Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
Full Moon December 2025: பௌர்ணமி நாளில் இந்த பரிகாரங்களை செய்யுங்க.. பண கஷ்டங்கள் தீர்ந்து, செல்வம் பெருகும்..
Full Moon December 2025: ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வரும். அப்படி வரும் பௌர்ணமி பல்வேறு மாய நன்மைகளுடன் தொடர்புடையதாக இருப்பதால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆன்மீகத்தில் பௌர்ணமி மிகவும் முக்கியமான நாள். இந்நாளில் வானில் நிலவு முழுமையாக தெரிந்து பிரகாசிப்பதால் நேர்மறை ஆற்றலுடன் தெய்வீக சக்தியும் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தான் இந்நாளில் சிறப்பான தெய்வ வழிபாடுகள் நடப்படுகின்றன. அதுவும் இந்த பௌர்ணமி நாளில் சிவபெருமான், முருகன், லட்சுமி தேவி, விஷ்ணு பகவான் போன்ற தெய்வங்களுக்கு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகளும் நடத்தப்படும்.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் கடைசி பௌர்ணமி டிசம்பர் 04 ஆம் தேதி வருகிறது. இந்த பௌர்ணமி நாளில் தெய்வீக ஆற்றல் நிரம்பியிருப்பதால், இந்த சுப நாளில் ஒருசில பரிகாரங்களை செய்வதன் மூலம் வாழ்வில் செல்வம், செழிப்பு, அன்பு போன்றவை வருவதோடு, ஆசைகளும் நிறைவேறுவதாக கூறப்படுகிறது. நீங்களும் உங்கள் வாழ்வில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண நினைக்கிறீர்களா? அப்படியானால் பௌர்ணமி நாளில் இந்த பரிகாரங்களை தவறாமல் செய்து வாருங்கள்.
1. லட்சுமி தேவிக்கு பாயாசத்தை படையுங்கள்
லட்சுமி தேவி செல்வத்தின் அதிபதி. எனவே ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் லட்சுமி தேவிக்கு அரிசி பருப்பு பாயாசத்தை படைத்து வழிபடுவது, வாழ்வில் செல்வத்தையும், செழிப்பையும் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஆகவே உங்கள் வீட்டில் செல்வம் பெருக வேண்டுமானால் பௌர்ணமி நாளில் லட்சுமி தேவிக்கு பாயாசத்தை செய்து படைத்து வழிபடுங்கள்.
2. பிரியாணி இலை பரிகாரம்
பௌர்ணமி நாளில் சில நாணயங்கள், பச்சை நிற மெழுகுவர்த்தி மற்றும் பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். பின் மெழுகுவர்த்தியை ஏற்றி, பிரியாணி இலையில் "நான் ஒரு பண காந்தம்" என்று எழுதுங்கள். பின் அந்த பிரியாணி இலையை ஒரு கண்ணாடி பௌல் அல்லது தட்டில் வைத்து, அதன் மேல் நாணயங்களை வையுங்கள். பின்பு அதை பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் இரவு முழுவதும் வையுங்கள். அதன் பின் மறுநாள் காலையில் அந்த நாணயங்களை பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த நாணயங்களை எதற்காகவும் செலவழிக்காதீர்கள். இப்படி ஒவ்வொரு பௌர்ணமியும் செய்யுங்கள். அப்படி செய்யும் போது முந்தைய பௌர்ணமியில் பயன்படுத்திய பிரியாணி இலையை எரித்துவிடுங்கள்.
3. உறுதிமொழி எடுங்கள்
பௌர்ணமி நாளில் உங்களின் நிதி இலக்குகளை கற்பனை செய்து,, சிறிது நேரம் அதைப் பற்றி சிந்தித்து, நீங்கள் வெற்றி பெற்று செழிப்பான வாழ்க்கையை வாழ்வது போன்று கற்பனை செய்து பாருங்கள். மேலும் மனதில் செல்வம் மற்றும் செழிப்பு தொடர்பான நேர்மறை உறுதிமொழிகளை மீண்டும் மீண்டும் மனதில் சொல்லுங்கள்.
உதாரணமாக, நான் ஒரு பண காந்தம். எனக்கு பணம் எளிதில் சிரமமின்றி கிடைக்கும். அதை நான் பெற தயாராக உள்ளேன். நிதி வெற்றியைத் தரும் வாய்ப்புக்கள் எனக்கு நிறைய கிடைக்கும். எனக்கு வருமானம் தொடர்ந்து அதிகரிக்கும். நான் நிதி ரீதியாக வலுவடைவேன். என் வாழ்க்கை செழிப்பாக மாறும். பண பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பணத்தைப் பற்றிய அனைத்து எதிர்மறை நம்பிக்கைகளையும் நான் விட்டுவிட்டு நேர்மறையான மனநிலையைத் தழுவுவேன். நான் செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் 10 மடங்கு பெருகி என்னிடம் வரும் என்று மனதில் கூறி உறுதிமொழி எடுங்கள்.
பிற பரிகாரங்கள்
* வாழ்க்கையில் உள்ள அனைத்துவிதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபட பௌர்ணமி நாளில் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்யுங்கள்.
* பௌர்ணமி நாளில் சிவலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்யுங்கள். இதனால் மன அமைதி கிடைக்கும் மற்றும் சந்திரனின் பரிபூர்ண ஆசியும் கிடைக்கும். இப்படி பௌர்ணமி நாளில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் செய்யுங்கள்.
* பௌர்ணமி நாளில் ஒரு பௌல் நீரை நிலா வெளிச்சத்தில் இரவு முழுவதும் வைத்து, அந்நீரை தினமும் தலையில் தெளித்துவிடுங்கள். இதனால் மனம் ரிலாக்ஸாகி, நேர்மறை ஆற்றல் நிரம்பியிருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











