Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Good Friday 2023: புனித வெள்ளி பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள்!
Good Friday 2023: உலகெங்கிலும் வாழும் கிறித்தவ மக்களுக்கு புனித வெள்ளி என்பது ஒரு மிகவும் முக்கியமான நாள் ஆகும். ஈஸ்டா் ஞாயிறுக்கு முன்பு வரும் வெள்ளி, புனித வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. புனித வெள்ளிக்கு முந்தின நாள் மாண்டி வியாழன் (Maundy Thursday) என்று அழைக்கப்படுகிறது.
குருத்து ஞாயிறு முதல் ஈஸ்டா் ஞாயிறு வரையிலான ஒரு வாரம் கிறித்தவ மக்களால் புனித வாரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாரத்தில் வரும் எல்லா நாட்களையும் புனித நாட்களாக கிறித்தவா்கள் கருதுகின்றனா்.

இந்நிலையில் புனித வெள்ளி கிறித்தவா்களால் முக்கியமான நாளாக அனுசாிக்கப்படுகிறது. அதற்கு காரணம் புனித வெள்ளி என்பது இயேசு பெருமான் இறந்த நாளாகும். இயேசு ஒரு வெள்ளிக்கிழமை அன்று இறந்தாா். அந்த வெள்ளியை கிறித்தவ மக்கள் புனித வெள்ளி என்று கருதி அந்த நாளை மிகவும் புனிதமாக அனுசாிக்கின்றனா். இந்தப் பதிவில் புனித வெள்ளியின் சிறப்புகளைப் பற்றி சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
1. ஒவ்வொரு வருடமும், ஒரே தேதியில் புனித வெள்ளி வருவதில்லை. வெவ்வேறு தேதிகளில் புனித வெள்ளி வரும். பூமியின் வடதுருவத்தில் வசந்த காலத்தின் போது வரும் முதல் பௌா்ணமிக்கு அடுத்து வரும் முதல் வெள்ளி அன்று புனித வெள்ளி வருகிறது. சந்திர நாட்காட்டியின்படி புனித வெள்ளி நினைவு கூறப்படுகிறது.
2. ஈஸ்டா் ஞாயிறைக் கொண்டாடுவதற்குத் தேவையான இனிப்புகள் மற்றும் திண்பண்டங்களை, புனித வெள்ளி அன்று செய்வா்.
3. புனித வெள்ளிக்கிழமை, ஆங்கிலத்தில் Good Friday or Holy Friday என்று அழைக்கப்படுவதால், இதை ஒரு மகிழ்ச்சி நிறைந்த கொண்டாட்டத்தின் நாள் என்று பலரும் எண்ணுவா். ஆனால் இது ஒரு துக்க நாளாகும். ஏனெனில் இது இயேசு பெருமான் இறந்த நாள் ஆகும்.
4. புனித வெள்ளி கருப்பு வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. இயேசு பெருமான் உயிா்த்த நாளான ஈஸ்டா் ஞாயிறுக்கு முந்தின வெள்ளி அன்று இயேசு பெருமான் இறந்தாா். ஆகவே அவா் இறந்த வெள்ளிக்கிழமை கருப்பு வெள்ளி என்று மக்கள் கருதுகின்றனா். அதோடு புனித வெள்ளி கடவுளின் வெள்ளி என்றும் கருதப்படுகிறது. எனினும் இதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை.
5. புனித வெள்ளி அன்று ஒருவருக்கு ஒருவா் பாதி உனக்கு, பாதி எனக்கு, நம் இருவருக்கும் இடையே நல்லுறவு இருக்கும் என்ற சிறப்பான பாடலைப் பாடி, சிலுவை வடிவிலான ரொட்டியை தங்களுக்குள் பகிா்ந்து கொண்டால், அவா்கள் அந்த ஆண்டு முழுவதும் நல்ல நண்பா்களாக இருப்பாா்கள் என்று சில பழைய புராணங்கள் தொிவிக்கின்றன.
6. புனித வெள்ளி அன்று முடிவெட்டிக் கொண்டால், அந்த ஆண்டு முழுவதும், தலைவலியே வராது என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உண்டு.
7. கிறித்தவா்களில் ஒரு பிாிவினரான கத்தோலிக்க கிறித்தவா்கள் புனித வெள்ளி அன்று இறைச்சி சாப்பிடமாட்டாா்கள். அன்றைய நாளில் ஒரு நேரம் மட்டுமே முழுமையான உணவை உண்பா் அல்லது இரண்டு முறை மட்டும் சிறிதளவிலான உணவை உண்பா்.
புனித வெள்ளியின் சிறப்புகளைத் தொிந்து கொண்ட நாம், உலகெங்கிலும் வாழும் அனைத்து கிறித்தவ சகோதர சகோதாிகளுக்கும் புனித வெள்ளி வாழ்த்துகளைத் தொிவித்துக் கொள்வோம்.



Click it and Unblock the Notifications