Latest Updates
-
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
இந்திய PINCODE-க்கு பின்னால் உள்ள ரகசியங்கள் என்ன தெரியுமா? அதன் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு அர்த்தம் உள்ளதாம்...!
இந்தியா, எகிப்து, சுமர், ரோம், கிரீஸ் மற்றும் சீனாவின் முக்கிய பகுதிகளில் கடிதங்கள் மிகவும் பழமையான தகவல் தொடர்பு முறையாகும். ஆனால் இந்த கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் எப்படி சரியான இடத்தை அடைகின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
அதற்கான சரியான பதில் அந்த ஊரின் பின்கோடாகும். சுதந்திரத்தின் 75வது ஆண்டுடன், ஸ்ரீராம் பிகாஜி வேலங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சல் குறியீட்டு எண்ணும் 50 வயதை எட்டியது. அஞ்சல் சேவையின் PIN குறியீடு ஆகஸ்ட் 15, 1972 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் கூரியர்கள், கடிதங்கள் மற்றும் பிற அஞ்சல் பொருட்களை அனுப்ப ஆறு இலக்க குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

இந்த அதிசயமான ஆறு இலக்க அஞ்சல் குறியீட்டு எண்ணெய்ப் பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? எதை வைத்து இந்த எண்கள் பிரிக்கப்பட்டன, அந்த எண்கள் எதை குறிப்பிடுகின்றன மற்றும் அதன் பின்னால் உள்ள சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பின்கோடு என்றால் என்ன?
PIN குறியீட்டின் முழு வடிவம் அஞ்சல் குறியீட்டு எண்(Postal Index Number). 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது, இது இந்தியாவின் அஞ்சல் சேவையால் இடங்களைப் பிரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பகுதியின் அஞ்சல் குறியீடு 6 இலக்கங்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொரு இலக்கமும் ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தைக்க் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் பின்கோடு அமைப்பு ஸ்ரீராம் பிகாஜி வேலங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டது. சமஸ்கிருத அறிஞர் வேலங்கார், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகவும், அஞ்சல் மற்றும் தந்தி வாரியத்தின் மூத்த உறுப்பினராகவும் இருந்தார்.
பின்கோடு குறியீடு ஏன் தேவைப்பட்டது?
உலக அளவில் மிகப்பெரிய அஞ்சல் நெட்வொர்க்கைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாடு முழுவதும் சுமார் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. வெவ்வேறு நகரங்களில் ஒரே மாதிரியான பெயர்கள் அல்லது மொழித் தடைகள் காரணமாக அஞ்சல்களை வரிசைப்படுத்தி விநியோகிக்கும் செயல்முறை குழப்பமாக மாறியது. எனவே, செயல்முறையை எளிதாக்க, பின் குறியீடு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியா 9 புவியியல் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப பின்கோடுகள் ஒதுக்கப்பட்டன. அதில், ஒரு புள்ளி இராணுவ தபால் சேவைக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டது. தபால் துறையின் படி, நாட்டில் மொத்தம் 19101 பாயிண்ட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அஞ்சல் குறியீட்டு எண் எவ்வாறு செயல்படுகிறது?
அஞ்சல் குறியீட்டு எண் மொத்தம் 6 இலக்கங்களைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் செல்லுபடியாகும், ஒவ்வொரு இலக்கங்களும் வெவ்வேறு தகவல்களைக் குறிக்கின்றன. முதல் இலக்கமானது அஞ்சல் மண்டலத்தைக் குறிக்கிறது.
உதாரணமாக கிழக்கு, மேற்கு, வடக்கு அல்லது தெற்கு. இரண்டாவது இலக்கமானது அதன் துணைப் பகுதியைக் குறிக்கிறது, மூன்றாவது மண்டலம் வரிசைப்படுத்தும் மாவட்டத்தைக் குறிக்கிறது. அதேசமயம், மீதமுள்ள எண்கள், தபால் நிலையத்தின் இருப்பிடம் பற்றிய தகவலை வழங்க, புவியியலை மேலும் சுருக்குகிறது.
பின்னர் இந்த பார்சல்கள், கடிதங்கள் மற்றும் பொருட்கள் பின்கோடு பிரிவின் அடிப்படையில் தபால் அலுவலகம் அல்லது கூரியர் ஏஜென்சிகளுக்கு வழங்கப்படுகின்றன. இங்கிருந்து இவை அனைத்தும் பெறுநரின் முகவரிக்கு நகர்த்தப்படுகின்றன.
பின்கோடுக்குப் பின்னால் இருந்த நபர் யார்?
சமஸ்கிருத அறிஞரும் கவிஞருமான ஸ்ரீ ராம் பிகாஜி அஞ்சல் குறியீட்டு எண்களின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். பொருட்கள் மற்றும் கடிதங்களை சிறப்பாகப் பிரிப்பதற்காக நாட்டில் பின்கோடு செயல்படுத்துவது அவரது யோசனையாக இருந்தது.
தகவல் தொடர்பு அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும், தந்தி வாரியத்தின் மூத்த உறுப்பினராகவும் பணிபுரிந்தபோது, இந்திய அஞ்சல் அமைப்பின் செயல்திறனை மேம்படுத்த ஒரு அமைப்பின் தேவையை உணர்ந்தார். பிகாஜி பின்கோடு மூலம் அத்தகைய வலுவான அமைப்பை உருவாக்கினார், அது நாட்டில் எந்த இடத்திற்கும் பொருட்களை கொண்டு செல்ல வழிவகுத்தது.
பிகாஜியின் பங்களிப்பு அஞ்சல் சேவைகளின் மேம்பாட்டுடன் மட்டும் முடிவதில்லை. அவர் சமஸ்கிருதத்தில் 105 புத்தகங்களை எழுதினார் மற்றும் அவரது நாடகம் "விலோம காவ்யா" இன்னும் சமஸ்கிருத இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பு என்று அழைக்கப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற உலக தபால் தலை கண்காட்சியின் தலைவரான பிகாஜி தனது அசாதாரண படைப்புகள் மற்றும் சாதனைகளுக்காக பல விருதுகளையும் வென்றார்.
தற்போது கடிதங்களின் சகாப்தம் முடிந்துவிட்டது, ஆனால் GPS-ல் பின்கோடின் முக்கியத்துவம் இன்னும் அப்படியே உள்ளது. முன்கூட்டியே டெலிவரி பெறுவதற்கு உணவு அல்லது வேறு எதையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது சரியான பின்கோடை உள்ளிட மறக்காதீர்கள். இன்னும் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் பின்கோட்டின் முக்கியத்துவம் மாறாது.



Click it and Unblock the Notifications

