Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
கஜகேசரி ராஜயோகத்தால் நாளை முதல் அடுத்த 2 நாட்கள் இந்த ராசிகளுக்கு பண வரவு அதிகமா இருக்கும்...
Gajkesari Rajyoga On 24 November 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் கிரகங்கள் ராசியை மற்றும் போது, சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்களும் உருவாகும். இந்த யோகங்களும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 நவம்பர் 24 ஆம் தேதி மாலை 04 மணிக்கு சந்திரன் மேஷ ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியில் நவம்பர் 26 ஆம் தேதி வரை இருந்து பின் ரிஷப ராசிக்குள் நுழைவார்.

ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் சந்திரன் மற்றும் குருவின் சேர்க்கையால் சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நிறைய செல்வத்தைப் பெறவுள்ளார்கள். அதோடு முக்கியமான வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி ராஜயோகமானது முதல் வீட்டில் உருவாவதால், இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் இந்த யோக காலத்தில் வெற்றிகரமாக முடிவடையும்.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.
சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் ஆசைகள் நிறைவேற வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களும் இக்காலத்தில் நல்ல பண வரவைப் பெறக்கூடும்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அகிரிக்கும்.
நீண்ட நாட்களாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தால், இந்த யோக காலத்தில் அது நீங்கி, நிறைய பணத்தை சேமிக்க முடியும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலைகளில் வெற்றி பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications