Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
விநாயகர் சதுர்த்தியின் முக்கிய சடங்குகள், விரத முறைகள், செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைகள்!
Ganesh Chaturthi 2023: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் விரும்பி கொண்டாடப்படும் ஒரு பூஜையாக விநாயகர் சதுர்த்தி உள்ளது. ஞானம், வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தின் நாயகனாக திகழ்பவர் விநாயகர். அதனால் தான் அவரை எப்பொழுதும் முழுமுதற் கடவுள் என வர்ணிக்கிறோம். எந்த கோயிலுக்கு சென்றாலும் விநாயகரை வழிபட்ட பிறகு தான் மற்ற தெய்வங்களை வழிபடுவது உண்டு.
விநாயகர் சதுர்த்தி திருவிழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழா ஆகும். இந்த திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள மகராஷ்டிரா மாநிலத்தில் இந்த திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து விரதம் இருந்து வழிபடுவார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு வரும் விநாயகர் சதுர்த்தியை எப்படி உங்கள் வீடுகளில் கொண்டாடலாம் மற்றும் பூஜையின் போது செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன வாங்க தெரிஞ்சுக்கலாம்.
விநாயகர் சதுர்த்தி முக்கிய சடங்குகள்:
* பிராண பிரதிஷ்டை: இது விநாயகர் சிலைக்கு உயிரூட்டும் ஒரு வகை சடங்காகும். இந்த சடங்கின் போது மந்திரங்களை உச்சரித்து பல்வேறு பூசாரி கொண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.
* ஷோடஷோபச்சாரா: இது 16 படி கொண்ட சடங்கு முறையாகும். இந்த சடங்கின் போது விநாயகர் சிலைக்கு பூக்கள், பழங்கள், இனிப்புகள் மற்றும் மோதகங்கள் (இனிப்பு) போன்ற பொருட்கள் பிரசாதமாக படைக்கப்படுகிறது.
* உத்திரப் பூஜை: விநாயகப் பெருமானுக்கு விடை கொடுக்கும் கடைசி நாளில் இந்த உத்திர பூஜை செய்யப்படுகிறது. இந்த சடங்கின் போது விநாயகர் சிலைக்கு பிரார்த்தனைகள் மற்றும் ஆராத்திகள் காட்டப்படுகிறது .
* கணபதி விசார்ஜன்: விநாயகர் சிலையை ஆற்றிலோ அல்லது ஏரியிலோ கரைக்கும் நிகழ்வு தான் இந்த கணபதி விசார்ஜன் ஆகும். அதாவது விநாயகப் பெருமான் கைலாச மலையில் உள்ள தன் இருப்பிடத்திற்கு திரும்பியதை குறிக்கும் வகையில் இது செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி சடங்குகள் செய்யும் போது செய்ய வேண்டிய விஷயங்கள்:
* விநாயகர் சதுர்த்தி அன்று தெருக்களில் எங்கு பார்த்தாலும் பல வண்ணங்களில் பெரிய பெரிய விநாயகர் சிலையை செய்து வழிபடுவர். இந்த நன்னாளில் விநாயகர் சதுர்த்தியை இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டாடுவதும் அவசியம். விநாயகர் சிலையை நீரில் கரைக்கும் போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் இருக்க களிமண் மற்றும் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட விநாயகரை செய்து வழிபடுவது நல்லது.
* நீங்கள் விநாயகர் சிலையை வைப்பதற்கு முன்பு மேடையை நன்றாக சுத்தம் செய்து தூய்மையாகவும், நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
* திருவிழா முழுவதும் நேர்மறை எண்ணங்களுடன் வலம் வருவது முக்கியம். விநாயகரை பூஜிக்க தேவையான மலர்கள், தூபங்கள், பழங்கள், தீபங்கள் மற்றும் இனிப்புகள் போன்றவற்றை வழங்கி பிரார்த்தனையை மனதார வழிபடுங்கள். அதே மாதிரி விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான மோதகங்களை தயாரித்து வழிபடுங்கள்.
விநாயகர் சதுர்த்தி சடங்குகள் செய்யும் போது செய்யக் கூடாதவை:
* பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் அல்லது மக்காத பொருட்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை கடலில் கலக்க வேண்டாம்.
* விநாயகர் சிலைகளை அலங்கரிக்க சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வண்ணங்களை மட்டுமே பயன்படுத்துங்கள். இயற்கையான சூழலுக்கு ஏற்ற நிறங்களை மட்டுமே தேர்ந்தெடுங்கள்.
* திருவிழாவின் போது அதிகப்படியான தண்ணீர், மின்சாரம் மற்றும் உணவை வீணாக்காதீர்கள்
* பண்டிகையின் போது சண்டையில் ஈடுபடுவது, மது அருந்துதல், அசைவ உணவு போன்றவை கூடாது. .
விநாயகர் சதுர்த்தி விரத முறைகள்:
1. நீரற்ற உண்ணாவிரதம்: இது ஒரு கடுமையான விரத முறையாகும். இந்த விரதம் இருக்க விரும்புபவர்கள் நாள் முழுவதும் தண்ணீர் மற்றும் உணவு இரண்டையும் தவிர்க்க வேண்டும்.
2. பழங்கள் உண்ணாவிரதம்: இந்த வகை விரத முறையில் நீங்கள் பழங்கள், நட்ஸ் வகைகள், பால் மற்றும் தயிர் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
3. சாத்விக விரதம்: மரவள்ளிக் கிழங்கு, பழங்கள், காய்கறிகள் மற்றும் நட்ஸ் வகைகள் போன்ற எளிதில் சீரணிக்ககூடிய உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த வகையான விரதம் இருந்தாலும்,
- விநாயகர் சதுர்த்தியின் போது அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
- வெங்காயம், பூண்டு போன்ற உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
- உண்ணாவிரத உணவுகளை தயாரிக்கும் போது, உணவை எளிமையாகவும், எளிதில் ஜீரணிக்கக்கூடியதாகவும் குறைந்தபட்ச மசாலா மற்றும் எண்ணெய் கொண்டு தயாரியுங்கள்.
- வழக்கமான அயோடின் உப்பு விரதத்தின் போது தவிர்க்கப்படுகிறது. அதற்குப் பதிலாக கல் உப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- நீங்கள் நீரற்ற விரதம் இருக்க நினைத்தால் விரதத்திற்கு முன்பும் மற்றும் பின்பும் உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். உண்ணாவிரதத்தை தொடங்கும் முன்பு காலையில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
- விரதத்தை விடும் நேரத்தில் பழங்கள், பால் போன்ற லேசான உணவை முதலில் எடுத்துக் கொண்டு பிறகு படிப்படியாக முழு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். கனமான உணவை எடுத்துக் கொள்வதை தவிருங்கள்.
- விரதம் இருக்கும் முன்பு உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரின் உதவியை நாடுவது அவசியம். மருத்துவரின் பரிந்துரை பேரில் விரதம் இருப்பது குறித்து ஆலோசிக்கலாம்.



Click it and Unblock the Notifications