவதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள், அவர்களின் கருத்து யாராலும் ஆதரிக்கப்படாவிட்டாலும், அது ஒருவரின் உணர்ச்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அவர்கள் அதனைப் பற்றி கவலைப்படுவதில்லை.
அவர்களைச் சுற்றியுள்ளவர்களுடன் சந்தேகத்திற்கு இடமின்றி ஆழமாக இணைக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் மனக்கிளர்ச்சி மற்றும் ஆக்ரோஷமான பக்கத்தை இந்த ஆண்டு புறக்கணிக்க முடியாது.
அவர்களை சீண்டாமல் இருப்பதே அவர்களுடன் இருப்பவர்க்ளுக்கு இந்த ஆண்டு நல்லது, ஏனெனில் அவர்கள் தங்கள் மனக்கசப்பை மற்றவர்களுக்கும் பரப்புவார்கள். உங்களின் செயல்கள் இந்த ஆண்டு அவர்களுக்குள் தீராப்பகைக்கு வழிவகுக்கும்.
மிதுனம்
புத்திசாலி ராசியான இவர்கள் இந்த ஆண்டு யோசிக்காமல் எந்த பிரச்சினையிலும் இறங்க மாட்டார்கள், ஆனால் அப்படி அவர்கள் இறங்கும் போது அது நிச்சயம் பேரழிவை ஏற்படுத்தும். அவர்கள் வாதம் செய்யும் திறன் இந்த ஆண்டு அனைவரின் வாயையும் மூடச்செய்யும்.
இந்த ஆண்டு அவர்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களை இருளுக்குள் தள்ளும் வேலையில் இறங்குவார்கள். அவர்களின் மனதை புண்படுத்தும் படிநடந்து கொள்வது இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல பலன்களைத் தராது. அவர்கள் அமைதியான மனநிலையில் இருக்கும் போது அவர்களிடம் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் வரும் ஆண்டில் ஒரு சவாலான காலகட்டத்தை எதிர்கொள்ளப் போகிறார்கள், நீங்கள் அவர்களுடன் தவறாமல் நேரத்தை செலவிடுவது அவர்களுக்கு உதவியாக இருக்கும். பொதுவாகவே தனுசு ராசிக்காரர்களுடனான மோதல் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த ஆண்டு அதில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களின் கோபம் பொதுவாக பேரழிவை ஏற்படுத்தும்.
திடீரென கோபம் கொள்ளும் அவர்களின் குணம் அவர்களின் கட்டுப்பாட்டை இழக்க வைக்கும் மற்றும் அவர்களை அணுகுவதை மற்றவர்களுக்கு சிரமமாக்கும். அவர்களின் கோபம் விரைவில் மறையக்கூடியதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் ஈடுசெய்ய முடியாததாக இருக்கும். இதனாலேயே அவர்கள் இந்த ஆண்டின் ஆபத்தான ஒருவராக இருக்கிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












