Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
குரு-புஷ்ய யோகத்தால் ஜூலை 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகுது...
Guru Pushya Yoga 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி யோகங்கள் உருவாகும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் சுப யோகங்கள் உருவாகினால், அது நல்ல வெற்றியையும், முன்னேற்றத்தையும் தரும்.
ஒருவரது ஜாதகத்தில் குறிப்பிட்ட சில கிரகங்கள் குறிப்பிட்ட வீடுகளில் இருக்கும் போது சுப யோகங்களை உருவாக்குவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதில் ஒரு சுப யோகம் தான் குரு-புஷ்ய யோகம். இந்த குரு-புஷ்ய யோகம் ஒரு மங்களகரமான சுப யோகமாகும்.

இந்த சுப யோகம் ஜூலை 30 ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த யோகம் நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் வாரி வழங்கப் போகிறது. ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் புஷ்ய நட்சத்திரம் மிகவும் மங்களகரமான நட்சத்திரமாகும். இது நட்சத்திரங்களின் ராஜா என்று குறிப்பிடப்படுகிறது.
ஜூலை இறுதியில் குரு புஷ்ய யோகம் உருவாவதால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
குரு-புஷ்ய யோகத்தால் மேஷ ராசிக்காரர்களின் வசதிகள் பெருக வாய்ப்புள்ளது. மேலும் செலவுகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறைவால் சற்று மன அழுத்தத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது. மாணவர்கள் நல்ல வெற்றியைக் காணலாம். வெளிநாடு செல்ல முயற்சித்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் உங்களைத் தேடி வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
ரிஷபம்
சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் குரு-புஷ்ய யோகத்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காணும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கலாம். வணிகர்கள் கணிசமான லாபத்தைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு-புஷ்ய யோகமானது அற்புதமான பலன்களைத் தரும். இந்த யோக காலத்தில் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. முடியாது என்று நினைக்கும் வேலைகளை கூட எளிதில் முடித்து காட்டுவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு-புஷ்ய யோக காலத்தில் குரு பகவானின் பரிபூர்ண அருள் கிடைக்கும். சமூகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வளர்ச்சியையும், மரியாதையையும் பெறுவார்கள். அலுவலகத்தில் இவர்களின் எண்ணங்கள் நல்ல பாராட்டைப் பெறும். இக்காலத்தில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் மற்றும் திட்டங்கள் நல்ல பலனளிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
