Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சியால் இன்று முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
Guru Peyarchi 2024: வேத ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். கல்வி, திருமணம், குழந்தைகள், அதிர்ஷ்டம், செல்வம், பக்தி, ஆன்மீகம் ஆகியவற்றிற்கு காரணமானவர் தான் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார்.
இவர் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இதுவரை மேஷ ராசியில் பயணித்து வந்த குரு பகவான், 2024 மே 01 ஆம் தேதி சுக்கிரன் ஆளும் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். ரிஷப ராசியில் நுழைந்த பின் அக்டோபர் 09 ஆம் தேதி ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.

ஜாதகத்தில் குரு பகவான் 2, 5, 9, 11 ஆகிய விடுகளின் காரணியாவார். இதில் 9 ஆவது வீடு அதிர்ஷ்ட ஸ்தானம், 11 ஆவது வீடு வருமான ஸ்தானம். குரு பகவான் இந்த வீடுகளில் இருக்கும் போது, வருமானம் அதிகரிக்கும், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் செய்யும் காரியங்களில் நல்ல வெற்றிகள் கிடைக்கும். இந்நிலையில் மே 01 ஆம் தேதி குரு பகவான் தனது நண்பனான சுக்கிரனின் ரிஷப ராசிக்கு செல்வதால், அடுத்த ஒரு வருடம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய மாற்றத்தைக் காணலாம். இப்போது குரு பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக சிறப்பான மாற்றத்தைக் காண்பீர்கள். இது தவிர குரு பகவானின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு ஆண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெளிநாடு செல்ல, புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்க வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். அதிக கடனை வாங்கியிருந்தால், இந்த ஆண்டில் அதை திருப்பி கொடுத்துவிடுவீர்கள். யோகா, ஆயுர்வேதம், ஜோதிடம், வாஸ்து போன்றவற்றை கற்றுக் கொள்ளவும், முதலீடுகளை செய்யவும் சிறந்ததாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய நண்பர்களைப் பெறுவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கினால் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் பணியிடத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் காண்பார்கள். ஆனால் பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற நினைத்தால், அதை இக்காலத்தில் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. வேண்டுமானால் ஆகஸ்ட் மாதத்திற்கு பின் முயற்சிக்கலாம். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கூடுதல் கவனம் செலுத்தினால், மெதுவாக ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதன் மூலம் வெளிநாடு செல்ல வேண்டுமென்ற உங்களின் கனவு நிறைவேறும். வருமானத்தில் உயர்வைக் காணக்கூடும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து மற்றும் கௌரவம் உயரும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். செலவுகள் கையை மீறிப் போகும். இதன் விளைவாக நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்கும். இதனால் நிறைய மருத்துவ செலவுகளையும் சந்திக்க நேரிடும். முடிந்தவரை செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் தைரியம் அதிகரிக்கும். வியாபாரிகள் மிகப்பெரிய அளவில் லாபத்தைப் பெறுவார்கள். மிலிட்டரி, போலீஸ் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு அடுத்த ஒரு வருடம் அருமையாக இருக்கும். புதிய வீடு அல்லம் நிலம் வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், அதை அட்சய திருதியை நாளில் செய்வது மிகவும் நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். சரியான நேரத்தில் சிகிச்சை பெறுங்கள். அஜாக்கிரதை பெரிய செலவை வைத்துவிடும். மேலும் இக்காலத்தில் நிதி நிலையும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். செலவுகள் முன்பை விட அதிகமாக இருக்கும். முக்கியமாக நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். மாணவர்கள் உயர் கல்வி பயில எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். இக்காலத்தில் புதிய நண்பர்களை அதிகம் உருவாக்குவீர்கள். ஆரோக்கியத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்தால், அது இந்த ஆண்டில் முடிவுக்கு வரும்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. குரு பகவான் நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வைப்பார். எனவே ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையில் சிக்கி, வெளியே வர முடியாமல் தவிப்பீர்கள். ஆனால் போக போக சரியாகிவிடும்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். நிதி ரீதியாக அவ்வளவு சிறப்பாக இருக்காது. நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக மூட்டு வலியால் அதிகம் அவதிப்படுவீர்கள். காது தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கு, அப்பிரச்சனை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் அரசியலில் இருப்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். திருமணமாகாதவர்கள் இந்த குரு பெயர்ச்சிக்கு பின் தங்கள் வாழ்க்கை துணையை சந்திக்கலாம். அதுவும் மனதிற்கு பிடித்தவாறான வாழ்க்கைத் துணையை சந்திப்பீர்கள். சிலருக்கு திருமணம் நடக்கவும் வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications