Latest Updates
-
கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் அம்மிணி கொழுக்கட்டை ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
வயிற்றை சுத்தம் செய்யணுமா? அப்ப காலையில் எழுந்ததும் இந்த பானங்களை குடிங்க... -
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்
மனிதர்களை ஆட்டை வைத்து அணுஅணுவாக சித்திரவதை செய்யும் கொடூர தண்டனைமுறை... இப்படியுமா ஒருவரை கொலை பண்ணுவாங்க?
மனிதர்கள் தோன்றிய காலம் முதலே குற்றங்களும் அதற்கான தண்டனைகளும் இருந்து வருகின்றன. உலகம் தோன்றிய போது இருந்த மனிதர்கள் இப்போது இல்லை, பல்வேறு வழிகளில் வளர்ச்சி அடைந்துள்ளோம். இதற்கு முக்கிய காரணம் மனிதர்களின் சிந்திக்கும் திறன்தான். மனிதர்களின் வரலாறு முழுவதுமே மாறாத ஒரு உண்மை, விசித்திரமான விஷயங்களை செய்வதை ஒருபோதும் நிறுத்தவில்லை.
ஒருவரையொருவர் காயப்படுத்த அல்லது கொல்ல வித்தியாசமான வழிகளைக் கண்டுபிடிப்பது மனிதர்களுக்கு ஒருபோதும் சலிப்பை ஏற்படுத்தாத விஷயமாகும். தற்போது கொடிய குற்றங்களுக்கு தூக்கிலிடுவது, விஷ ஊசி போடுவது மற்றும் மின்சார நாற்காலியில் அமர வைப்பது போன்ற மரண தண்டனைகள் அளிக்கப்படுகின்றன, ஆனால் கடந்த காலங்களில் சில தண்டனை முறைகள் முற்றிலும் வினோதமானவையாக இருந்தன.

யானைகளை வைத்து மிதித்துக் கொள்வது, பால் மற்றும் தேனை ஊற்றி ஒரு தனிப்படகில் ஏரிக்கு நடுவே அனுப்பிக் கொள்வது, சிலுவையில் அறைந்து கொல்வது, எலிகளை விட்டு கடித்துக் கொள்வது என பல பயங்கரமான வழிகள் இருந்தன. ஆனால் இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது இவை அனைத்தையும் விட கொடுமையானது மற்றும் வினோதமானது.
காளை வடிவத்தில் ஒரு சாதனத்தை உருவாக்கி அதில் ஒரு மனிதரை உள்ளே வைத்து தீ வைத்து கொளுத்துவது முதன் முதலாக பலி கொடுக்க தயாரிக்கப்பட்ட சாதனமாகும். ஆனால் அதை செய்தவர்தான் அதில் முதலில் பலி கொடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற வரலாற்றின் பெரும்பாலான தண்டனை முறைகள் ஒவ்வொன்றும் சில வகையான கருவி அல்லது செயல்படுத்தலை உள்ளடக்கியது, ஆனால் எந்தவித கருவிகளும், தொழில்நுட்பமும் இல்லாமல், ஒரு வாளி உப்பு நீர் மற்றும் ஒரு ஆடு தேவைப்பட்ட கொடூர தண்டனை முறையும் வரலாற்றில் இருந்தது.
இந்த வரலாற்று சித்திரவதை முறை 'ஆட்டின் நாக்கு(Goat's Tongue)' என்று அறியப்பட்டது, மேலும் இது ஒரு நபரை வேதனைப்படுத்தும் வலியில் அல்லது அவர்களின் மரணத்தில் விளைவிக்கலாம்.

இது எவ்வாறு வேலை செய்தது என்றால், ஒருவர் தனது பாதத்தை உப்புநீரில் நன்கு ஊறவைத்து, அதன் தோல் எளிதில் உரியும்படி மாற்றப்படும், அதன்பின் தண்டனை வழங்கப்பட்டவர் ஆட்டால் சித்திரவதை செய்யப்பட சரியான இடத்தில் கட்டி வைக்கப்படுவார். பின்னர் ஆடு அவரின் உப்பு நிறைந்த பாதத்தை நக்கும், மேலும் ஆட்டின் நாக்கு மெதுவாக ஆனால் சீராக பாதத்தில் உள்ள தோலை கொஞ்சம் கொஞ்சமாக உரிக்கும்.
உள்ளங்கால்களை ஆடு நக்குவது ஆரம்பத்தில் மிகவும் கூச்ச உணர்வுடன் இருக்கும் அதே வேளையில், தோல் தேய்ந்து போனவுடன் அது மிகவும் வேதனையானதாக மாறும், மேலும் உப்பின் சுவையால் ஆடு நக்குவதை ஒருபோதும் நிறுத்தாது. உள்ளங்கால்களில் ஏற்படும் காயங்கள் பாதிக்கப்பட்டால், இத்தகைய சித்திரவதை மரணத்தை கூட விளைவிக்கும் மற்றும் ஒரு பண்ணை விலங்கு திறந்த காயங்களை நக்குவது அவர்களுக்கு தொற்று ஏற்பட எளிதான வழியாக தெரிகிறது.
Goat's Tongue சித்திரவதையை கண்டிக்கும் குறிப்புகள் வரலாற்றில் உள்ளது மற்றும் இந்த தண்டனை முறைகள் பண்டைய ரோம் நாட்களுக்கு முந்தையதாக கருதப்படுகிறது. மருத்துவ வழிமுறைகள் அவ்வளவு சிறப்பாக இல்லாத காலகட்டத்தில் இந்த காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தைக் கொடுக்கும். அதுமட்டுமின்றி கால்களின் தோலை நக்கினால், நீண்ட காலத்திற்கு நடக்கவும் முடியாது. ஆட்டின் நாக்கால் தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும் தோல்கள் இல்லாத கால்கள் நடப்பதை சிரமமாக்கும். இந்த கொடுமையான தண்டனை முறை இப்போது இல்லாததை நினைத்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.



Click it and Unblock the Notifications